அண்ணாமலையை கைவிட்ட டெல்லி? அமித் ஷா யோசித்து எடுத்த முடிவு? ரங்கராஜ் பாண்டே சொன்ன தகவல்
சென்னை: பல விஷயங்களை யோசித்துதான் அண்ணாமலை பற்றி அமித் ஷா முடிவுகளை எடுப்பார். பாஜக - அதிமுக கூட்டணி உறுதி. அண்ணாமலை இருப்பாரா.. அவர் பதவி என்ன ஆகும் என்பது 5-6 நாட்களில் தெரியும் என்று மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.
அமித்சா-எடப்பாடி சந்திப்பு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. சந்திப்பு இரு தரப்பிலும் சுமுகமாகவும் சீரியசாகவும் நடந்துள்ளன. எடப்பாடியின் நடவடிக்கையில் எப்போதும் கடுகடுப்பாக இருக்கும் அமித் ஷா, இந்த முறை இயல்பாக இருந்துள்ளார். தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி மட்டுமே திமுக கூட்டணியை வீழ்த்தும். வேறு கூட்டணிக்கு அரித்மேட்டிக் வாய்ப்புகள் கிடையாது. வேறு கூட்டணியால் எதுவும் செய்ய முடியாது.

தமிழ்நாட்டில் கடந்த லோக்சபா தேர்தலில் திமுகவின் வெற்றி சதவிகிதம் பல தொகுதிகளில் குறைவுதான். பாஜக வாக்கு சதவிகிதம்தான் பல இடங்களில் திமுக வெற்றிக்கு காரணம். அதிமுக - பாஜக சேர்ந்து இருந்தால் திமுகவை பல தொகுதிகளில் வெல்ல விடாமல் தடுத்து இருக்கலாம், என்று இவர்கள் பேசி உள்ளனர்.
அண்ணாமலை பதவி நீக்கம்?
இந்த நிலையில் 2023ல் அதிமுக பாஜக கூட்டணி உடைவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக கருதப்படும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை..பாஜக தமிழக தலைவர் பதவியில் இருந்து விலகலாம் என கட்சிக்கு நெருக்கமான வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்ணாமலை இருந்தால் கூட்டணி அமைவது கஷ்டம் என்று டெல்லி இந்த முடிவை எடுக்கலாம் என்று கூறப்படுகிறது.
அண்ணாமலையின் சமீபத்திய பேட்டிகளும் கூட இதை உணர்த்துவதாகவே இருக்கின்றன. இன்னும் 2 வாரங்களில் நான் சாதாரண ஆளாக இருக்கலாம் என்றும் கூட அண்ணாமலை இக்கு வைத்து பேசி உள்ளார்.

