Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இது இந்தியாவின் பெருமை.. ஐநாவில் 180 நாட்டு பிரதிநிதிகளுடன் யோகா! பிரதமர் மோடி தலைமையில் கோலாகலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐநாவின் தலைமையகத்தில் பிரதமர் மோடி தலைமையில் 180 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்று யோகா செய்து அசத்தினர்.

2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடி முதன்முறையாக பிரதமராக பதவியேற்ற போது, ஜூன் 21 ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கத்தின் வெளிநாட்டு வெற்றிகள் மற்றும் இந்தியாவின் உலகளாவிய சுயவிவரத்தை உயர்த்துவதற்கான ஒட்டுமொத்த நடவடிக்கைகளின் பட்டியலில் குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக இது கருதப்படுகிறது.

International Yoga Day Pride of India led by Prime Minister Modi at UN

மோடி தலைமையிலான பாஜக பொறுப்பேற்று 9 ஆண்டுகள் ஆகும் நிலையில், அதன் சாதனைகளைப் பற்றி நாடு முழுவதும் பரவி வருவதால், தற்போது உலக யோகா தினமும் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்து வருகிறது.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நியூயார்க் நகரில் ஐநாவின் தலைமையகத்தில் இன்று நடைபெறும் யோகா தின விழா பிரதமர் மோடி தலைமையில் நடைபெறுகிறது. 180 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். ஐநா தலைமையகத்தில் 9வது ஆண்டு சர்வதேச யோகா தினம் காலை 8 மணி முதல் 9 மணி வரை நடைபெறுகிறது.

2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சி அமைத்த உடன் பிரதமர் மோடி ஐநா பொதுச் சபையில் தனது முதல் உரையில், பண்டைய இந்திய பாரம்பரியத்தை மனிதகுலத்திற்கு ஒரு விலைமதிப்பற்ற பரிசு என்று விவரித்து, சர்வதேச யோகா தினத்தை ஏற்றுக்கொள்வதற்கு அழைப்பு விடுத்தார்.

International Yoga Day Pride of India led by Prime Minister Modi at UN

அப்போது பேசிய மோடி ''யோகா மனதையும் உடலையும் ஒருமைப்படுத்துகிறது; சிந்தனை மற்றும் செயல்; மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான இணக்கம்; ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான முழுமையான அணுகுமுறை. இது உடற்பயிற்சிக்கானது அல்ல, ஆனால் உங்களுடனும், உலகத்துடனும், இயற்கையுடனும் ஒற்றுமை உணர்வைக் கண்டறிவதே ஆகும், என்று கூறினார்.

International Yoga Day Pride of India led by Prime Minister Modi at UN

2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவால் அறிமுகப்படுத்தப்பட்ட தீர்மானம் ஐநாவில் உள்ள 175 உறுப்பு நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டது.
இதனையடுத்து சர்வதேச யோகா தினம் ஜூன் 21ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பிரதமர் மோடி உட்பட மத்திய அமைச்சர்கள் இந்த நாளைக் குறிக்கும் வகையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் யோகா தின கொண்டாட்டங்களில் பங்கேற்கின்றனர்.

அந்த வகையில் இந்த ஆண்டு ஐ.நா தலைமையகத்தில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் மோடி பங்கேற்றார். 180 நாடுகளின் பிரதிநிதிகளுடன் சேர்ந்து பிரதமர் மோடி யோகா செய்து அசத்தினார். பிரதமர் மோடி வெள்ளை நிற டீசர்ட்(காலரில் நீலநிறம்), வெள்ளை நிற துண்டில் சிவப்பு நிற பார்டர் இருக்கும் துண்டு அணிந்து யோகா செய்தார். அதேபோல் உலக நாடுகளின் பிரதிநிதிகளும் பிரதமர் மோடி அணிந்திருந்த டீசர்ட்டை அணிந்து யோகா செய்து அசத்தினர்.

இந்த யோகா நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் அணிவதற்காக 4150 டி சர்ட்டுகளை திருப்பூரை சேர்ந்த ஆடை வடிவமைப்பு நிறுவனம் தயார் செய்து அனுப்பி இருந்தது. இந்த நிறுவனம் தான் 2016ஆம் ஆண்டு முதலே சர்வதேச யோகா நிகழ்ச்சிக்கு டி சர்ட்களை அனுப்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+