Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகளிர் தினத்தின் கருப்பொருள் தெரியுமா? பிரதமர் - முதல்வர் - எதிர்க்கட்சி தலைவர் - விஜய் வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் மகளிருக்கு செயல்படுத்திய திட்டங்களை பட்டியலிட்டு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேபோல் பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட தலைவர்களும் மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மகளிர் தினம் "அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கும்: உரிமைகள், சமத்துவம், அதிகாரமளித்தல்" என்ற கருப்பொருளின் கீழ் கொண்டாடப்பட்டு வருகிறது.

womens day 2025 narendra modi mk stalin

இதையொட்டி அம்மா, மனைவி, சகோதரிகள், தோழிகளுக்கும் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் அரசியல் கட்சி தலைவர்களும் மகளிர் தின வாழ்த்து கூறி வருகின்றனர்.

அந்த வகையில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, நடிகரும் தவெக தலைவருமான விஜய் உள்ளிட்டவர்களும் மகளிர் தின வாழ்த்து கூறியுள்ளனர். இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛மகளிர் தினத்தன்று நமது நாரி சக்திக்கு தலைவணங்குகிறோம். நமது திட்டங்கள் என்பது பெண்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில் உள்ளது. நான் முன்பே கூறியபடி இன்று என் சமூக வலைதளம் பல்வேறு துறைகளில் முத்திரை பதிக்கும் பெண்களால் கையாளப்படும்.

பெண்களின் திறன் மேம்பாடு மற்றும் நிதி உள்ளடக்கத்தை உறுதி செய்ய வேண்டும். இதற்காக தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பு செய்வதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். இந்திய பெண்கள் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப தங்களை தகவமைத்து கொள்வது அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறது.

கிராமப்புற பெண்கள் தொழில்முனைவோராக மாறுவதற்கு தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதி்ல நம் ‛மேரி ஷாகலி செயலி' சிறிய பங்களிப்பாகும். விவசாயம், சுகாதாரம், நுகர்பொருள் மற்றும் நிதி கல்வியறிவு போன்ற பல்வேறு துறைகளில் எங்கள் பெண்களின் பலத்தை உலகம் காண இது உதவி உள்ளது.'' என்று கூறியுள்ளார்மேலும் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்களின் குறித்த விபரங்கள் அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டு வருகிறது.

அதேபோல் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ பதிவில், ‛‛வணக்கம்.. நல்லாயிருக்கியளா.. மாதந்தோறும் 1 கோடியே 14 லட்சம் சகோதரிகள் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை பெறுகிறார்கள். தாய் வீட்டு சீர் மாதிரி எங்க அண்ணன் ஸ்டாலின் சீர் தருகிறார் என்று எண்ணற்ற தமிழ் சகோதரிகள் மனம் மகிழ சொல்கிறார்களே அதுதான் விடியலின் ஆட்சி. ஆட்சி பொறுப்பேற்றதும் நான் இட்ட முதல் கையெழுத்து என்பது மகளிருக்கான கட்டணமில்லா விடியல் பயண திட்டத்துக்கு தான். இந்த விடியல் பயணமானது மகளிர் சேமிப்பை அதிகரித்துள்ளது.

அரசு பள்ளியில் படித்த பெண் பிள்ளைகள் பலர் கல்லூரிக்கு செல்ல முடியாத நிலையை மாற்றி உயர் கல்வி பயில உருவாக்க தொடங்கிய திட்டம் தான் புதுமைப்பெண் திட்டம். தமிழ்நாடு மாணவ-மாணவிகள் அப்பா.. அப்பா என்று அழைக்கும்போது அளவில்லா மகிழ்ச்சியடைகிறேன். இந்த பாசம் தான் முக்கியம். அன்பு சகோதரிகள் அனைவருக்கும் உலக மகளிர் தின வாழ்த்துகள்'' என்று கூறியுள்ளார்.

அதேபோல் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், ‛‛அன்பை அள்ளிக் கொடுப்பதில் அன்னையாக, அறிவை அருளும் ஆசிரியையாக, பாசத்தோடு அரவணைக்கும் சகோதரியாக, மனதோடு மனம் கலந்த மனைவியாக, மகளாக, நட்பைக் காட்டும் தோழியாக, தர்மத்தைச் சொல்லும் பாட்டியாக என, வாழ்நாள் முழுவதும் நம்மோடு பயணிக்கின்றவர்கள்தான் பெண்கள். தமிழ் கூறும் நல்லுலகில் வாழும் மகளிர் அனைவருக்கும் எனது உளப்பூர்வமான சர்வதேச மகளிர் தினம் நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

அதே சமயம், இன்றைக்கு தமிழ்நாடு பெண்களுக்கு துளி கூட பாதுகாப்பு இல்லாத மாநிலமாக மாறியிருப்பது மிகுந்த கவலைக்குரியது.சிறுமி முதல் மூதாட்டி வரை, எந்தவொரு பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லை என்பதும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கத் திராணியற்ற ஒரு ஆட்சியாக இன்றைய ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி இருப்பதும் வெட்கக்கேடானது.

அன்புச் சகோதரிகளே- உங்களுக்காக, உங்கள் பாதுகாப்புக்காக என்றைக்கும் அதிமுக போராடும். 2026ல் மீண்டும் அஇஅதிமுக ஆட்சி அமைந்ததும், இன்று நீங்கள் அச்சத்துடன் இருக்கின்ற நிலை மாறி, மிகவும் பாதுகாப்புடன், சுதந்திரமாக செயல்பட்டு, பல சாதனைகளைப் புரிகின்ற காலமாக நம் ஆட்சிக்காலம் நிச்சயம் இருக்கும்'' என்றார்.

அதேபோல் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் வீடியோ வெளியிட்ட வீடியோவில், "எல்லோருக்கும் வணக்கம். இன்று மகளிர் தினம். தமிழ்நாட்டில் உள்ள பெண்கள் அனைவரையும் எனது அம்மா, அக்கா, தங்கை, தோழியாகக் கருதுகிறேன். உங்கள் அத்தனை பேருக்கும் மகளிர் தின வாழ்த்துகள் சொல்லாமல் இருக்க முடியாது. அனைவருக்கும் எனது மகளிர் தின வாழ்த்துகள். சந்தோஷம்தானே!?. பாதுகாப்பாக இருக்கும்போதுதானே சந்தோஷமாக இருக்க முடியும்.

அப்படி எந்த பாதுகாப்பும் இல்லாதபோது சந்தோஷம் இருக்காது தானே! அப்படி நீங்கள் நினைப்பது எனக்குப் புரிகிறது. என்ன செய்ய. நீங்கள், நான் எல்லோரும் சேர்ந்துதான் இந்த திமுக அரசை தேர்ந்தெடுத்தோம். ஆனால் அவுங்க இப்படி நம்மை ஏமாற்றுவார்கள் என்று இப்போதுதான் தெரிகிறது. எல்லாமே இங்க மாறக்கூடியதுதானே. மாற்றத்துக்கு உரியதுதானே. கவலைப்படாதீங்க. இந்த 2026ம் ஆண்டு, நீங்க, நான் எல்லோரும் சேர்ந்து பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய திமுகவை மாற்றுவோம். அதற்கு மகளிர் தினமான இன்று நாம் எல்லோரும் சேர்த்து உறுதியேற்போம். உங்களுடைய எல்லா சூழலிலும் ஒரு மகனாக, அண்ணனாக, தம்பியாக, தோழனாக நான் உங்களோடு நிற்பேன். நன்றி, வணக்கம்." என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+