அதிமுகவை உடைக்க போவதே இந்த "சாமியார்தான்".. எப்போ வேண்டுமானாலும் உள்ளே வர ரெடி? என்னது.. அவரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக கட்சி ஒருவேளை பாஜகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றால் அதிமுகவை உள்ளிருந்து உடைக்க கூட சிலர் தயாராகி வருகிறார்களாம். அதில் முதல் இடத்தில் இருப்பது அதிமுகவை சேராத ஒருவர்.. அவர் ஒரு சாமியார் என்றும் கூறப்படுகிறது.

அதிமுக பாஜக மோதல் உச்சத்தில் உள்ளது. இந்த நிலையில்தான் அதிமுக - பாஜக இடையே மீண்டும் கூட்டணியை உருவாக்க பல்வேறு தரப்புகள் தீவிரமாக முயன்று வருகிறதாம். அதாவது ஒரு பக்கம் பாஜக துணை தலைவர் துரைசாமி தீவிரமாக அதிமுக தலைவர்களுடன் ஆலோசனை செய்து வருகிறார். அதிமுக - பாஜக கூட்டணி அமைவதே சரியாக இருக்கும். அப்போதுதான் இரண்டு தரப்புமே வெற்றிபெற முடியும்.

முக்கியமாக கொங்கு மண்டலத்தில் வெற்றிபெற வேண்டும் என்றால் பாஜகவிற்கு அதிமுக தேவை. அதிமுகவிற்கு பாஜக தேவை. தென் மண்டலத்திலும் அதிமுக தனியாக வெற்றிபெற முடியாது. அப்படி இருக்க மீண்டும் சேருங்கள் என்று ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்களாம்.

Is a god man trying to break the AIADMK party with the help of ex minister against Edappadi Palanisamy?

கூட்டணி பேச்சுவார்த்தை: இன்னொரு பக்கம் கொங்கு மண்டலத்தை சேர்ந்த சில தொழிலதிபர்கள் இரண்டு பக்கமும் பேசி வருகிறார்களாம். அவர்கள் இரண்டு பக்கத்திற்கும் நண்பர்கள் . இந்த நிலையில் நீங்கள் சேர்ந்துதான் போட்டியிட வேண்டும். அப்போதுதான் தேர்தலுக்கு நிதி தருவோம். அப்போதுதான் நீங்கள் வெற்றிபெற முடியும். நீங்கள் வென்றால்தான் நாங்கள் பிஸ்னஸ் செய்ய முடியும்.

திமுக வந்தால் எங்களுக்கு பயன் இல்லை. அதனால் நீங்கள் சேர்ந்து இருப்பதே சரியாக இருக்கும் என்று ஆலோசனை வழங்கி வருகிறார்களாம். இன்னொரு பக்கம் ஓய்வு பெற்ற சில ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் கூட இரண்டு பக்கமும் தூது சென்று கொண்டு இருக்கிறார்களாம். இரண்டு தரப்பிலும் நட்பாக இருக்கும் இவர்கள்.. இந்த கூட்டணி மூலம் சில அனுகூலத்தை பெற முடியும் என்று நம்புகிறார்களாம். அதற்காக இவர்கள் கூட்டணி வைக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

( அதிமுக கூட்டணி உடைய காரணமே அமித் ஷாதானாம்.. அண்ணாமலை இல்லையாமே.. வெளியான சீக்ரெட்? )

மாஜி அமைச்சர்: அதிமுக கட்சிக்கு உள்ளேயே இருக்கும் மாஜி அமைச்சர் ஒருவரும் இதே வேலையில் இருக்கிறார். ஆனால் அவர் ஒருபடி மேலே போய் அதிமுகவை உடைக்கும் திட்டத்திலும் இருக்கிறாராம். தனக்கு பாஜக உறவு முறிவால் பிரச்சனை வரக்கூடாது என்று அவர் நினைக்கிறாராம். இப்படிப்பட்ட நிலையில்தான் அதிமுக கட்சி ஒருவேளை பாஜகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றால் அதிமுகவை உள்ளிருந்து உடைக்க கூட சிலர் தயாராகி வருகிறார்களாம். அதில் முதல் இடத்தில் இருப்பது அதிமுகவை சேராத ஒருவர்.. அவர் ஒரு சாமியார் என்றும் கூறப்படுகிறது.

Is a god man trying to break the AIADMK party with the help of ex minister against Edappadi Palanisamy?

அதாவது அதிமுகவை சேராத.. ஆனால் பிரபலமாக இருக்கும் ஒரு சாமியார்தான் இந்த திட்டத்தில் இருக்கிறார். அவருக்கு மாஜி அமைச்சர் ஒருவரின் சப்போர்ட் உள்ளது. கட்சியை உடைத்து அந்த மாஜி அமைச்சர் கட்டுப்பாட்டில் கட்சியை கொண்டு வர சாமியார் திட்டமிட்டு வருகிறாராம். மாஜி அமைச்சர் கட்டுப்பாட்டில் கட்சி வந்தால்.. அதிமுக தனக்கு அனுகூலமாக இருக்கும். திமுகவுடன் தனக்கு உறவு சரியாக இல்லை.

அதனால் அதிமுகவில் இந்த மாஜி இருக்க வேண்டும். அவர் இருந்தால் திமுகவிடம் இருந்து நம்மை காப்பார்கள் என்று அந்த சாமியார் நினைக்கிறாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+