சுகந்திரத் தினம்.. தமிழகத்தை சேர்ந்த 8 காவல் அதிகாரிகளுக்கு மத்திய அரசு விருது.. யார் யார்?
சென்னை: சுகந்திரத் தினத்தையொட்டி தமிழகத்தை சேர்ந்த 8 காவல் அதிகாரிகளுக்கு மெச்சத்தக்க பணிக்காக மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் விருது வழங்க உள்ளது.
நாடு முழுவதும் மொத்தம் 152 காவல் அதிகாரிகளுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து இடம் பெற்றவர்கள் யார் யார் என்பதை இப்போது பார்ப்போம்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் காவல்துறையில், சிஆர்பிஎப், எல்லையோர காவல்படை, அஸ்ஸாம் ரைபில்ஸ், மத்திய தொழிற்பாதுகாப்புப்படை, தேசிய பாதுகாப்புப் பிரிவு(என்.எஸ்.ஜி). ஐடிபிபி, எஸ்.எஸ்.பி, உள்துறை, சிபிஐ, எஸ்பிஜி, தேசிய குற்ற ஆவணக் காப்பகம், என்.ஐ.ஏ, ரயில்வே உள்ளிட்ட காவல் பணி, பாதுகாப்புப் பணியில் பணியாற்றுவோருக்கு குடியரசுத் தலைவர் விருது வழங்கப்படும்.
குற்ற வழக்குகளை சிறப்பாக புலனாய்வு செய்யும் காவலர்களுக்கு 2018ம் ஆண்டு முதல் மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் இந்த விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த முறை 152 காவல் அதிகாரிகளை 75வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு கௌரவிக்கப்போகிறது.
இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 8 காவல் அதிகாரிகளின் விவரத்தை இப்போது பார்ப்போம் :
1. சரவணன்
2.அன்பரசி
3.கவிதா
4. ஜெயவேல்
5.கலைச்செல்வி
6.மணிவண்ணன்
7.சிதம்பரம் முருகேசன்
8.கண்மணி, இந்த 8 பேரும் காவல்துறை ஆய்வாளர்கள் ஆவர்.












Click it and Unblock the Notifications