400 தொகுதிகளில் வெல்வது சாத்தியமா? லோக்சபா தேர்தல் முடிவை கணித்த அண்ணாமலை! பாஜகவினர் உற்சாகம்
சென்னை: நடந்து வரும் லோக்சபா தேர்தலில் பாஜக மத்தியில் ஆட்சியை பிடிக்காது என எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. இந்நிலையில் தான் பாஜக கூட்டணியின் இலக்கான 400 தொகுதி கிடைக்குமா? என்ற கேள்விக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார்.
நம் நாட்டில் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த மாதம் 19 ம் தேதி முதற்கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. அதன்பிறகு கடந்த மாதம் 26ம் தேதி, கடந்த 7 ம் தேதி, 13ம் தேதி என மொத்தம் 4 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துவிட்டது.

இன்னும் 3 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தற்போதைய சூழலில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசம் என அனைத்து தென்மாநிலங்களிலும் லோக்சபா தேர்தல் நடந்து முடிந்து விட்டது.
இனி நடக்கும் 3 கட்ட லோக்சபா தேர்தல்களின்போது வடமாநிலங்களில் உள்ள தொகுதிகளில் தான் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இந்த லோக்சபா தேர்தலை பொறுத்தமட்டில் மத்தியில் மீண்டும் 3வது முறையாக ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் பாஜக உள்ளது. இதற்காக லோக்சபா தேர்தலில் 370 தொகுதிகளை பாஜக கைப்பற்ற வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பாஜக கூட்டணி மொத்தம் 400 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என திட்டமிட்டு பணியாற்றி வருகின்றனர்.
அதேவேளையில் பாஜக மீண்டும் வென்று மத்தியில் ஆட்சியமைப்பதை தடுக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா' கூட்டணி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே தான் லோக்சபா தேர்தலின் பொதுமக்களின் மனநிலையை பார்க்கும்போது மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வராது. பாஜகவால் 370 இடங்களிலும், பாஜக கூட்டணியால் 400 தொகுதிகளையும் வெல்ல முடியாது. மத்தியில் ‛இந்தியா' கூட்டணி ஆட்சி அமையும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
அதோடு தோல்வி பற்றி அறிந்தே தான் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் 400 தொகுதி இலக்கு என்ற கோஷத்தை கைவிட்டுள்ளனர். அதோடு மதரீதியிலான பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர் என எதிர்க்கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் தான் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மகாராஷ்டிராவில் தேர்தல் பிரசாரத்தில் உள்ளார்.
இந்நிலையில் தான் அண்ணாமலையிடம், ‛‛பாஜக கூட்டணி 400 தொகுதிகளை கைப்பற்றுமா?'' என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு அண்ணாமலை, ‛‛தற்போது 4 கட்டங்களாக மொத்தம் 380 லோக்சபா தொகுதிகளில் தேர்தல் முடிவடைந்துள்ளது. இன்னும் 3 கட்டங்களாக 163 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் மற்றும் டெல்லி உட்பட பல மாநிலங்களில் உள்ள தொகுதிகள் அடங்கும். மேலும் அதிக கவனம் பெற்ற தொகுதிகளுக்கான தேர்தல்கள் இனி தான் நடைபெற உள்ளது.
என்னை பொறுத்தவரை பாஜக 370 தொகுதிகளில் வெல்லும். அதேபோல் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 400க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றும். இது உண்மையில் சாத்தியம். அதோடு இந்த இலக்கை அடைவதற்கான பாதையில் நாங்கள் உள்ளோம். இதனால் 100 சதவீதம் சாதித்து காட்டுவோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்'' என்றார்.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications