சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இன்புளுயன்ஸா..1000 இடங்களில் காய்ச்சல் முகாம்..அசால்ட்டாக இருக்க வேண்டாம் - அமைச்சர் மா.சுப்ரமணியன்

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா முடிவுக்கு வந்து விட்டது என்று யாரும் அசால்ட்டாக இருக்க வேண்டாம் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். இன்புளுயன்ஸா காய்ச்சல் பரவி வருவதால் தமிழகம் முழுவதும் நாளை 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெறும் எனவும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா அலை ஆட்டிப்படைத்த நிலையில் தற்போது குழந்தைகளை காய்ச்சல் அதிகம் தாக்கி வருகிறது. மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்த காய்ச்சல் ஓரிரு நாட்களில் சரியாகி விடும் என்பதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தால் முகாம்களுக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளலாம் என்றும் கூறினார்.

 உலுக்கும் இன்புளுயன்ஸா! தடுப்பது ரொம்பவே ஈஸி.. இதை மட்டும் செய்யுங்கள் போதும்! மருத்துவர்கள் அட்வைஸ் உலுக்கும் இன்புளுயன்ஸா! தடுப்பது ரொம்பவே ஈஸி.. இதை மட்டும் செய்யுங்கள் போதும்! மருத்துவர்கள் அட்வைஸ்

எத்தனை பேர் பாதிப்பு

எத்தனை பேர் பாதிப்பு

பருவநிலை மாற்றங்களால் காய்ச்சல் சற்று அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். தமிழ்நாட்டில் தற்போதுவரை 1,166பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல் அதிகரித்து வருவதால் முதல்வருடன் ஆலோசனை செய்து அரசியல் தலைவர்களின் கருத்துக்களையும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு அதற்கேற்ப முடிவு எடுக்கப்படும்.

அமெரிக்காவில் கொரோனா

அமெரிக்காவில் கொரோனா

கொரோனா பற்றிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்ரமணியன், 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதிப்பு அமெரிக்காவில் உள்ளது. அப்படி இருந்து கொரோனா முடிவுக்கு வந்து விட்டதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
அங்கே 4 அலைகள் வந்த பிறகு முடிவுக்கு வந்து விட்டதாக கூறியுள்ளனர்.

ஓமிக்ரான் உருமாற்றம்

ஓமிக்ரான் உருமாற்றம்

கொரோனா முடிவுக்கு வந்து விட்டதாக நாம் அசால்டாக இருக்க வேண்டாம். கொரோனா பாதிப்பு என்பது வைரஸ் தொடர்ச்சியாக உருமாற்றம் அடைந்து வந்து கொண்டிருக்கிறது. ஓமிக்ரான் பல வழிகளில் உருமாற்றம் அடைந்து பரவி வருகிறது. உலகத்தில் பல நாடுகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தினசரி பாதிப்பு உள்ளது.

அச்சப்பட வேண்டாம்

அச்சப்பட வேண்டாம்


இந்தியாவில் கேரளாவில் 2000 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு உள்ளது. இந்தியாவில் 4 மாநிலங்களில் கொரோனா பரவல் கூடுதலாக உள்ளது. தமிழகத்தில் 500க்கும் கீழேதான் உள்ளது. சென்னையிலும், கோவையிலும் கொரோனா அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் உள்ளது. நாம் அச்சப்பட தேவையில்லை என்றும் கூறினார்.

English summary
Minister M. Subramanian has said that no one should be assailed by the fact that Corona has come to an end. Due to the spread of influenza fever, a special fever camp will be held in 1000 places across Tamil Nadu tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X