2026 மாநிலத் தேர்தலில் கட்சிகள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றால் கூட்டணி நெருக்கமாக இருக்க வேண்டும். அதுமட்டுமன்றி பாஜக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளின் முகமும் கவுண்டர் ஜாதியாக இருப்பதை பாஜக விரும்பவில்லை. எடப்பாடி அண்ணாமலை இருவரும் ஒரே ஜாதி. அதுவே பாஜகவிற்கு வேறு ஜாதியை சேர்ந்தவர் தலைவராக இருந்தால் அது கூட்டணிக்கு இன்னும் வலு சேர்க்கும். முக்கியமாக தென் மண்டலத்தில் கூட்டணிக்கு பலம் தரும். இதை எல்லாம் கருத்தில் கொண்டு அண்ணாமலையை மாற்ற ஒரு ஆலோசனை நடக்கிறதாம்.
அமித் ஷா-எடப்பாடி சந்திப்பு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. சந்திப்பு இரு தரப்பிலும் சுமூகமாகவும் சீரியசாகவும் நடந்துள்ளன. அதிமுக தொடர்பான விவகாரங்களில் எப்போதும் கடுகடுப்பாக இருக்கும் அமித் ஷா, இந்த முறை இயல்பாக இருந்துள்ளார். தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி மட்டுமே திமுக கூட்டணியை வீழ்த்தும். வேறு கூட்டணிக்கு அரித்மேட்டிக் வாய்ப்புகள் கிடையாது. வேறு கூட்டணியால் எதுவும் செய்ய முடியாது.
ரங்கராஜ் பாண்டே பேட்டி
இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், அண்ணாமலைக்கு கூட்டணி பற்றி ஒரு கருத்து இருக்கிறது. அதேபோல் அமித் ஷாவிற்கு ஒரு கருத்து இருக்கிறது. அண்ணாமலை தமிழ்நாட்டில் இருப்பதால் அவருக்கு இங்கே இருக்கும் கட்சிகள், நிலவரம் கூட்டணி பற்றிய ஒரு பார்வை இருக்கும். அதுவே அமித் ஷா டெல்லியில் இருப்பதால் அவருக்கு இங்கே இருக்கும் கட்சிகள், கூட்டணி பற்றியே வேறு பார்வை இருக்கும். இது வேறு வேறு கருத்துகள்தான். இதன் அர்த்தம் அண்ணாமலை கூட்டணியை ஏற்கவில்லை . அண்ணாமலையை தூக்க போகிறார்கள் என்றல்ல.
அதிமுக - பாஜக கூட்டணி அமையும் என்றால் அதற்கு நான் தடை அல்ல என்று அண்ணாமலை சொல்கிறார். நான் வெளியேற போகிறேன்.. விலக போகிறேன் என்று அவர் எங்குமே சொல்லவில்லை. டெல்லி சொல்வதை அவர் கேட்க போவதாகவே சொல்கிறார். அவ்வளவுதான். அண்ணாமலை பாஜக - அதிமுக கூட்டணி பற்றி கருத்துக்கள் சொல்கிறார். ஆனால் இதன் அர்த்தம் அவர் கூட்டணியை எதிர்க்கிறார் என்பதல்ல. அண்ணாமலை இல்லாமல்தான் கூட்டணி அமைய வேண்டும் என்று இல்லை.
அண்ணாமலையை எடப்பாடி தூக்க சொன்னார் என்பதும் இல்லை. அண்ணாமலை இருந்தால் கூட்டணி வைக்க மாட்டேன் என்று எடப்பாடி சொன்னதாகவும் அர்த்தம் இல்லை. இது பாஜகவின் கட்சி. அவர்களுக்கு பல கருத்துக்கள், திட்டங்கள் இருக்கும். அமித் ஷாவிற்கு அரசியல் இருக்கும். அமித் ஷாவின் அரசியல் அறிவை குறைவாக எடை போட முடியாது. அமித் ஷா ஒரு முடிவு எடுத்தால்.. அவர் சாதாரணமாக எடுக்க மாட்டார். பலரிடம் பேசிவிட்டுதான் முடிவு எடுப்பார்கள். அதை அண்ணாமலையை கைவிட்டுவிட்டார் என்று சொல்ல முடியாது.
பல கணக்குகளை பார்த்து.. பல விஷயங்களை யோசித்துதான் அண்ணாமலை பற்றி அமித் ஷா முடிவுகளை எடுப்பார். பாஜக - அதிமுக கூட்டணி உறுதி. அண்ணாமலை இருப்பாரா.. அவர் பதவி என்ன ஆகும் என்பது 5-6 நாட்களில் தெரியும். அண்ணாமலை மீது ஏதாவது முடிவு எடுத்தால்.. அதை அதிமுகவுடன் ஒப்பிட முடியாது. அதிமுக காரணம் என்று சொல்ல முடியாது. எல்லாம் கணக்கு போட்டு.. எதிர்காலத்தை கருத்தில் கொண்டே முடிவு எடுப்பார்கள்.
-
"அண்ணாமலையை விட்ற கூடாது!" புதிய இயக்கத்தில் முதல் ஆளாக இணைந்த கூமாபட்டி தங்கபாண்டி! பின்னணி என்ன? -
அண்ணாமலைய வச்சு மாஸ்டர் பிளான்! பின்னணியில் பிரபலம்.. பாஜகவின் A டீமா? 50% டெல்லி ப்ளூபிரிண்ட் ரெடி -
லதா ரஜினிகாந்த் 'மக்கள் மேடை' இயக்கத்தை நேற்றுதான் தொடங்கினாரா? தீயாகப் பரவிய தகவல்.. உண்மை என்ன? -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
அண்ணாமலைக்கும் அடைக்கலம் தரும் திருமா.. வாழ்த்து சொன்ன கையோடு அடுத்து சொன்ன மேட்டரை பாருங்க -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
அண்ணாமலை மாயமான்.. ஆர்எஸ்எஸ்-இன் புதிய அவதாரம்.. வீரமணி விமர்சனம் -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி












Click it and Unblock the Notifications