“இந்திய வர்த்தகத்தை தீர்மானிக்கும் அதிகாரத்தை.. டிரம்புக்கு வழங்கினாரா மோடி?” - சு.வெங்கடேசன் கேள்வி
சென்னை: இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே வர்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது. இந்த ஒப்பந்தம் தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இந்திய வர்த்தகத்தை தீர்மானிக்கும் அதிகாரத்தை ட்ரம்புக்கு வழங்கினாரா மோடி? என சிபிஎம் எம்பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இந்தியா வேளாண் துறையை நம்பிதான் இருக்கிறது. நாடு முழுவதும் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவது MSME துறைதான். அதிலும் வேளாண் துறையில்தான் ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. இப்படி இருக்கையில் அமெரிக்காவின் வேளாண் பொருட்கள் இந்திய சந்தையில் அனுமதிக்கப்படும் என்று சொல்லியிருப்பதும், ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கக்கூடாது என ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருப்பதும் கேள்விக்கு உள்ளாகியுள்ளது.

வரி குறைப்பு
இது குறித்து மதுரை நாடாளுமன்ற தொகுதி எம்பி சு.வெங்கடேசன் தனது x பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, "இந்தியா - அமெரிக்கா நாடுகளுக்கிடையேயான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியப் பொருட்கள் மீது அமெரிக்க 18% வரிவிதிக்கும் என்றும் அமெரிக்கப் பொருட்கள் குறிப்பாக உணவு மற்றும் வேளாண் பொருட்களுக்கு வரி முற்றிலும் நீக்கப்படும் அல்லது குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் பொருட்கள்
அமைச்சர் பியுஷ் கோயல் தனது பதிவில் சோளம், கோதுமை, சோயா, அரிசி பால், சில இறைச்சி உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்யும் இந்திய விவசாயிகள் நலன் பாதுகாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறார். ஆனால், கூட்டறிக்கையில் wide range of உணவு மற்றும் வேளாண் பொருட்களுக்கான வரி நீக்கப்படும் அல்லது குறைக்கப்படும் என்றுதான் குறிப்பிட்டுள்ளது.
இந்திய வர்த்தகம்
அதேநேரத்தில் ரஷ்ய எண்ணெய்யை வாங்க மாட்டோம் என ஒப்புக்கொண்டதால்தான் 25% வரியை நீக்குகிறேன், எண்ணெய் வாங்குவது தெரியவந்தால் மீண்டும் வரிவிதிப்பேன் என தனது உத்தரவில் மிரட்டுகிறார் ட்ரம்ப். இந்தியாவின் வர்த்தக உறவுகளைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை ட்ரம்புக்கு வழங்கினாரா பிரதமர் மோடி? இதை இந்தியாவுக்குச் சாதகமான ஒப்பந்தம் எனக் கொண்டாடுபவர்கள் வெட்கப்பட வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications