மாத சம்பளக்காரர்களுக்கு செக்?.. வருமான வரி கட்டிட்டீங்களா.. "இவங்க" மாட்ட போறாங்க.. மத்திய அரசு மாஸ்
சென்னை: வருமான வரித்துறை புது அதிரடியை கொண்டுவந்துள்ளது.. இதன்மூலம் கணக்கில் வராத கருப்பு பணத்தை கண்டறிய முடியும் என்றும் நம்பிக்கை எழுந்துள்ளது.
வருமான வரி விதிகளின்படி, வரிக்கு உட்பட்டவர்கள் வருடந்தோறும் வருமான வரி மற்றும் அதன் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பது அடிப்படை விதியாகும். ஆனாலும் சிலர் வரி ஏய்ப்பு செய்துவிடுகிறார்கள்..

அதனால்தான், வருமான வரி ஏய்ப்பு பற்றி தகவல் அளிப்போருக்கு பரிசு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது.. அதாவது, கணக்கில் காட்டப்படாத வருமானம், சொத்துகள் மற்றும் வரி ஏய்ப்பு விவரங்கள் பற்றி தகவல் அளிப்போருக்கு, அல்லது பினாமி சொத்துகள் பற்றி தகவல் அளிப்போருக்கு ரூ.1 கோடி வரை பரிசு வழங்கப்படுகிறது.
வருமானவரி: அதேபோல, வருமான வரி ஏய்ப்பு செய்யும் மாத சம்பளம் பெறுபவர்களை கண்டறிய, புதிய சாப்ட்வேரையும் மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது.. மாத சம்பளம் பெறுபவர்கள் பலரும், வீட்டு வாடகைக்கு போலி ரசீதுகளை சமர்பித்து, வருமான வரி விலக்கு பெறுவது பரவலாக நடக்கிறது. இதை கண்டறியவே, புதிய சாப்ட்வேர் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதனால், மாத சம்பளதாரர்கள் போலி ரசீதை கொடுத்து தப்பிக்க முடியாது.
இப்போது இன்னொரு அதிரடியையும் கையில் எடுக்கப்பட்டுள்ளது.. அதன்படி, வரவு செலவு கணக்கை, "இ - வெரிபிகேஷன்" செய்யும், புதிய சாப்ட்வேர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தவறான கணக்கு: வரி மற்றும் வருமானம், செலவுக்கான கணக்குகள் குறித்த சரிபார்ப்பு பணிகள், கடந்த காலங்களில் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்பதால், தவறான கணக்கு காட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலைமை உள்ளது. அதனால்தான், "இ - வெரிபிகேஷன்" என்ற 'சாப்ட்வேர்' ஒன்று தயாரிக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஆன்லைன் சரிபார்ப்பு சாப்ட்வேரை பயன்படுத்தி, 2021-22ம் ஆண்டில் பரீட்சார்த்த முறையில், தனிநபர் மற்றும் நிறுவனங்களின் வரவு - செலவு கணக்குகள் சரிபார்க்கப்பட்டதில், ஆயிரக்கணக்கான வருமான வரி கணக்கு தாக்கலில் தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம்.
ஆன்லைன் சரிபார்ப்பு: எனவே, 2022-23ம் ஆண்டுக்கு தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வகை கணக்குகளும், இ - வெரிபிகேஷன் என்ற ஆன்லைன் வழியில் சரிபார்க்கப்படுகின்றன. அதன்படி, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தாக்கல் செய்யும், ஆண்டு வரவு செலவு கணக்குடன், தனிநபர் வங்கி பரிவர்த்தனை குறித்த ஆண்டு அறிக்கையும் ஒப்பீடு செய்து பார்க்கப்படும்..
அப்படி ஒப்பீடு செய்யும்போது, தவறான விபரங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தால், இரு தரப்பிடமும் கூடுதல் விபரம் கேட்கப்படும். அந்த விளக்கம் திருப்தியாக இருந்தால், வருமான வரித்துறை ஏற்றுக்கொள்ளும்.. ஒருவேளை, கணக்கு மறைப்பு இருந்தால், அவர்கள் மீது குற்ற விசாரணை மேற்கொள்ள போகிறதாம். இதற்காகவே, விசாரணை பிரிவு ஒன்று புதிதாக உருவாக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெருத்த நம்பிக்கை: வருமான வரித்துறையின் இந்த அதிரடி பலரது கவனத்தையும் திருப்பி வருகிறது.. அத்துடன், கணக்கில் வராத கருப்பு பணம், எளிதில் கண்டறியப்படும் என்றும் நம்பப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications