தமிழகத்தில் ஒரே நாளில் 1575 பேருக்கு கொரோனா.. 20 பேர் மரணம்
சென்னை : தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 1575 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் கொரோனா பாதிப்பில் இருந்து 161 பேர் ஒரே நாளில் மீண்டனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. மே இரண்டாவது வாரத்தில் 36 ஆயிரம் என்கிற அளவில் தினசரி பாதிப்பு இருந்தது. ஆனால் தற்போது 1500 ஆக குறைந்துள்ளது. எல்லா மாவட்டங்களிலுமே பாதிப்பு குறைந்துவிட்டது. எனினும் கேரளாவை ஒட்டி உள்ள கோவை, கன்னியாகுமரி, தேனி, நீலகிரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.
தமிழகத்தில் இனறைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் செப்டம்பர் 4ம் தேதியான இன்று கொரோனா தொற்றால் 1575 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவரகளின் எண்ணிக்கை 26,21,086 ஆக உயர்ந்துள்ளது.

எவ்வளவு
அதேநேரம் கொரோனா பாதிப்பில் இருந்து 1,610 பேர் ஒரே நாளில் மீண்டனர். இதனால் ஒட்டுமொத்தமாக கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 25,69,771 ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழப்பு எவ்வளவு
தமிழகத்தில் கொரோனா காரணமாக ஒரே நாளில் 20பேர் மரணம் அடைந்துள்ளனர்.இதனால் இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 35000 ஆக உயர்ந்துள்ளது.

சரிந்தது
தமிழகத்தில் தற்போதைய நிலையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிரடியாக குறைந்து 16 ஆயிரத்திற்கு சரிந்துள்ளது . தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணக்கை 16,370ல் இருந்து 16,315 ஆக சரிந்தது

எவ்வளவு
தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 244 பேரும், சென்னையில் 167 பேரும், ஈரோட்டில் 109 பேரும், தஞ்சாவூரில் 92 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளது. சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் கோவையில் மட்டும் அதிகமாக 2180 பேர் உள்ளனர். அதை தொடர்ந்து சென்னை, ஈரோடு, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கு மேல் உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications