மாற்ற வேண்டாம்.. உறுதியாக சொன்ன தோனி.. சிஎஸ்கே டிரெஸ்ஸிங் ரூமில் நடந்தது என்ன? இவ்வளவு நம்பிக்கையா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிஎஸ்கே அணியின் டிரெஸ்ஸிங் ரூமில் நடப்பது தொடர்பான சுவாரசியமான தகவல் வெளியாகி உள்ளது.

2023 தொடரில் சிஎஸ்கே அணி தீவிரமாக ஆடிக்கொண்டு இருக்கிறது. முதல் போட்டியில் குஜராத் அணியிடம் தோல்வி அடைந்த சிஎஸ்கே, இரண்டாவது போட்டியில் லக்னோவிற்கு எதிராக வென்றது.

சிஎஸ்கே அணியில் டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, பென் ஸ்டோக்ஸ், அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (கேட்ச் & டபிள்யூ), ஷிவம் துபே, மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், ஆர்எஸ் ஹங்கர்கேகர் ஆகியோர் ஆடி வருகின்றனர்.

சிஎஸ்கே

சிஎஸ்கே

சிஎஸ்கே அணியின் பேட்டிங் மிகவும் சிறப்பாக உள்ளது. இரண்டு போட்டியிலும் ஓப்பனிங் வீரர் ருத்துராஜ் அரைசதம் அடித்தார். அதேபோல் இரண்டாவது போட்டியில் துபே, ராயுடு இரண்டு பேருமே நன்றாக ஆடினார்கள். அதேபோல் தோனியும் கடைசியில் வந்து சிக்ஸ் அடித்து இரண்டு போட்டியிலும் நம்பிக்கை அளித்தார். சிஎஸ்கே அணியில் 11 வீரர்களும் பேட்டிங் செய்யும் திறன் கொண்டவர்களாக இருக்கிறார்கள். சிஎஸ்கே அணியில் இருக்கும் மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் மூன்று பேருமே நன்றாக பேட்டிங் செய்ய கூடியவர்கள்.

பவுலிங்

பவுலிங்

ஆனால் சிஎஸ்கே அணியில் பவுலிங் மோசமாக உள்ளது. இந்த 2023 ஐபிஎல் தொடரில் தீபக் சாஹர் காயத்திற்கு பின் மீண்டும் வந்துவிட்டார். ஆனால் இன்னும் அவர் முழுமையான ரிதத்திற்கு திரும்பவில்லை. அதேபோல் காயத்தில் இருந்து முழுமையாக மீண்டு வராத பென் ஸ்டோக்ஸ் இன்னும் சரியாக பவுலிங் போட முடியாமல் உள்ளார். இவர்கள் போக துஷார் தேஷ் பாண்டே, ராஜவர்தன் ஹங்கிரேக்கர் ஆகிய இருவரும்தான் பவுலிங் செய்கின்றனர். ஆனால் அவர்களிலும் ராஜ்வர்தன் மட்டுமே நம்பிக்கை அளிக்கிறார். முக்கியமாக சிஎஸ்கே அணியில் கடந்த இரண்டு போட்டிகளில் சிஎஸ்கே அணி பவுலர்கள் 16 வைட் பந்துகளை போட்டுள்ளனர். லக்னோவிற்கு எதிராக மட்டும் 12 பந்துகளை போட்டு உள்ளனர். அதேபோல் 5 நோ பந்துகளை போட்டு உள்ளனர். அதில் 3 லக்னோவிற்கு எதிராக போடப்பட்ட பந்துகள் ஆகும்.

துஷார் தேஷ்பாண்டே

துஷார் தேஷ்பாண்டே

சிஎஸ்கே அணியில் இரண்டு போட்டிகளிலும் டெத் ஓவர்களில் சிஎஸ்கே அணியால் சரியாக பவுலிங் செய்ய முடியவில்லை. முக்கியமாக துஷார் தேஷ்பாண்டே மோசமாக சொதப்பி வருகிறார். இரண்டு போட்டியிலும் துஷார் ஆடும் 11 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்படவில்லை. அணியில் துஷார் தேஷ்பாண்டே இம்பாக்ட் வீரராக எடுக்கப்பட்டார். இவர் முதல் போட்டியில் 1 விக்கெட் எடுத்தாலும் 50+ ரன்களை கொடுத்து தோல்விக்கு காரணமாக இருந்தார். இரண்டாவது போட்டியிலும் அடுத்தடுத்து இவர் நோ பால்களை வீசினார் .

நோ பால்

நோ பால்

2 விக்கெட்டுகளை இவர் எடுத்தாலும், 3 நோ பால், 4 வைட் பந்துகளை வீசினார். இவருக்கு பதில் ஆகாஷ் சிங்கை இம்பாக்ட் வீரராக எடுத்திருந்தால் சிஎஸ்கே அணிக்கு சாதகமாக இருந்திருக்கும். முகேஷ் சவுத்திரிக்கு மாற்றாக தற்போது 19 வயதே நிரம்பிய ஆகாஷ் சிங்கை சிஎஸ்கே அணி மாற்று வீரராக எடுத்து உள்ளது. சிஎஸ்கே வலை பயிற்சியில் பவுலிங் செய்து வந்தவர் 15 பேர் கொண்ட அணியில் சேர்ந்துள்ளார். இவர் இடதுகை சீம் பவுலர். முக்கியமாக இன் ஸ்விங் போட கூடியவர் . 140 கிலோ மீட்டருக்கும் வேகமாக அவ்வப்போது போடுவார். அதற்கெல்லாம் மேலே இவர் கடைசி ஓவர்களில் துல்லியமாக யார்க்கர் வீச கூடியவர்.

 டிரெஸ்ஸிங் ரூம்

டிரெஸ்ஸிங் ரூம்

முக்கியமாக இவர் டெத் ஓவர்களில் சிறப்பாக பவுலிங் செய்வார், யார்க்கர் போடுவார் என்பதால் தோனி கண்டிப்பாக இவரை களமிறக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் துஷார் தேஷ்பாண்டேவை நீக்கும் எண்ணத்தில் தோனி இல்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக சிஎஸ்கே அணியின் டிரெஸ்ஸிங் ரூமில் நடந்த சுவாரசியமான தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி துஷார் தேஷ்பாண்டே மீது நம்பிக்கை இருக்கிறது.. நோ பால் பிரச்சனையை மட்டுமே சரி செய்ய வேண்டும். மற்றபடி அவரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று தோனி நம்பிக்கையுடன் டிரெஸ்ஸிங் ரூமில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதோடு துஷாரை சிஎஸ்கே அணிக்காக எதிர்காலத்தில் பயன்படுத்த நீண்ட கால பிளான் இருப்பதால் அவரை இப்போதைக்கு அணியில் இருந்து நீக்க மாட்டார்கள் என்றே கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+