பிஞ்சு வயசுன்னு கூட பார்க்கல.. 48 வயசுல மகனுடன் சேர்ந்து அசிங்கம் செய்த பிரபலம்.. என்னாச்சு பாருங்க
சென்னை: இந்தியாவில் பாலியல் அக்கிரமங்கள் அதிகரித்தபடியே உள்ளது. குழந்தைகள் முதல் கிழவிகள் வரை காமுகர்கள் விட்டு வைப்பதில்லை.. பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு என்பதே கேள்விக்குறியாகிவிட்டது.. வடமாநிலங்களில் இந்த கொடுமை சற்று அதிகம் என்றே சொல்லலாம். இன்று 15 வயது சிறுமி விவகாரத்தில் மேற்கு வங்க போலீசார் எடுத்த அதிரடியை பாருங்கள்,
மேற்கு வங்கத்தில், பச்சிம் வர்தமான் மாவட்டத்தின் துர்காபூரில் தனியார் மருத்துவ கல்லுாரி இயங்கி வருகிறது. இங்கு ஒடிஷாவின் ஜல்லேஸ்வரைச் சேர்ந்த மாணவி, இரண்டாம் ஆண்டு மருத்துவப் படிப்பு பயின்று வருகிறார். இவர், தன்னுடைய ஆண் நண்பருடன் நேற்று முன்தினம் இரவு உணவருந்தி விட்டு, ஹாஸ்டலுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

மருத்துவ மாணவி
அப்போது அவர்களை பின்தொடர்ந்து வந்த 3 பேர், அந்த மாணவியின், செல்போனை பறித்ததுடன், 3,000 ரூபாய் தந்தால் போனை திரும்ப தருவதாக சொல்லி உள்ளனர்..
இதனால் பதறிப்போன மாணவியின் நண்பர், பணத்தை எடுத்து வர ஓடினார்.. ஆனால் அதற்குள் அந்த பெண்ணை மருத்துவ கல்லுாரி அருகே உள்ள வனப்பகுதிக்கு மாணவியை இழுத்து சென்று, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து தப்பியோடினர். தற்போது அந்த பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.. தப்பியோடிய 3 பேரையும் இன்று போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இதே மேற்கு வங்கத்தில் மற்றொரு பாலியல் கொடுமை சம்பவத்தில் தந்தை, மகனை போலீசார் கைது செய்து அதிரடியை காட்டி உள்ளனர்.
பிரபல யூடியூபர்
மேற்கு மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் ஹரோவை சேர்ந்தவர் 48 வயது அரபிந்து.. இவர் 2 யூடியூப் சேனல்களை நடத்தி வருகிறார்.. இதில் ஒரு சேனலை, தான் எடுக்கும் வீடியோக்கள் , ஷாட் பிலிம்களுக்கும், இன்னொரு யூடியூப் சேனலை இந்தி மற்றும் பெங்காலி பாடல்களுக்கு நடனமாடும் சேனலாகவும் பயன்படுத்தி வந்துள்ளார். இதனால் இவரது யூடியூப் சேனலுக்கு 4.5 பில்லியன் பாலோயர்ஸ்கள் இருக்கிறார்களாம்.
சில மாதங்களுக்கு முன்பு அரபிந்தும், அவரது மகனும் சேர்ந்து 9ம் வகுப்பு மாணவியிடம் தங்கள் அசிங்கத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள்.. ரீல்ஸ் மோகம் தலைவிரித்தாடும் நிலையில், அந்த பெண்ணுக்கும் ரீல்ஸ் ஆசையை தூண்டிவிட்டுள்ளனர்.
தந்தை - மகன் அட்டகாசம்
உடனே அந்த பெண்ணும், தந்தை, மகன் இருவரையுமே முழுமையாக நம்பியிருக்கிறாள்.. அவர்களுடன் ரீல்ஸ் ஷூட்டிங்குக்காக பல்வேறு இடங்களுக்குச் சென்றிருக்கிறார்.. அந்த நேரத்தில் அந்த பெண் உடை மாற்றும்போது, ரகசியமாக அதை படம் பிடித்துள்ளனர்.. இதற்கு பிறகு தொடர்ச்சியான பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியிருக்கிறார்கள்.. இறுதியில் இதனை வெளியில் சொல்லக்கூடாது என்றும் அப்படி சொன்னால் சோஷியல் மீடியாவில் பதிவிட்டு விடுவதாகவும் சொல்லியே மிரட்டி மீண்டும் மீண்டும் சீரழித்துள்ளனர்,
ஒருகட்டத்தில் அவரது மகன் அப்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அவளுக்கு குங்குமம் வைத்தானாம்.. அதற்கு பிறகுதான் பலாத்காரம் செய்தானாம்..
இதில் கொடுமை என்னவென்றால், அரபிந்துவை சிறுமியின் குடும்பத்துக்கு ஏற்கனவே தெரியுமாம். அதுமட்டுமல்ல, பாதிக்கப்பட்ட சிறுமியின் அப்பா கொல்கத்தாவில் பணியாற்றும் ஒரு போலீஸ்காரர் ஆவார்.. ஆனால் தனக்கு வேண்டப்பட்ட குடும்பம் என்றுகூட நினைக்காமல், அப்பெண்ணின் அப்பா ஒரு போலீஸ்காரர் என்றுகூட நினைக்காமல் இந்த அக்கிரமத்தை சிறுமிக்கு செய்திருக்கிறார்கள்..
சிறுமி வாக்குமூலம்
சிறுமியே இந்த விஷயத்தை பெற்றோரிடம் ரகசியமாக சொல்லும் வரை அவர்களுக்கு எதுவுமே தெரியாதாம். பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை போலீசார் பதிவு செய்தனர்.. உடனேயே தற்போது ஹரோவா போலீஸில் தந்தை, மகன் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது.. அரபிந்துவிடமிருந்து செல்போன்கள், கேமராக்கள் மற்றும் பிற சாதனங்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன
பசிர்ஹாட் துணைப்பிரிவு நீதிமன்றம் அரபிந்துவை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்துள்ளது.. அவரது மகனை சிறார் குற்றவாளிகள் இல்லத்திற்கு அனுப்பியிருக்கிறது, ஆனால், தந்தைக்கும், மகனுக்கும் கடுமையான தண்டனையை வழங்க வேண்டும் என்று சிறுமியின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications