பலவருட ஏக்கம், வருத்தம்.. ஏர் இந்தியாவிற்கு வலை வீசும் "அயர்ன்மேன்".. டாடாவின் சூரரை போற்று கதை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏர் இந்தியாவை டாடா குழுமம் கையகப்படுத்தும் திட்டத்தில் உள்ளது. இதற்கான ஏலம் முடிய உள்ள நிலையில் பெரும்பாலும் டாடா நிறுவனம் ஏர் இந்தியாவை கைப்பற்றும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஏலத்தில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கும் டாடா குழுமத்திற்கும் கடும் போட்டிகள் நிலவி வருவதாக கூறப்படுகின்றது.

நாங்கள் வியாபாரிகள் கிடையாது.. நாங்கள் தொழிலதிபர்கள். நாங்கள் இந்தியாவை ஒரு பணக்கார சூப்பர் பவர் நாடாக மாற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் கிடையாது. எங்களை பொறுத்தவரை இந்தியா சந்தோசமிக்க நாடாக இருக்க வேண்டும் என்று ரத்தன் டாடாவின் பிரபல வாசகத்தை தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். அம்பானி குடும்பத்திற்கும் தனக்கும் உள்ள வேறுபாடு குறித்து பேசிய போது ரத்தன் டாடா சொன்ன வாசகம் இது.

ஆம், ஸ்டில், இரும்பு உற்பத்தியில் ஆரம்பித்த டாடா குழுமம் தற்போது இந்தியாவின் மிகப்பெரிய தொழில்துறை நிறுவனமாக உள்ளது. இரும்பு மூலம் வலுவான அஸ்திவாரத்தை அமைத்த அயர்ன்மேன் குழுமமான டாடா தற்போது இந்தியாவில் உப்பு தொடங்கி விமானம் வரை பல தொழில்களை நடத்தி வருகிறது. பல துறைகளில் கால் பதித்துவிட்டது.

டாடா

டாடா

டாடா கால் பதிக்காத துறையே கிடையாது, சோதனை முயற்சியாக டாடா முதலீடு செய்யாதே துறையே கிடையாது என்று கூறலாம். இந்த நிலையில்தான் நஷ்டத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்க முடிவு செய்துள்ளது. தற்போது வர்த்தக உலகில் டாப் நியூஸ் இதுதான். ஆம் பல கட்ட போராட்டத்திற்கு பின் மீண்டும் ஏர் இந்தியா டாடா வசம் சென்றுள்ளது. மீண்டும் பிறந்த வீட்டிற்கே இந்த நிறுவனம் சென்றுள்ளது. கடந்த வருடங்களில் ஏர் இந்தியாவை வாங்க பெரிய போட்டி இல்லை என்றாலும், கடந்த ஒரு மாதமாக நிலவிய ஏலப்போட்டிக்கு இடையில் டாடா நிறுவனம் ஏர் இந்தியாவை கைப்பற்றி உள்ளது.

 சூரரை போற்று கதை

சூரரை போற்று கதை

இந்த ஏர் இந்தியா எப்படி டாடா குழுமம் மூலம் உருவாக்கப்பட்டது என்பதே ஒரு சூரரை போற்று பட கதை பாணிதான். இந்தியாவில் விமான பயணம் பெரிதாக இல்லாத, மக்கள் பெரிதாக வெளிநாடுகளுக்கு பறக்காத 1930 காலகட்டத்தில்தான் ஜெஆர்டி டாடாவின் தொலைநோக்கு பார்வை மூலம் டாடா ஏர் சர்வீஸ் நிறுவனம் உருவாக்கப்பட்டது. 1932ல் உருவாக்கப்பட்ட இந்த விமான ஏர்லைன்ஸ் நிறுவனம் பின்னர் டாடா ஏர்லைன்ஸ் என்று மாற்றப்பட்டது. இரண்டு எஞ்சின் கொண்ட சிறிய ரக de Havilland Puss Moths விமானம் மூலம் முதலில் கடிதங்களை கொண்டு செல்லும் சேவையை செய்து வந்தது. அதன்பின் பயணிகளை ஏற்றிச்செல்ல தொடங்கியது

சூர்யா

சூர்யா

சூரரை போற்று படத்தில் எப்படி சூர்யாவும் விமானம் ஓட்ட கூடியவரோ அதேபோல் ஜேஆர்டி டாடாவும் விமானம் ஓட்ட கூடியவர். இதன் முதல் போக்குவரத்து விமானத்தை ஓட்டியதே ஜேஆர்டி டாடாதான். அதன்பின் விமான போக்குவரத்து சென்னை - மும்பை - கராச்சி வரை டாடா நிறுவனம் மூலம் இயக்கப்பட்டது. முன்னாள் விமானப்படை விமானிகளை வைத்து இந்த பணிகளை டாடா நிறுவனம் மேற்கொண்டு வந்தது. இந்த விமானம் முதல் ஒரு வருடத்திலேயே 1.6 லட்சம் மைல்களை கடந்தது. மொத்தம் 155 பயணிகள் முதல் வருடத்தில் இந்த விமானத்தில் பயணம் செய்து இருந்தனர். அப்போதே 60 ஆயிரம் ரூபாய் லாபம் பார்த்த இந்த நிறுவனம், 9.27 டன் கடிதங்களை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு சென்றது.

