அண்ணாமலை இல்லாத நேரத்தில்.. அமித் ஷாவிற்கு போன மெசேஜ்.. அனுப்பியது யாருங்கறதுதான் மேட்டரே! போச்சு
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளிநாடு சென்றுள்ள நிலையில், மூத்த தலைவர் எச் . ராஜா அடுத்தடுத்து முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி உருவாவதற்கான சாதகமான சூழ்நிலைகள் ஏற்பட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன.
அண்ணாமலை லண்டன் சென்றுள்ள நிலையில்.. அந்த குழுவின் ஒருங்கிணைப்பாளராக பாஜக மூத்த தலைவரும் தேசிய செயற்குழு உறுப்பினருமான எச்.ராஜா நியமிக்கப்பட்டிருக்கிறார். இதே போல எஸ்ஆர் சேகர், கனகசபாபதி, சக்கரவர்த்தி, ராம.சீனிவாசன், முருகானந்தம் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

எச். ராஜா வேகம்: தமிழ்நாடு பாஜகவில் பழைய மூத்த நிர்வாகியான எச். ராஜா கை மீண்டும் உயர தொடங்கி உள்ளது. எச். ராஜா வேகமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அண்ணாமலை இருந்தவரை எச். ராஜா பெரிதாக எதுவும் பேட்டிகள் கொடுக்கவில்லை. சர்ச்சையாக பேசவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான், எச். ராஜா இப்போது பேசி உள்ளார். அதோடு சமீபத்தில் ஆளுநர் ஆர். என் ரவியை கூட எச். ராஜா சந்தித்தார். அண்ணாமலை இல்லாத நேரத்தில் இந்த சந்திப்பும் கூட கவனம் பெற்றது.
உதாரணமாக நேற்று பேட்டி அளித்த எச். ராஜா, பழனியில் நடைபெற்றது முருகன் மாநாடு அல்ல; அது இந்து விரோத மாநாடு; முருகனை வைத்து தமிழ்நாட்டில் ஏமாற்று அரசியல் செய்வதை இந்துக்கள் ஏற்க மாட்டார்கள் என்று பேட்டி அளித்துள்ளார். இத்தனை நாட்களாக பெரிதாக பேட்டி கொடுக்காமல் அமைதியாக இருந்த எச். ராஜா திடீரென இப்படி பேட்டி அளித்துள்ளது கவனம் பெற்றுள்ளது.
இன்னொரு சந்திப்பு: இப்படி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை படிப்பதற்காக வெளிநாடு சென்றுள்ள நிலையில் கட்சியை தமிழ்நாட்டில் ஒருங்கிணைப்பதற்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக செயல்பட்டு வரும் எச் ராஜா டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் சந்திப்பு நடத்தி உள்ளார். தமிழ்நாடு அரசியல் நிலவரங்கள், தமிழ்நாடு பாஜகவில் நிலவும் அரசியல் ரீதியான பிரச்சனைகள், கட்சியின் நிலைமை, அரசியல் ரீதியாக கட்சிக்குள் மோதல்கள் குறித்து அவர் பேசியதாக கூறப்படுகிறது.
அதோடு தமிழ்நாடு உள்துறை நிலவரம்.. அதாவது சட்ட ஒழுங்கு குறித்தும் எச். ராஜா புகார்களை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது எச். ராஜா மேற்கொண்டு உள்ள இந்த நடவடிக்கை பாஜக வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. அவர் எடுத்து வைக்கும் சில அடிகள் கட்சிக்கு உள்ளேயே விவாதங்களையும் ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக கூட்டணி: அதேபோல் தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணி பற்றியும் பேசி உள்ளாராம். அதாவது அதிமுக - பாஜக கூட்டணி ஏன் முக்கியம். திமுகவை எதிர்க்க ஏன் இந்த கூட்டணி அவசியம் என்றும் பேசி உள்ளாராம்.
மெசேஜ்: இப்படிப்பட்ட நிலையில்தான் அமித் ஷாவிற்கு ஜிகே வாசன் சார்பாக முக்கியமான மெசேஜ் ஒன்று சென்றுள்ளதாம். அதில், அதிமுக - பாஜக கூட்டணியை மீண்டும் உருவாக்க வேண்டும். இல்லையென்றால் சிக்கல் ஏற்படும்.
தமிழ்நாட்டில் நாம் தமிழர், விஜய், அதிமுக, பாஜக என்று திமுக எதிர்ப்பு வாக்குகள் சிதறுகின்றன. அப்படி சிதறினால் திமுகவை வீழ்த்தவே முடியாது. மனஸ்தாபங்களை களைந்து கூட்டணியை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் அமித் ஷாவிற்கு மெசேஜ் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. இதை பற்றி ஆலோசிக்கலாம் என்று அமித் ஷாவும் உறுதி அளித்துள்ளாராம். அண்ணாமலை இங்கே இல்லாத நேரத்தில் அவரின் முடிவிற்கு எதிராக இந்த ஆலோசனைகள் நடக்க போகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
விஜய் Vs உதய் Vs அண்ணாமலை? திராவிடக் கடப்பாரைகளை வளைத்த Gen Z! இளைஞர்களால் மாறும் அரசியல் களம்! -
அண்ணாமலைக்கும் அடைக்கலம் தரும் திருமா.. வாழ்த்து சொன்ன கையோடு அடுத்து சொன்ன மேட்டரை பாருங்க -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
அண்ணாமலை மாயமான்.. ஆர்எஸ்எஸ்-இன் புதிய அவதாரம்.. வீரமணி விமர்சனம் -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
அண்ணாமலை போடுவது மாரீச மான் வேடம்.. ஆர்எஸ்எஸ்-ன் 2,501 அமைப்பு அது.. சண்முகம் ஒரே போடு! -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்!












Click it and Unblock the Notifications