Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"இறையன்பு"வை மிஸ் பண்ண மனசில்லையாம்..நேர்மையின் கம்பீரம்.. அடுத்த "மிஸ்டர் க்ளீன்" அவரா? பரபர கோட்டை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு, இந்த மாதத்துடன் பணி ஓய்வு பெற உள்ள நிலையில், அடுத்தடுத்த எதிர்பார்ப்புகள் கோட்டையை அதிர வைத்து வருகின்றன.

தமிழ்நாடு தலைமை செயலாளராக பணியாற்றி வரும் இறையன்புவின் பணிக்காலம் விரைவில் முடிவடைகிறது..

இதனால், அடுத்த தலைமை செயலாளர் யார்? என்ற எதிர்பார்ப்பு ஒருபக்கம் இருந்தாலும், இறையன்புவுக்கே வேறு ஏதேனும் பொறுப்பு வழங்கப்படுமா? என்பது குறித்துதான் ஆவல்கள் எழுந்துள்ளன.

irai anbu IAS and who will be the next chief secretary of tamil nadu

ஆணையர்: அதிமுக ஆட்சியில் ஓரங்கட்டி வைக்கப்பட்டிருந்த இறையன்புவின் அனுபவத்துக்கும் திறமைக்கும் ஏற்ற வகையில், இப்போது தலைமைச் செயலாளர் பதவியை ஸ்டாலின் அளித்து அழகு பார்த்துள்ளார் என்றாலும், இன்னும் சிலகாலம் அவரை தங்களுடன் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் நினைப்பதாக தெரிகிறது..

வழக்கமாக, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் சில முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப்படுவார்கள்.. அதாவது, கடந்த காலங்களில் தலைமை செயலாளராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன், கிரிஜா வைத்தியநாதன், சண்முகம் உள்ளிட்டோருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டிருக்கிறது.. மேலும், இவர்களுக்கு, ஓய்வு பெற்ற பிறகு ஆலோசகர், பசுமை தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினர் என்ற முக்கிய பொறுப்புகள் எல்லாம் அப்போது வழங்கப்பட்டன.

ஆணையர்: அந்தவகையில், இறையன்புவை தலைமை தகவல் ஆணையராக நியமிக்கவும் ஸ்டாலின் யோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.. அதாவது, பணி ஓய்வு பெறும்போதும் அவருக்கு வேறு சில முக்கிய பதவிகளை தர தயாராகவே இருந்துள்ளது முதல்வர் தரப்பு.

எனவே, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் பணியாற்றும் முக்கிய இடங்களில் ஒன்றினை இறையன்புக்கு கொடுக்க ஸ்டாலின் முன்வந்தாராம்.. குறிப்பாக, தமிழ்நாடு தகவல் ஆணையர் பதவியை அளிக்க நினைத்தாராம்.. காரணம், தலைமை செயலாளருக்கு இணையானது, தலைமை தகவல் ஆணையர் பதவியாகும். இந்த துறைக்கு இறையன்பு பொறுப்பேற்றால், மீண்டும் புதுப்பொலிவு பெறும் என்பதே முதல்வரின் நம்பிக்கையாக இருந்துள்ளது.. இதற்கு சில காரணங்களும் சொல்லப்பட்டன.

திமுக அரசு மிக கவனத்துடன் ஒவ்வொரு விஷயத்தையும் கையாள பார்க்கிறது.. காரணம், 3வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது திமுக அரசு..

பிடிஆர்: சமீபத்திய அமைச்சரவை மாற்றம் குறித்த சலசலப்பும், விமர்சனங்களும் ஏற்கனவே இணையத்தில் றெக்கை கட்டி பறந்தன.. குறிப்பாக எதிர்க்கட்சியினர், பிடிஆர் பதவி மாற்றத்தை தங்கள் வெற்றியாகவே கருதின.. பாஜகவோ, பிடிஆர் பதவி பறிக்கப்பட்டதை தங்கள் சாதனையாகவே கொண்டாடி தீர்த்தன.

அதேபோல, முதல்வரின் முதன்மை செயலாளாராக இருந்த உதயச்சந்திரனின் நியமனமானது, அன்று பெரிதும் பாராட்டும் வகையில் பேசப்பட்ட நிலையில், அந்த பொறுப்பும் மாற்றப்பட்டுவிட்டது.. இதன்காரணமாக, அரசு இயந்திரத்தின் வேகம் குறையுமா என்றெல்லாம் விவாதங்கள் சோஷியல் மீடியாவில் கிளம்பி உள்ளன. அதனால்தான், திமுக அரசு அடுத்தடுத்த காய்களை சரியாக நகர்த்த துவங்கி உள்ளதாம்.

irai anbu IAS and who will be the next chief secretary of tamil nadu

ஆலோசனை: அந்தவகையில், ஆட்சியை சரியான பாதையில் கொண்டு செல்ல அதிகாரிகளின் உதவி அவசியம் என்பதை நன்கு புரிந்து வைத்துள்ளதால்தான், இறையன்பு போன்ற நேர்மையும், துடிப்பும் மிக்க அதிகாரிகளை மீண்டும் பயன்படுத்தி கொள்ள நினைத்ததாம் திமுக மேலிடம்.. ஆனால் இந்த பதவியை ஏற்க இறையன்பு முன்வரவில்லை. தனக்கு பதவி நீட்டிப்போ, ஓய்வு பெற்ற பிறகு புதிய பதவியோ வேண்டாம் என்று சொல்லிவிட்டார்..

அத்துடன், தான் உயிருக்கு உயிராக நேசிக்கும் எழுத்துப்பணியையே இறையன்பு தொடர்வார் என்றும் தெரிகிறது.

ஒருவேளை புதிய தலைமை செயலாளரை நியமிக்க வேண்டி வந்தாலும், தன்னுடைய வேகத்துக்கும், சுறுசுறுப்புக்கும் ஈடுகொடுக்கும் வகையில், "மிஸ்டர் கிளீன்" அதிகாரிகளில் ஒருவரை, புதிய தலைமை செயலாளராக முதல்வர் தேர்வு செய்வார் என்கிறார்கள்.. மேலும், இது தொடர்பாக நன்கு ஆலோசித்தே முடிவெடுப்பார் என்றும் அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள்.

கோட்டை: இதனிடையே, புதிய தலைமை செயலாளர் பதவிக்கு சிவதாஸ் மீனா ஐஏஎஸ் பெயரும் கோட்டையில் பலமாக ஒலிக்க துவங்கி உள்ளது.. என்ன நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+