Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அம்ரித் பாரத் ரயிலில் என்னங்க நடக்கது.. எதை கிளீன் பண்ணுறாங்க பாருங்க.. கொதித்தெழுந்த நெட்டிசன்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரயில்களில் விற்பனை செய்யப்படும் உணவுகளின் தரம் மோசமாக இருப்பதாக அடிக்கடி பயணிகள் குற்றச்சாட்டு வைத்து வருவதை பார்க்க முடியும். இந்த நிலையில் ரயில் பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் ஒரு வீடியோ இணையத்தில் டிரெண்ட் ஆக பரவி வந்தது. அதில் உணவு வழங்கப் பயன்படுத்தப்படும் சில்வர் நிறத்திலான டிரேவை ரயில்வே ஊழியர்கள் சுத்தம் செய்துகொண்டிருக்கிறார்கள். இந்த வீடியோவை பார்த்து பயணிகள் பலரும் அதிர்ச்சிக்குள்ளான நிலையில் இது தொடர்பாக ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவில் ரயில் பயணம் என்பது பயணிகளுடன் இரண்டறக் கலந்தது. குறுகிய பயணம் என்றாலும் சரி.. தொலை தூரங்களுக்கு செல்வதாக இருந்தாலும் சரி.. ரயில்கள் இருந்தால் முதலில் ரயிலில் பயணம் செய்வதையே விரும்புவார்கள். ரயில்களை பொருத்தவரை தேவைப்படும் உணவுப்பண்டங்களை வாங்கி கொள்ள முடியும்.

indian-railway-responds-to-trending-video-of-washed-disposable-food-trays

ஒரு முறை பயன்படுத்தப்படும் டிரேக்கள்

உணவு வீட்டில் இருந்து கொண்டு செல்லாவிட்டாலும் கூட ரயிலுக்குள் விற்பனையாளர்கள் கொண்டு வரும் உணவை வாங்கி சாப்பிட்டுக்கொள்ள முடியும். அதேவேளையில், ரயில்களில் விற்பனை செய்யப்படும் இந்த உணவின் தரம் மோசமாக இருப்பதாக அவ்வப்போது பயணிகள் குற்றம் சாட்டுவதை பார்க்க முடியும்.

ஆனால், ரயில் பயணிகளை அதிர வைக்கும் வகையில், சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ பரவி வருகிறது. அதாவது, ரயில்களில் உணவுகளைப் பொறுத்தவரை சில்வர் கலர் கொண்ட ஒரு டிரேவில் வைத்து பெரும்பாலும் வழங்கப்படும். இந்த டிரேக்களைப் பொறுத்தவரை யூஸ் & த்ரோவாகவே இருக்கும். அதாவது ஒருமுறை பயன்படுத்தி விட்டு தூக்கி எறியும் வகையிலான டிரேக்கள்தான் இவை.

ரயில்வே ஊழியர்கள் செய்த செயல்

இந்த நிலையில் அம்ரித் பாரத் ரயிலில் Amrit Bharat Express (Train No. 16601) டிரேக்களை ரயில்வே ஊழியர்கள் ரயிலில் உள்ள தண்ணீர் டேப்பில் வைத்தே சுத்தமாக கழுவி ஒரு இடத்தில் பத்திரமாக வைக்கும் காட்சிகள்தான் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி அதிர வைத்திருக்கிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அதிர்ச்சியுடன் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

"ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட இந்த டிரேவில் மீண்டும் உணவு பார்சல் செய்து பயணிகளுக்கு எடுத்து செல்ல இப்படி சுத்தம் செய்கிறார்களா? சுத்தம், சுகாதாரம் என்ன ஆனது?" என்று நெட்டிசன்கள் கோபத்துடன் பதிவிட்டு இருந்தனர். ரயில்வே அமைச்சகத்தையும் டேக் செய்து நெட்டிசன்கள் இந்த பதிவுகளை போட்டிருந்தனர்.

ரயில்வே விளக்கம்

இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள ரயில்வே, உணவு பரிமாறப் பயன்படுத்தப்படும் ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் கேசரோல்கள் (டிரேக்கள்) மீண்டும் பயன்படுத்தும் நோக்கத்தில் இவை சுத்தம் செய்யப்படவில்லை. தூக்கி எறிவதற்கு முன்பாக அவை சுத்தம் செய்யப்பட்டு இருக்கிறது. மீண்டும் பயன்படுத்துவதற்காக சுத்தம் செய்யவில்லை என்பதை ரயில்வேயின் உண்மை கண்டறியும் விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொய்யான தகவல் பரப்பப்படுகிறது

ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட உணவு டிரேக்கள் மீண்டும் பயன்படுத்தப்படும் என்ற தகவல் தவறானது. இதுபோன்ற பொய்யான தகவல்களை பரப்புவதை நிறுத்த வேண்டும். "ரயில்வே கேட்டரிங் சேவைகளின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் தவறான தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ரயிலில் உணவு விற்பனை செய்பவர்கள் மற்றும் ரயில்வே ஊழியர்களிடம் விசாரணை நடத்தி எழுத்துப்பூர்வ விளக்கத்தையும் ரயில்வே பெற்றுள்ளது. இதில், உணவு டிரேக்கள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. பணியிடத்தில் சுகாதாரத்தைப் பராமரிக்கும் நோக்கத்துடன் அவற்றை அப்புறப்படுத்துவதற்கு முன் சுத்தம் செய்யப்பட்டது. பயணிகள் சேவையில் உயர் தரத்தை கடைபிடிப்பதில் உறுதியாக இருக்கிறோம் என்றும் ரயில்வே தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+