சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாட்டிலேயே முதல் முறை.. தமிழகத்தில் நடக்கும் Metaverse திருமணம்! உலகை உற்று பார்க்க வைத்த மணமக்கள்!

By
Google Oneindia Tamil News

சென்னை: இந்தியாவின் முதல் மெட்டாவேர்ஸ் (Metaverse) திருமண நிகழ்வு தமிழகத்தில் நடக்கவிருக்கிறது. இதைதொழில்நுட்பத்தின் அடுத்த முயற்சியாக நெட்டிசன்கள் கொண்டாடுகிறார்கள்.

மெட்டாவர்ஸ் என்பது மெய்நிகர் அதாவது விசுவல் ரியாலிட்டி (Virtual Reality). இந்த‌ உலகத்தில் டிஜிட்டல் மூலம் வாழவும் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளவும் முடியும். தற்போது இந்த மெட்டாவர்ஸ் மூலம் திருமணங்களும் நடக்கிறது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உலகிலேயே, முதன்முதலாக மெய்நிகர் திருமண விழா நடந்தது. புளோரிடாவைச் சேர்ந்த‌ ட்ரேசி மற்றும் டேவ் காக்னன் இருவரும் மெய்நிகர் திருமணம் செய்த முதல் ஜோடிகள் ஆவார்கள்.

இதற்காக இவர்களில் அவதார்கள் அதாவது இவர்களைப் போலவே உள்ள உருவங்கள் இவர்களுக்குப் பிடித்த உடையணிந்து, பிடித்த இடம் எல்லாமே மெட்டவர்சில் வடிவமைக்கப்படும். இந்தத் திருமணத்தை அமெரிக்காவின் விர்பெலா நிறுவனம் வடிவமைத்து நடத்தியது.

மகர ராசியில் சனி உடன் கூட்டணி அமைத்த சூரியன் புதன் எந்த ராசிக்காரர்களுக்கு பாதிப்பு மகர ராசியில் சனி உடன் கூட்டணி அமைத்த சூரியன் புதன் எந்த ராசிக்காரர்களுக்கு பாதிப்பு

 திருமணம்

திருமணம்

தற்போது இதேபோல் ஒரு மெட்டாவர்ஸ் திருமணம் இந்தியாவில் நடைபெறவுள்ளது. அதுவும் தமிழகத்தில் நடக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிவலிங்கபுரம் கிராமத்தில், வரும் பிப்ரவரி மாதம் 6ம் தேதி நடக்கவுள்ளது. மாப்பிள்ளை தினேஷ் தொழில்நுட்ப வல்லுநர், மணமகள் ஜனகநந்தினி டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை செய்கிறார்.

 கிரிப்டோ

கிரிப்டோ

தினேஷ் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து வருகிறார். எத்திரியம் கிரிப்டோ காயினை மைனிங் செய்து வருகிறார். பிளாக்செயின் என்பது மெட்டாவெர்ஸின் அடிப்படை தொழில்நுட்பம். இந்த தொழில்நுட்பத்தை வைத்து தன்னுடைய திருமணத்தை நடத்த திட்டமிட்டார் தினேஷ். இதை தன்னுடைய வருங்கால மனைவியிடம் சொல்ல, அவரும் இதற்கு சம்மதித்திருக்கிறார்.

 நினைத்தது நடக்கும்

நினைத்தது நடக்கும்

நந்தினியின் தந்தை சில மாதங்களுக்கு முன் உயிரிழந்திருக்கிறார். இப்போது நடக்கவுள்ள மெட்டாவெர்ஸ் திருமணத்தில் அவரது உருவத்தை 3டி தொழில்நுட்பத்தில் கொண்டு வர முடியும். திருமண வரவேற்பில் நந்தினியின் தந்தை இடம்பெறுவார். இது தான் நந்தினிக்குக் கொடுக்கும் பரிசு என்று தெரிவித்திருக்கிறார் தினேஷ். நாம் நினைத்ததைக் கொண்டுவரும் தொழில்நுட்பம் தான் இந்த மெட்டாவெர்ஸ்.

 ஹாரிபாட்டர் தீம்

ஹாரிபாட்டர் தீம்

தொழில்நுட்ப உதவியுடன் திருமணத்தை நடத்த முடிவெடுத்ததும், நாங்கள் தேர்வு செய்தது ஹாரிபாட்டர் தீம். ஹாரிபாட்டர் கதைகளில் வரும் கட்டடங்களை 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கியுள்ளோம். ஹாரிபாட்டர் கதையில் வரும் Hogwarts School of Witchcraft and Wizardry இடத்தில் இருந்து திருமண நடக்கும். உலகில் எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் இந்த திருமணத்தில் கலந்துகொள்ளலாம். ஹாரிபாட்டர் தீம் போல், நாம் எந்த டிசைன் கொடுத்து செய்யச் சொன்னாலும் மெட்டாவெர்சில் செய்யமுடியும்.

 என்ன செய்தார்கள்

என்ன செய்தார்கள்

திருமணம் இவர்களது கிராமத்தில் நடக்கிறது. சாதாரணமாக திருமணம் என்றால் ஊர் கூடி சொந்த பந்தம் வந்து வாழ்த்தும். இந்தத் திருமணத்தில் அதையும் சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள். அதாவது, இந்தத் திருமணத்தில் கலந்துகொள்ளும் இவர்களது சொந்தக்காரர்களின் உருவங்களை 3டி-யில் தயாரித்து, திருமண நிகழ்வு நடக்கும் போது, 3டி உருவத்தில் இவர்கள் மெட்டாவெர்ஸில் வலம் வருவார்கள்.

 எப்படி கலந்து கொள்வது

எப்படி கலந்து கொள்வது

திருமணத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் அனைவருக்கும், இந்த நிகழ்வில் கலந்துகொள்ள ஒரு வெப்சைட் லிங்க் மற்றும் ஐடி பாஸ்வேர்ட் கொடுக்கப்பட்டிருக்கும். அதை லாகின் செய்து திருமண நிகழ்வை மெட்டாவெஸில் காணலாம். மெட்டாவெர்சிலேயே மணமக்களுக்கு பரிசுகளும் கொடுக்கலாம். இதுவே இந்த தொழில்நுட்ப திருமணத்தின் சிறப்பம்சம். இந்தத் திருமணத்தை சென்னையில் உள்ள தொழில்நுட்ப நிறுவனம் மெட்டாவெர்சில் நடத்துகிறது. 'இந்தியாவின் முதல் மெட்டாவேர்ஸ் திருமணம்' என்று பதிவிட்டு திருமணத்துக்கான அழைப்பிதழ் வீடியோவை டிவிட்டரில் வெளியிட்டிருக்கிறார் மணமகன் தினேஷ். இதுபோன்ற திருமணங்கள் நடப்பதையடுத்து, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் கனவுகள் நிஜமாவதாக நெட்டிசன்கள் சிலாகித்து வருகிறார்கள்.

English summary
Metaverse wedding meaning in Tamil: India's first Metaverse wedding is set to take place in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X