தூக்கமில்லா இரவுகள்.. தோனிக்கு வந்த பெரிய பிரச்சனை.. நேரில் போய் பார்த்த 2 "தலைகள்".. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐபிஎல் 2023 தொடரில் சிஎஸ்கே அணியின் முக்கியமான வீக்னஸ் ஒன்று அப்படியே வெளியே தெரிந்து உள்ளது. சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி இந்த பிரச்சனையை எப்படி சரி செய்ய போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

2023 ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இதில் குஜராத் அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வி அடைந்த சிஎஸ்கே அணி லக்னோவிற்கு எதிரான இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்றது.

இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்றாலும் சிஎஸ்கே அணியின் பவுலிங் இந்த போட்டியில் மிக மோசமாக இருந்தது பட்டவர்த்தனமாக தெரிந்தது.

சிஎஸ்கே வீக்னஸ்

சிஎஸ்கே வீக்னஸ்

முக்கியமாக ஐபிஎல் 2023 தொடரில் சிஎஸ்கே அணியின் முக்கியமான வீக்னஸ் ஒன்று அப்படியே வெளியே தெரிந்து உள்ளது. தீபக் சாகர் காயத்திற்கு பின் மீண்டும் வந்துவிட்டார். ஆனால் இன்னும் அவர் முழுமையான ரிதத்திற்கு திரும்பவில்லை. அதேபோல் காயத்தில் இருந்து முழுமையாக மீண்டு வராத பென் ஸ்டோக்ஸ் இன்னும் சரியாக பவுலிங் போட முடியாமல் உள்ளார். இவர்கள் போக துஷார் தேஷ் பாண்டே, ராஜவர்தன் ஹங்கிரேக்கர் ஆகிய இருவரும்தான் பவுலிங் செய்கின்றனர். ஆனால் அவர்களிலும் ராஜ்வர்தன் மட்டுமே நம்பிக்கை அளிக்கிறார்.

பவுலிங்

பவுலிங்


இதை எல்லாம் வைத்து பார்க்கும் போது சிஎஸ்கே அணியின் பாஸ்ட் பவுலிங் அட்டாக் மிக மோசமாக இருக்கிறது. சிஎஸ்கே அணி குஜராத் அணிக்கு எதிரான முதல் போட்டியில் 178 ரன்களை டிபன்ட் செய்ய முடியாமல் தோல்வி அடைந்தது. லக்னோவிற்கு எதிரான போட்டியில் மொயின் அலி, சான்டனர் இல்லை என்றால் சிஎஸ்கே அணி கண்டிப்பாக தோல்வி அடைந்து இருக்கும். 217 ரன்களை டிபன்ட் செய்யவே சிஎஸ்கே அணி கடுமையாக கஷ்டப்பட்டது. ஸ்பின் பவுலர்கள் போட்ட பவுலிங் போக மீதம் உள்ள 11 ஓவர்களில் சிஎஸ்கே அணி பாஸ்ட் பவுலர்கள் விட்டுகொடுத்த் ரன்கள் மட்டும் 142 ரன்கள், இதில் எடுக்கப்பட்ட விக்கெட்டுகள் வெறும் 2.

சேப்பாக்கம்

சேப்பாக்கம்

சேப்பாக்கம் மைதானம் பாஸ்ட் பவுலிங்கிற்கு எடுபடாது என்று சிலர் கூறலாம். ஆனாலும்.. சிஎஸ்கே அணியின் பாஸ்ட் பவுலிங் பிலோ ஆவரேஜ் என்ற அளவில்தான் இருந்தது. இதுதான் சிஎஸ்கேவின் பிரச்சனை என்றாலும் தோனிக்கு தூக்கம் இல்லாத இரவை கொடுக்க போகும் வேறு ஒரு விஷயமும் உள்ளது. அதுதான் சிஎஸ்கே பவுலர்கள் போடும் நோ பால் மற்றும் வைட் பந்துகள். கடந்த இரண்டு போட்டிகளில் சிஎஸ்கே அணி பவுலர்கள் 16 வைட் பந்துகளை போட்டுள்ளனர். லக்னோவிற்கு எதிராக மட்டும் 12 பந்துகளை போட்டு உள்ளனர். அதேபோல் 5 நோ பந்துகளை போட்டு உள்ளனர். அதில் 3 லக்னோவிற்கு எதிராக போடப்பட்ட பந்துகள் ஆகும். இதனால்தான் தோனியே கடுப்பாகி அடுத்த மேட்சில் இப்படி நடந்தால் அவர்கள் வேறு கேப்டனுக்கு கீழ் ஆட வேண்டி இருக்கும் என்று எச்சரித்தார்.

மேட்ச் முடிந்தது

மேட்ச் முடிந்தது

இந்த நிலையில்தான் லக்னோ மேட்ச் முடிந்ததும் முன்னாள் மேற்கு இந்திய தீவுகளின் பாஸ்ட் பவுலர் இயான் பிஷப் மற்றும் சுனில் கவாஸ்கர் இருவரும் தோனியை சென்று பார்த்து உள்ளனர். அவரிடம் நோ பாலை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை வழங்கி உள்ளனர். வீரர்களுக்கு ரன்னிங் பயிற்சி கொடுப்பது தொடர்பாக ஆலோசனை வழங்கி உள்ளனர். இதற்கு தோனியும் இரண்டு பவுலர்களும் நன்றாக போடுகிறார்கள். ஆனால் நோ பால் போடுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. அதை சரி செய்யும் என்று பதிலுக்கு சொல்லி இருக்கிறாராம். அதோடு நோ பால் போட்டால் அவர்களுக்கு தண்டனை கொடுக்கும் திட்டத்திலும் தோனி இருக்கிறாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+