வருமான வரி விலக்கு.. வெள்ள நிவாரண தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறதா? தமிழக அரசு அடுத்த முடிவு?
சென்னை: பொங்கல் பரிசு, வெள்ள நிவாரணம் போன்ற பலன்கள் சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்குகள் மூலம் வழங்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. என்ன காரணம்?
கடந்த 2021ம் ஆண்டு, தமிழக அரசு சுற்றறிக்கை ஒன்றை பிறப்பித்திருந்தது. அதன்படி, கூட்டுறவு சங்கங்களில் வட்டி வருவாய் 40 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமானால், வருமான வரிச்சட்டத்தின் 194A, 194N ஆகிய பிரிவுகளின்கீழ் வருமானவரி பிடித்தம் செய்ய வேண்டுமென மாநில அரசு தலைமை கூட்டுறவு வங்கி மூலம், பல்வேறு கூட்டுறவு சங்கங்களுக்கு இந்த சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இந்த சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று ஈரோடு மாவட்டம் சென்னிமலை சிரகிரி முருகன் தொடக்க நெசவாளர் கூட்டுறவு சங்கம் உள்ளிட்ட 5 சங்கங்கள் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தன.
விசாரணை: இந்த வழக்குகள், நேற்றைய தினம் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது சங்கங்கள் தரப்பில் வாதிடும்போது, "அரசின் பொங்கல் பரிசு, வெள்ள நிவாரணம் போன்ற பலன்களை உறுப்பினர்களுக்கு வழங்கும் பணியை சங்கங்கள் மேற்கொள்கின்றன. அதனால் உறுப்பினர்களுக்கு வழங்குவதற்காக எடுக்கப்படும் தொகைக்கு வருமான வரி செலுத்த முடியாது, வருமானவரி விலக்கு வழங்கப்பட்டது" என்று வாதிடப்பட்டது.
உடனே இதற்கு வருமானவரித்துறை தரப்பு ஆட்சேபம் தெரிவித்தது.. "மனுதாரர் சங்கங்களுக்கு எந்த விலக்கும் வழங்கப்படவில்லை, தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்குதான் வரிவிலக்கு பொருந்தும்.. வங்கிகளிலிருந்து எடுக்கும் பணத்தின் உச்சவரம்பை, அப்போதைய முதல்வர் மற்றும் தலைமை செயலாளரின் கோரிக்கையை ஏற்று, ஒரு கோடி ரூபாயிலிருந்து 3 கோடியாக அதிகரித்து, மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவிப்பானை வெளியிடப்பட்டுள்ளது" என்று வாதிடப்பட்டது.
விசாரணை: இந்த 2 தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தன்னுடைய உத்தரவில் சொன்னதாவது: "முதலீடுகளை பெற்று வட்டி வழங்கக்கூடிய மனுதாரர் சங்கங்கள் ரிசர்வ் வங்கி விதிகளின்படி, வங்கி நடவடிக்கைதான் என்பதால் வரி பிடித்தம் செய்யலாம். தற்போதைய நிலையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்து, அதில் அதிகமாக பிடித்தம் செய்திருந்தால் திரும்ப வழங்க கோரலாம்.
அரசின் கடன் தள்ளுபடி அல்லது வட்டி தள்ளுபடி போன்ற சலுகைகள் போலி நபர்களுக்கு சென்றடைகின்றன.. வருமான வரி சட்டத்தின் பிரிவு 194N என்பது பண விநியோகத்தில் முறைகேடுகளை தடுப்பதற்கும், பணமில்லாத பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்குமான வழிகளில் ஒன்றாகவும் உள்ளது.
வங்கி கணக்கு: வங்கி கணக்கை தொடங்குது மிகவும் எளிதான செயலாக உள்ளதால், பொங்கல் பரிசு, வெள்ள நிவாரணம், கொரோனா நிவாரணம் போன்ற நிவாரணங்களை வங்கி கணக்கிலேயே செலுத்தலாம். இதனால், பயனாளிகள் தாங்கள் சார்ந்துள்ள சங்கங்களை அணுக வேண்டிய அவசியமில்லை.. நேரமும் மிச்சமாகும்.. சங்கத்தின் பணிச்சுமையும் குறையும்.

எத்தனையோ விதமான மோசடிகள் நடக்கின்றன.. இவைகளை தடுக்க தமிழக அரசு திட்டமிட்டாலும், ஏமாற்றுபவர்கள் புது புது வழிகளை கண்டுபிடித்தபடியே இருக்கிறார்கள்.. அதனால்தான், அரசு வழங்கும் உதவி, நேரடியாக பயனாளருக்கு சென்றடையவேண்டும்.. இல்லாவிட்டால், ஏழை விவசாயிகள், நெசவாளர்களின் பணம் மோசடி செய்யப்பட்டுவிடும்..
முறைகேடுகள்: எனவே, பொங்கல் பரிசு, வெள்ள நிவாரணம் போன்ற பலன்கள் சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்குகள் மூலம் வழங்கப்பட்டால், முறைகேடுகள் வெகுவாக தடுக்கப்படும்" என்று கூறிய நீதிபதி இந்த வழக்குகளை முடித்துவைத்தார்.
பணப்பலன்களை நேரடியாகவே வங்கி கணக்கில் செலுத்தும்படி, தமிழக அரசுக்கு ஹைகோர்ட் யோசனை தெரிவித்துள்ளது, மிகுந்த கவனத்தை பெற்று வருகிறது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications