விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன்.. 5 லட்சம் கிடைக்கும்! தொடங்கி வைத்த ஸ்டாலின்.. விவசாயிகளுக்கு ஹேப்பி
தர்மபுரி: தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தரும்புரி மாவட்டத்தில் (CM Stalin in Dharmapuri) சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ஸ்டாலின், விவசாயிகளுக்கு உடனடி பயிர்க்கடன் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகள் ஆன்லைனிலோ அல்லது இசேவை மையம் மூலமாக விண்ணப்பிக்கலாம், மேலும் விண்ணப்பித்த நாளிலேயே பயிர்க்கடன் தொகையானது நேரடியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். ரூ. 5 லட்சம் வரை பயிர்க்கடன் கிடைக்கும்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த ஆய்வு பயணத்தின் போது முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைப்பதுடன், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் ரோடு ஷோ நடத்தி மக்களை சந்தித்து வருகிறார்.

தர்மபுரியில் முதல்வர் ஸ்டாலின்
அந்த வகையில் இன்று (ஞாயிற்றுக் கிழமை) தருமபுரி மாவட்டத்தில் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அவர் நேற்று மாலை சேலத்தில் இருந்து சாலை மார்க்கமாக தருமபுரிக்கு வருகை தந்தார். இரவு தர்மபுரியில் ரோடு ஷோ சென்றார். அப்போது சாலையின் இருபுறங்களிலும் பொதுமக்கள் திரண்டு நின்று அவருக்கு வரவேற்பு அளித்தனர்.
மு.க. ஸ்டாலின் காரில் இருந்து இறங்கி சிறிது தூரம் சாலையில் நடந்து சென்றார். அப்போது அங்கு சாலையில் இருபுறங்களிலும் திரண்டு நின்ற பொதுமக்களிடம் கை குலுக்கினார். மு.க ஸ்டாலின் நடந்து வருவதை பார்த்ததும் பெண்கள் அவருடன் கை குலுக்கி மகிழ்ந்தனர். பின்னர் மீண்டும் வேனில் ஏறிய ஸ்டாலின், சாலையின் இரு புறங்களிலும் வழி நெடுக திரண்டு நின்ற பொதுமக்கள், கட்சி தொண்டர்களை பார்த்து புன்னகையுடன் கை அசைத்தபடி சென்றார்.
புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார்
25 நிமிடங்கள் நடந்த இந்த ரோடு ஷோ தர்மபுரி சுற்றுலா மாளிகை அருகில் இரவு 10.05 மணிக்கு நிறைவடைந்தது. இன்று காலை 9 மணிக்கு ஒட்டப்பட்டியில் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் காலை 9.30 மணிக்கு அதியமான் கோட்டையில் கூட்டுறவு துறை சார்பில் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கும் விழாவில் பங்கேற்று ஆன்லைனில் பயிர்க்கடன் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
ரூ. 5 லட்சம் வரை கடன் பெறலாம்
முதல்வர் முக ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ள உடனடி பயிர்க்கடன் திட்டத்தின் கீழ் ரூ 5 லட்சம் வரை கடன் பெறலாம். இதற்காக விவசாயிகள் ஆன்லைனில் விண்ணப்பித்து வங்கி கணக்கில் பயிர்க்கடன் தொகையை பெற முடியும். இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஏற்படும் தேவையற்ற அலைச்சல், காலதாமதம் குறையும் என்பதால் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
விண்ணப்பித்த நாளிலேயே வங்கி கணக்கில் வரவு
வங்கிகளுக்குக் சென்று விண்ணப்பித்தால் குறைந்தபட்சம் 7 நாள் வரை ஆகலாம்.. தற்போது இந்த திட்டத்தின் மூலம் விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன் கிடைக்கும். இசேவை மூலம் அல்லது, ஆன்லைன் வழியாக விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். அதிகபட்சம் ரூ 5 லட்சம் வரை கிடைக்கும். தர்மபுரி மாவடத்தில் தொடங்கிவைக்கப்பட்டுள்ள திட்டம் விரைவில் மாற்ற மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்பட உள்ளது. வங்கி கணக்கிலேயே கடன் வரவு வைக்கபடும்.
நலத்திட்ட உத்விகள்
தொடர்ந்து காலை 10 மணிக்கு தடங்கம் கிராமத்தில் தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் செல்லும் சாலையில் உள்ள பி.எம்.பி. கல்லூரி எதிரில் நடைபெறும் அரசு விழாவில் அவர் கலந்துகொண்டு பல்வேறு புதிய திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் அவர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
விழாவில் ரூ.512.52 கோடி மதிப்பிலான திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், 70 ஆயிரத்து 427 பேருக்கு ரூ.830.06 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். முதல்வர் ஸ்டாலின் வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications