இப்படி ஒன்னு நடக்க வாய்ப்பிருக்கோ? திக்குமுக்காட வைத்த மோடி.. மொத்த வாக்குகளும் பாஜக கிட்ட போயிருமோ?
சென்னை: தேர்தலை எதிர்நோக்கி ஜரூர் பணிகளை முடுக்கிவிட்டு வருகிறது மேலிட பாஜக.. அந்தவகையில், தமிழகத்திலும் அதன் பார்வை திரும்பியிருக்கிறது.. அதுவும், தேமுதிகவில் அழுத்தமாகவே குறி விழுந்திருக்கிறது.. இது தொடர்பாக ஸ்பெஷல் நியூஸ் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.
பாஜக மேலிடத்தை பொறுத்தவரை, தேமுதிக விஜயகாந்த் மீது தனி பாசம் வைத்திருக்கிறது.. நிறைய மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கிறது... அதுவும் பிரதமர் மோடிக்கு விஜயகாந்த் என்றால், அலாதி ப்ரியம் உண்டு.. ஒருமுறை பிரதமர் மோடி, விஜயகாந்த்தின் கன்னத்தை தட்டி பாராட்டியதை, தமிழகமே அன்று ஆச்சரியமாக பார்த்தது..

விஜயகாந்த்: அந்தவகையில், தேமுதிகவை கைவிடாமல், பாஜக தன்னுள் இறுக்கி பிடித்து வருவதாக தெரிகிறது. கடந்தமுறை தேர்தலின்போதுகூட, தேமுதிகவை மட்டுமாவது கூட்டணிக்குள் சேர்த்து கொள்ளும்படி, எடப்பாடி பழனிசாமியிடம் பாஜக தலைமை பலமுறை வலியுறுத்தியது.. ஆனால், எடப்பாடி பழனிசாமி பிடிவாதமாக மறுத்துவிட்டாராம்.
இப்படிப்பட்ட சூழலில்தான், விஜயகாந்தின் மரணம், தேமுதிகவை நிலைகுலைய வைத்துவிட்டது. விஜய்காந்தின் இறுதி அஞ்சலிக்கு செல்ல சென்னைக்கு வர திட்டமிட்டிருந்தாராம் பிரதமர் மோடி.
துக்க விழா: ஆனால், ராமர் கோவில் திறந்து கும்பாபிஷேகம் செய்கிற சூழலில், ஒரு துக்க நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டாம் என்று வேதம் கற்றறிந்த ஆச்சாரியர்கள் அறிவுறுத்தினார்களாம்.
அதனால்தான், விஜய்காந்த் இறுதி சடங்கிற்கு வருவதை தவிர்த்த மோடி, சோஷியல் பக்கத்திலும் இரங்கல் செய்தி பதிவு செய்திருந்தார். அதுமட்டுமல்லாமல், மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் பலரையும் சென்னைக்கு அனுப்பி வைத்திருந்தார். அந்தவகையில், இறுதிச்சடங்கில் முழு நேரமும் இருந்து அஞ்சலி செலுத்திவிட்டு போனார் மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்.
திருச்சி மோடி: இதனிடையே, விஜய்காந்த்தின் இறுதி ஊர்வலத்தில் தேமுதிக தொண்டர்கள் மட்டுமல்லாமல் பொது மக்களும் விஜய்காந்திற்காக உருகியதை, கவனமாக கவனித்திருக்கிறது மத்திய உளவுத்துறை.
திருச்சி விழாவுக்கு வந்திருந்த மோடி, விஜய்காந்தை புகழ்ந்து பெருமைப்படுத்தினாராம்.. அதுமட்டுமல்ல, விஜய்காந்தை பெருமைப்படுத்தும் வகையில், மத்திய அரசு சார்பில் முக்கிய விருது ஒன்றை அறிவிக்கவும் டெல்லி ஆலோசிப்பதாக, நம்முடைய ஒன் இந்தியாவில் பிரத்யேகமான செய்தியை வெளியிட்டிருந்தோம்.