விமானம்

விமானம்

அதன்பின் 1938ல் தீவிரமாக டாடா பயணிகள் போக்குவரத்தில் குதித்தது. பாம்பே - திருவனந்தபுரம் வரை 6 பேர் பயணிக்க கூடிய வகையில் விமான சேவையை தொடங்கியது. அதன்பின் கொழும்பு வரை விமான பயணத்தை நீட்டித்தது. இன்னும் சொல்லப்போனால் இரண்டாம் போரில் இந்தியாவில் இருந்து வீரர்களை அனுப்ப, கடிதங்களை கொண்டு செல்ல, உணவுகளை, குண்டுகளை கொண்டு செல்ல, அடிபட்டவர்களை மீட்க இந்த டாடா விமானங்கள் அப்போதைய பிரிட்டிஷ் ராயல் விமானப்படை மூலம் பயன்படுத்தப்பட்டது. இதில் டாடா விமான சேவை அதிக கவனம் ஈர்த்தது. இந்தியாவில் முதல் தனியார் பயணிகள் சேவை நிறுவனமாக இதனால் டாடா உருவெடுத்தது.

அரசுடமை

அரசுடமை

அதன்பின் உலகப் போர் முடிந்து 1946லேயே ஏர் இந்தியா நிறுவனம் பொது பங்கு நிறுவனமாக அறிவிக்கப்பட்டது. 1948ல் சுதந்திரத்திற்கு பின் இதன் 49 சதவிகித பங்குகளை மத்திய அரசு வாங்கியது. 1953ல் கொண்டு வரப்பட்ட விமான போக்குவரத்து நிறுவன சட்டம் காரணமாக டாடா ஏர்லைன்சின் பெருவாரியான பங்குகள் அரசால் வாங்கப்பட்டது. இதனால் நிறுவனம் அரசின் வசம் சென்றது. ஆனாலும் இதன் சேர்மேனாக ஜெஆர்டி 1977 வரை இருந்தார். அதன்பின் இந்த நிறுவனம் ஏர் இந்தியா என்று பெயர் மாற்றப்பட்டு முழுவதுமாக அரசு கட்டுப்பாட்டில் வந்தது. கிட்டத்தட்ட டாடாவிடம் இருந்து சட்டத்தை பயன்படுத்தி இந்த நிறுவனம் வாங்கப்பட்டது (கொஞ்சம் கட்டாயப்படுத்தி) என்றுதான் இதை கூற வேண்டும்.

மீண்டும் கிடைத்தது

மீண்டும் கிடைத்தது

அதன்பின் பல வருட ஏக்கம், எதிர்பார்ப்பிற்கு பின் மீண்டும் டாடா நிறுவனம் ஏர் இந்தியாவை வாங்கி உள்ளது. கடந்த 2017ல் இருந்தே இதை மத்திய அரசு ஏலம் விட முயன்றது. கடுமையான நிதிசுமை காரணமாகவும், 9.53 பில்லியன் டாலர் இழப்பு காரணமாகவும் கஷ்டப்பட்ட இந்த நிறுவனத்தை மத்திய அரசு விற்க முடிவு எடுத்தது. முதலில் 50 சதவிகிதத்தை ஏலம் விட நினைத்த மத்திய அரசு, பின்னர் மொத்தமாக நிறுவனத்தை கைமாற்ற முடிவு செய்தது.

விருப்பம்

விருப்பம்

முதலில் 50 சதவிகிதத்தை ஏலம் விட நினைத்த மத்திய அரசு, பின்னர் மொத்தமாக நிறுவனத்தை கைமாற்ற முடிவு செய்தது. முதலில் பெரிதாக எந்த நிறுவனமும் இதை வாங்க விருப்பம் தெரிவிக்கவில்லை. டாடா தொடக்கத்தில் இருந்தே இதை வாங்க முயற்சி செய்தது. கடைசி கட்டத்தில் ஸ்பைஸ் ஜெட் போன்ற நிறுவனங்கள் ஏலத்தில் இணைந்தது. ஆனாலும் ஏற்கனவே ஏர் விஸ்தாரா போன்ற நிறுவனங்களை நடத்தும் அனுபவம், பொருளாதார நிலையை காரணம் காட்டி டாடா நிறுவனத்திற்கு இந்த ஏர் இந்தியா ஏலத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா

டாடா

டாடா தனியார் என்றாலும் அந்த குழுமம், தங்கள் நிறுவனங்களில் கடைபிடிக்கும் விழுமியங்கள் அபாரமானது. இந்தியாவின் தொழிற்துறையை சுதந்திரத்திற்கு முன்பே புதிய உச்சம் கொண்டு சென்றது டாடா குழுமம்தான். ஈரானில் இருந்து அகதிகளாக வந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்தான் ஜெஆர்டி டாடா. தற்போது அதே டாடா குழுமம் இந்தியாவின் விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியாவை வாங்கி உள்ளது. பொதுத்துறை நிறுவனம் ஒன்று தனியாருக்கு செல்கிறது என்பது ஒரு வகையில் விமர்சிக்க கூடிய விஷயம் என்றாலும்.. அதை டாடா நிறுவனம்தான் வாங்குகிறது என்பது கொஞ்சம் அசுவாசப்பட்டுக்கொள்ளும் செய்தி. இழப்பில் இயங்கும் ஏர் இந்தியாவை டாடா தூக்கி நிறுத்துமா.. அல்லது கடையை மூடிவிட்டு செல்லுமா என்பதை காலம்தான் சொல்லும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+