சேப்பாக்கத்திற்கு நாளை கிரிக்கெட் பார்க்க போறீங்களா? ரசிகர்களுக்கு சென்னை எம்டிசி கொடுத்த சர்ப்ரைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. கிரிக்கெட் போட்டியை காண மைதானத்திற்கு செல்லும் ரசிகர்கள் பஸ்களில் டிக்கெட் கட்டணம் இன்றி பயணிக்கலாம் என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியை காண செல்வோர், சென்னை மாநகர போக்குவரத்து பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்துகொள்ளலாம் என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

chennai chepauk government bus

வரும் 25.01.2025 (சனிக்கிழமை) அன்று சென்னை, MA சிதம்பரம் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தியா மற்றும் இங்கிலாந்து இரண்டாவது T20I கிரிக்கெட் போட்டிக்கு, Online/pre-printed டிக்கெட் மற்றும் நுழைவுச்சீட்டு வைத்து இருந்தால் அதை நடத்துனரிடம் காண்பித்து மா.போ.கழக பேருந்துகளில் (குளிர்சாதனபேருந்து நீங்கலாக) பயணிக்க கட்டணமின்றி அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- பயணிகள் கவனத்திற்கு! வரும் 25.01.2025 (சனிக்கிழமை) அன்று சென்னை, MA சிதம்பரம் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தியா மற்றும் இங்கிலாந்து இரண்டாவது T20 | கிரிக்கெட் போட்டிக்கு, Online/pre-printed டிக்கெட் மற்றும் நுழைவுச்சீட்டு வைத்து இருந்தால் அதை நடத்துனரிடம் காண்பித்து மா.போ.கழக பேருந்துகளில் (குளிர்சாதனபேருந்து நீங்கலாக) பயணிக்க கட்டணமின்றி அனுமதிக்கப்படுவார்கள்.

25.01.2025 அன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து இரண்டாவது T20 | கிரிக்கெட் போட்டி சென்னை, MA சிதம்பரம் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிகளை காண ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 25.01.2025 (சனிக்கிழமை) அன்று வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 100 சிறப்பு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இப்போட்டிகளை காணவரும் பார்வையாளர்கள் வசதிக்காகவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாகவும் பொது போக்குவரத்து பயன்பாட்டினை அதிகரிக்கும் விதமாகவும் தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்துடன் (TNCA) மா.போ.கழகம் உரிய பயணக்கட்டணம் பெற்றுக்கொண்டதன் அடிப்படையில் பயணிகள் கிரிக்கெட் போட்டிக்கான Online/pre-printed டிக்கெட் மற்றும் நுழைவுச்சீட்டு வைத்து இருந்தால் அதை நடத்துனரிடம் காண்பித்து கொள்ளலாம்.

மேலும் மா.போ,கழக பேருந்துகளில் (குளிர்சாதன பேருந்து நீங்கலாக) போட்டி நடைபெறும் நேரத்திற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பும் போட்டி முடிந்த மூன்று மணி நேரத்திற்கு பின்னர் பேருந்துகளில் பயணிக்க கட்டணமின்றி அனுமதிக்கப்படுவார்கள். மேலும், சாதாரண கட்டண பேருந்துகளில் வழக்கம்போல் மகளிர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர்கள் கட்டணமின்றி பயணம் செய்யலாம்.

அரசினர் தோட்டம் மேட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து M.A சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் வரை மா.போ.கழக இணைப்பு பேருந்துகள் (Shuttle servi- ce) மாலை 4.00 மணி முதல் தொடர்ந்து இயக்கப்பட உள்ளது. எனவே, பார்வையாளர்கள் இப்பேருந்து இயக்கத்தினை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+