விருது: அதுதான் இன்றைக்கு டெல்லியில் நடந்துள்ளது.. விஜயகாந்த்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒரு பின்னணி காரணத்தையும் பாஜகவினர் சொல்கிறார்கள்.. குறிப்பாக, "பாஜக தலைமையில் ஒரு வலுவான கூட்டணி அமைத்து போட்டியிட திட்டமிடப்பட்டிருக்கிறது. வலுவான கூட்டணி அமையாத பட்சத்தில் பாஜக தனித்துப் போட்டியிட விரும்புகிறது. பாஜக கூட்டணிக்குள் தேமுதிக இருந்தாலும், இல்லாது போனாலும் விஜய்காந்தின் ஆதரவு வாக்குகளை பாஜக பக்கம் திருப்பவே இந்த திட்டம்.
அதாவது, பாஜக கூட்டணியில் தேமுதிக இருந்தால் அக்கட்சியின் வாக்குகள் பாஜகவுக்கு கிடைத்துவிடும். அதுவே, பாஜக தனித்துப் போட்டியிட்டால், விஜய்காந்தின் மீது பாசம் கொண்ட நடுநிலை வாக்காளர்களை பாஜக பக்கம் கொண்டு வர வேண்டும்.
சாத்தியமா? : நாடாளுமன்ற தேர்தல் என்பதால், தேமுதிகவுக்கு வாக்களித்தாலும் அக்கட்சியில் ஜெயிக்க முடியாது.. அதனால் மோடிக்கு வாக்களிப்போம் என்கிற கான்செப்டில் பாஜகவை ஆதரிப்பார்கள் என்று யோசித்துத்தான் விஜய்காந்தை கௌரவப்படுத்தி விருதை அறிவித்திருக்கிறது எங்கள் ஆட்சித் தலைமை" என்கிறார்கள் பாஜகவினர்.
எனினும், தேமுதிகவின் வாக்குகளை யார் அறுவடை செய்ய போகிறார்கள் ? யாருக்கு சாதகமாக போகிறது என்று தெரியவில்லை.. எப்படியும் வட மாவட்ட கிராமங்களில், அந்த வாக்குகளுக்கு பாமக குறிவைக்கலாம் என்று சொல்லப்பட்டாலும், பெரும்பாலான வாக்குகள் திமுக பக்கம், வரவும் வாய்ப்பிருப்பதாக சொல்கிறார்கள். இதற்கு ஒரு உதாரணமும் சொல்லப்படுகிறது.
ஸ்டாலின்: கடந்த சட்டசபை தேர்தலின்போது, அமமுகவுடன் கூட்டணி வைத்து படுதோல்வியை தேமுதிக சந்தித்திருந்த நேரமது. இதனால், அதிர்ச்சியடைந்த தேமுதிக நிர்வாகிகள் பலர், அக்கட்சியில் இருந்து வெளியேறி, திமுக பக்கம் வர முடிவு செய்து, அந்தந்த திமுக மாவட்ட செயலர்களிடம் தங்களுடைய விருப்பத்தையும் சொல்லியிருக்கிறார்கள்.
இந்த விஷயம் முதல்வர் ஸ்டாலினுக்கு பறந்தது. உடனே திமுக மாவட்ட செயலாளர்களுக்கு போனை போட்ட ஸ்டாலின், "தேமுதிகவினரை, திமுகவுக்குள் சேர்த்து, விஜயகாந்த் மனம் நோகும்படி யாரும் நடந்துக்கொள்ளாதீங்க" என்று உத்தரவு போட்டாராம்.
உள்ளாட்சி தேர்தல்: இந்த நிகழ்வைதான் இப்போது தேமுதிகவில் சிலர் சுட்டிக்காட்டுகிறார்கள். அத்துடன், விஜயகாந்தின் இறுதி நிகழ்ச்சியின்போது, தமிழக அரசு செய்த செயல்பாடுகளையும் நன்றியுடன் நினைத்து பார்க்கிறார்களாம். எனவே, தேமுதிகவின் ஓட்டுக்கள், பெரும்பாலும் திமுகவுக்கு செல்ல வாய்ப்பிருப்பதாகவும் சொல்கிறார்கள்..
இப்படி மாறி மாறி கருத்துக்களும், யூகங்களும் வட்டமடித்து கொண்டிருந்தாலும், தேமுதிக ஓட்டுக்களால் யார்தான் பலன் அடைய போகிறார்கள்? பாஜகவா? திமுகவா? பாமகவா? ளதெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications