உங்க மாமியார் ஊர் அது! பஸ் விடுவீங்களா மாட்டிங்களா? அமைச்சர் சிவசங்கரை கோர்த்துவிட்ட ஜவாஹிருல்லா!
சென்னை: தமிழக சட்டசபையில் அமைச்சர் சிவசங்கரிடம் பேருந்து சேவை தொடர்பான கேள்வியை எழுப்பிய ஜவாஹிருல்லா அதில் அவரது மாமியார் ஊர் குறித்தும் குறிப்பிட்டு சபையை கலகலப்பாக்கினார்.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறவுள்ளன.

முன்னதாக கேள்வி நேரத்தின் போது பேசிய பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மமக தலைவருமான ஜவாஹிருல்லா, அரியலூரை பொறுத்தவரை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரின் சொந்த மாவட்டம் என்றும் அதேபோல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அவரது இல்லத்தரசியின் சொந்த ஊர் எனவும் குறிப்பிட்டார்.
அதாவது அமைச்சர் சிவசங்கரின் மாமியார் ஊரான பாபநாசத்துக்கும் அரியலூருக்கும் இடையே நேரடி போக்குவரத்து சேவையை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஜவாஹிருல்லா முன் வைத்தார்.
சிரித்துக் கொண்டே பதிலளிக்க எழுந்த அமைச்சர் சிவசங்கர், எப்படி கேள்வி கேட்டால் எப்படி பதிலை வாங்க முடியும் என்பதை பேராசிரியர் என்பதால் ஜவாஹிருல்லா நன்கு அறிந்து வைத்திருக்கிறார் என்றார்.
தனது மனைவியின் சொந்த ஊர் என்று குறிப்பிட்டு தன்னை கோர்த்துவிட்டு விட்டீர்கள் என சிரித்த அமைச்சர் சிவசங்கர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மனது வைத்தால் பாபநாசம் -அரியலூர் இடையே நேரடி போக்குவரத்து சேவை தொடங்கப்படும் என்றார்.

அதாவது அரியலூர் மாவட்டத்தை இணைக்கும் வகையில் கதவணைத் திட்டத்தில் பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கனவே தாம் அமைச்சர் துரைமுருகனிடம் வைத்திருப்பதாக கூறிய அமைச்சர் சிவசங்கர், அது நிறைவேற்றப்பட்டால் அரியலூர் -பாபநாசம் இடையே நேரடி போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதனிடையே ஜவாஹிருல்லா அமைச்சரின் மாமியார் ஊர் என்று குறிப்பிட்டு தனது பாபநாசம் தொகுதிக்கு நேரடி பஸ் சேவை கேட்டதை சட்டமன்ற உறுப்பினர்கள் வேல்முருகனும், ஈஸ்வரனும் கலாய்த்தார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications