சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

20 லட்சத்துக்கு ஏலம் போன சச்சின் பேபி.. பொங்கும் நெட்டிசன்கள்.. ஆனால் கதையே வேறு!

Google Oneindia Tamil News

சென்னை: பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி சச்சின் பேபியை அடிப்படை விலையான 20 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளது. ஆனால் அவரை பலரும் சச்சின் டெண்டுல்கரின் மகன் என்று தவறாக புரிந்து கொண்டு ட்வீட் போட்டு வருகிறார்கள். உண்மையில் சச்சின் பேபி யார் என்றால் கேரளாவைச் சேர்ந்த 33 வயதாகும் கிரிக்கெட் வீரர் ஆவார். சச்சின் பையனின் பெயர் அர்ஜுன் டெண்டுல்கர், அவரை முமபை அணி 20 லட்சத்திற்கு ஏலம் எடுத்தது.

சென்னையில் இன்று ஐபிஎல் போட்டியில் பங்கேற்க உள்ள வீரர்களுக்கான ஏலம் நடந்தது. இதில் பல்வேறு முக்கிய வீரர்களை அணிகள் ஏலம் எடுத்தன.

கடந்த ஆண்டில் சென்னை அணிக்காக விளையாடிய தமிழ் புலவர் ஹர்பஜன் சிங்கை 2 கோடிக்கு கொல்கத்தா அணி ஏலம் எடுத்து.. இனி வங்கமொழியில் புலவர் ஆனாலும் ஆச்சர்யமில்லை. இதேபோல் சரியான நேரத்தில் வெளுத்து வாங்கும் கேதர் ஜாதவை ஹைதராபாத் அணி ரூ. 2 கோடிக்கு ஏலம் எடுத்தது.

ஐபிஎல் ஏலம்

ஐபிஎல் ஏலம்

சென்னை அணி பகத் வர்மா, ஹரி நிஷாந்த் மற்றும் ஹரிசங்கர் ரெட்டி ஆகியோரை தலா ரூ.20 லட்சத்திற்கு தேர்வு செய்திருக்கிறது. ஐ.பி.எல். போட்டியில் இதுவரை விளையாடாத நியூசிலாந்து வீரர் ஜேமிசனுக்கு அடிப்படை தொகையாக ரூ. 75 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் அவரை கடும் போட்டிக்கு பின்னர், ரூ. 15 கோடிக்கு பெங்களூரு அணி தேர்வு செய்தது.

ஷாருக்கான்

ஷாருக்கான்

தமிழக வீரர் ஷாருக் கானை ரூ. 5.25 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது பஞ்சாப் அணி. இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயீன் அலியை ரூ. 7 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்திய வீரர் புஜாராவை ரூ. 50 லட்சத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு செய்துள்ளது.

ஜை ரிச்சர்ட்சன்

ஜை ரிச்சர்ட்சன்

24 வயது ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜை ரிச்சர்ட்சனை ரூ. 14 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது பஞ்சாப் அணி. தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸை ரூ. 16.25 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. ஐபிஎல் வரலாற்றில் ஏலத்தில் அதிக விலைக்குத் தேர்வான வீரர் என்கிற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது. ஆஸ்திரேலிய. வீரர் மேக்ஸ்வெல்லை ரூ. 14.25 கோடிக்குத் தேர்வு செய்தது ஆர்சிபி அணி. சிஎஸ்கேவுடன் கடுமையாகப் போட்டியிட்டு மேக்ஸ்வெல்லை ஆர்சிபி தேர்வு செய்துள்ளது.

அர்ஜூன் டெண்டுல்கர்

இதற்கிடையே ஐபிஎல் ஏலத்தில் கேரளாவைச் சேர்ந்த சச்சின் பேபி என்பவரை பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 20 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. 33 வயதாகும் சச்சின் பேபி கேரளாவிற்காக விளையாடி வருகிறார். அவரை சச்சின் பையன் என்று நினைத்து ட்விட்டரில் பொங்கி வருகிறார்கள். இதற்கு பலரும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். சச்சின் பேபி என்ற பெயர் வீரர் இருப்பதை புரிய வைத்து வருகிறார்கள். உண்மையில் சச்சின் பையனின் பெயர் அர்ஜுன் டெண்டுல்கர், அவரை முமபை அணி 20 லட்சத்திற்கு ஏலம் எடுத்தது. கண்ணால் காண்பதும் பொய். காதல் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே உண்மை என்பது சச்சின் பேபி விஷயத்தில் உண்மையாகி உள்ளது.

English summary
ipl action 2021 : Sachin Baby SOLD to RCB for INR 20 Lac. Sachin baby is a different player not arjun tendulkar
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X