Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Indigo: இண்டிகோ விமானத்துக்கு அடுத்தடுத்து சோதனை.. வெடிகுண்டு மிரட்டலால் சென்னையில் பெரும் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடு முழுவதும் இண்டிகோ விமானச் சேவை கடந்த 8 நாட்களாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 8வது நாளான இன்றும் விமானச் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இன்றைய தினம் சென்னை விமான நிலையத்தில் புறப்பாடு மற்றும் வருகை என 41 இண்டிகோ விமான சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில், டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வந்த இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இண்டிகோ நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமாகும். கடந்த சில நாட்களாக இண்டிகோ விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். கடந்த 8 நாட்களாகவே பல்வேறு நகரங்களிலும் விமான சேவை பாதிக்கப்பட்டது.டெல்லி , சென்னை உள்ளிட்ட நகரங்களிலும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டதால் இப்பிரச்சனை பெரும் பேசுபொருளானது.

bomb-threat-to-indigo-flight-from-delhi-to-chennai

புதிய விமானப் பணி நேரக் கட்டுப்பாடு விதிகள் காரணமாக பைலட், விமான பணிப் பெண்கள் கொண்ட விமான பணிக் குழுவுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால், இண்டிகோ விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருவதால் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.

மாற்று ஏற்பாடுகளும் போதியளவில் இல்லை என்பதால் பலரும் தாங்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்குப் போக முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்கள். இந்த விவகாரத்தில் மத்திய அரசு நேரடியாகத் தலையிட்டு இண்டிகோ நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 8 ஆவது நாளான இன்றும் இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

விமான சேவை ரத்து

சென்னையில் இருந்து டெல்லி, ஹைதராபாத், கோவை உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் இண்டிகோ விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லும் இண்டிகோ விமானங்களும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல, மதுரை விமான நிலையத்தில் இருந்து மும்பை செல்லும் விமான சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

நாட்டின் பல்வேறு நகரங்களில் இண்டிகோ நிறுவனத்தின் ஏராளமான விமானங்கள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு வருவதால் பயணிகள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். டிசம்பர் 10 ஆம் தேதிக்குள் விமான சேவை சீராகும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடிகுண்டு மிரட்டல்

ஏற்கனவே, விமான சேவை பிரச்சனை தலைதூக்கியுள்ள நிலையில், இண்டிகோ விமானத்திற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விமானம் சென்னையில் பத்திரமாக தரையிறக்கப்பட்ட நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் விமானத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனை மேற்கொண்டதில், விமானத்தில் வெடிகுண்டு உள்ளிட்ட ஆபத்தான பொருட்கள் சோதனையில் கண்டறியப்படவில்லை என்று முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+