Indian Railway: ஏசி பெட்டிகளில் ரயில்வேக்கு வந்த புது தலைவலி! பறந்த அதிரடி உத்தரவு.. பயணிகளே நோட் பண்ணுங்க!
சென்னை: ரயில்களில் ஏசி பெட்டியில் பயணிகளுக்கு போர்வை, படுக்கை விரிப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் போர்வை மற்றும் படுக்கை விரிப்புகளை ஒரு சில பயணிகள் தங்கள் உடமைகளுக்குள் மறைத்து வைத்து வீட்டுக்கு கொண்டு போய்விடுவதாக புகார்கள் வருகின்றன. இதனால் ரயில்வேக்கு ஆண்டுதோறும் சராசரியாக ரூ.80 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது. எனவே இதனை தவிர்க்க தற்போது ரயில்வே அதிரடி உத்தரவு ஒன்றை போட்டுள்ளது.
ரயில்களில் பயணிகளின் வசதிகளுக்கு ஏற்ப பல்வேறு மாற்றங்களை இந்தியன் ரயில்வே செய்து வருகிறது. தற்போதைய நவீன காலத்துக்கு ஏற்ப புதுப்புது அப்டேட்களையும் செய்து வருகிறது. பயணிகளும் தொலைதூர பயணம் என்றால் முதலில் ரயில்களில் டிக்கெட் இருக்கிறதா என்றே பார்க்கிறார்கள். ரயில்களில் பயணம் செய்வதையே அதிகம் தேர்வு செய்கிறார்கள்.

வீட்டுக்கு எடுத்து செல்லும் பயணிகள்
ரயில்களை பொறுத்தவரை, எக்ஸ்பிரஸ் ரயில்களில் முதல் வகுப்பு பெட்டி, இரண்டாம் வகுப்பு பெட்டி, மூன்றாம் வகுப்பு பெட்டிகளில் ஏசி வசதி உள்ளது. இதில் பயணம் செய்பவர்களுக்கு ஒரு போர்வை, ஒரு தலையணை மற்றும் 2 படுக்கை விரிப்புகள், முகம் துடைப்பதற்கு ஒரு துண்டு என ரயில்வே சார்பில் பயணிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்த போர்வை, துண்டு, படுக்கை விரிப்பு போன்றவற்றை பயணிகள் ரயில் பயணத்தின் போது மட்டுமே இலவசமாக பயன்படுத்த அனுமதி உள்ளது. பயணம் முடிந்து ரயிலில் இருந்து இறங்கி செல்லும் போது அவை அனைத்தையும் ரயிலிலேயே விட்டுவிட்டு செல்ல வேண்டும். ஆனால் சில பயணிகள் அதனை அப்படியே வீட்டுக்கு எடுத்து சென்று விடுகிறார்கள். இதனால் ரயில்வேக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது.
ஊழியர்கள் கண்காணிக்க உத்தரவு
குறிப்பாக பல எக்ஸ்பிரஸ் ரயில்களில் வட மாநிலத்தை சேர்ந்த பயணிகள் இவ்வாறு தங்கள் பயணத்தின் போது கொடுக்கப்படும் போர்வை, துண்டு, படுக்கை விரிப்புகளை பயணம் முடிந்து வீட்டிற்கு செல்லும் போது தங்கள் உடமைகளுக்குள் மறைத்து வைத்து வீட்டுக்கு எடுத்து சென்றுவிடுவதாக புகார்கள் வந்தன.
சமீபத்தில் கூட வட மாநிலத்தை சேர்ந்த பயணிகள் சிலர் போர்வை, துண்டு, படுக்கை விரிப்புகளை தங்களது உடமைகளுக்குள் மறைத்து வைத்து எடுத்து செல்வது போன்ற வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாலும், ரயில்வேக்கு இதனால் கணிசமான அளவு வருவாய் இழப்பு ஏற்படுவதாலும், இதனை தடுக்க தற்போது ரயில்வே அதிரடி நடவடிக்கையினை கையில் எடுத்துள்ளது.
அதே எண்ணிக்கையில் இருக்கின்றதா?
அதாவது எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏசி பெட்டிகளில் பயணிகளுக்கு பயன்படுத்த வழங்கப்படும் போர்வை, படுக்கை விரிப்புகள், துண்டு ஆகியன அதே எண்ணிக்கையில் இருக்கின்றதா? என்பதை கண்காணிக்க ஊழியர்களுக்கு வாய்மொழியாக உத்தரவிடப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரயில் புறப்படும் இடத்தில் இருந்து, கடைசியாக வந்து சேரும் ரயில் நிலையத்திற்கு முன்பு அவற்றை சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை
ரயில்வேக்கு சொந்தமான பொருட்களை பயணிகள் எடுத்து செல்வது தண்டனைக்குரிய குற்றமாகும். ரயில்வே சொத்து சட்டம் 1966-ன் படி, ரயில்வேக்கு சொந்தமான பொருட்களை எடுத்துச் செல்வது தண்டனைக்குரிய குற்றம்.
இவ்வாறு எடுத்து செல்லும் பயணிகள் கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்தே விதிக்கப்படும். குறைந்தபட்சமாக ஒரு ஆண்டு சிறை தண்டனையோ அல்லது ரூ.1,000 அபராதம் விதிக்கவும் இந்த சட்டத்தில் இடம் உள்ளது.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications