இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிரடியாக குறைந்தது - குணமடைந்தவர்கள் எண்ணிக்கை உயர்வு
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிரடியாக குறைந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
சென்னை: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 34,113 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. ஒரே நாளில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 91,930 ஆக உள்ளது.
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மூன்றாம் அலையில் மூன்று லட்சம் பேருக்கு மேல் பதிவானது. படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது கொரோனா பாதிப்பு. நேற்று முன்தினம் 50,407 பேர், நேற்று 44,877 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று தொற்று எண்ணிக்கை 35 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 34,113 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதேபோல் ஒரேநாளில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 91,930 ஆக உள்ளது. இதன் மூலம் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 4,16,77,641 ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன் கடந்த 24மணிநேரத்தில் 346 பேர் கொரோனாவால் பலியான நிலையில், இதுவரை கொரோனாவால் 5,09,011பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை4,78,882 ஆக குறைந்துள்ளது. . தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் 3.19% ஆக உள்ள நிலையில் இதுவரை 172.95கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு இன்று முதல் கொரொனா கட்டுப்பாடுகள் தளர்வு அளித்துள்ளது. அதில், 7 நாட்கள் தனிமைப்படுத்துதல் நீக்கப்பட்டுள்ளது. அதனால், 14 நாட்கள் தாங்களாகவே உடல் நிலையைக் கண்காணிக்க வேண்டும் எனவும், 72 மணி நேரத்திற்கு முன்பாக கொரொனா நெகட்டிவ் அல்லது 2 டோஸ் தடுப்பூசி சான்றிதழ் காண்பித்தால் போதும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications