அதிக சீட்.. ஸ்டாலினின் மெகா "நேஷனல் பிளான்".. "அப்படி" ஒரு நிலைமை வந்தால்.. திமுகவிற்குத்தான் ஜாக்பாட்
தொங்கு நாடாளுமன்றம் உருவாகும் பட்சத்தில்.. காங்கிரசை பல்வேறு கட்சிகள் ஏற்றுக்கொள்ள வாய்ப்பு இல்லை.
சென்னை: 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் அதிக இடங்களில் போட்டியிடும் திட்டத்தில் திமுக இருப்பதாக திமுகவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் வென்ற குஷியில் இருக்கும் திமுக - காங்கிரஸ் கூட்டணி 2024 லோக்சபா தேர்தலுக்காக தயாராக தொடங்கி உள்ளது. இந்த வெற்றி தொடர் வெற்றிகளை சந்தித்து வரும் திமுகவிற்கு மிகப்பெரிய உந்துதலாக அமைந்து உள்ளது.
இந்த நிலையில்தான் லோக்சபா தேர்தலில் கடந்த முறையை விட அதிக இடங்களில் போட்டியிடலாம் என்ற ஆலோசனையில் திமுக இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு பின் பல்வேறு திட்டங்களை திமுக வகுத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

திமுக
சமீபத்தில் சென்னையில் முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் அவர் தன்னுடைய தேசிய அளவிலான திட்டம் குறித்து பேசினார். இந்த நிகழ்விற்கு முன் பேசிய பரூக் அப்துல்லா.. முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்கிறார். பாஜகவை கட்டுப்படுத்த அவரை போன்ற ஒருவர் தேசிய அரசியலுக்கு தேவை. தேசிய அரசியலில் அவர் இருந்தால் மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இதனால் ஸ்டாலின் தேசிய அரசியலுக்கு வர வேண்டும் என்று பரூக் அப்துல்லா பேசி இருந்தார். இதையடுத்து செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில்.. தான் ஏற்கனவே தேசிய அரசியலுக்கு வந்துவிட்டதாகவும், தேசிய அரசியலில்தான் தான் இருப்பதாகவும் பேசி இருந்தார்.

முதல்வர் ஸ்டாலின்
மேலும் பிறந்தநாள் விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகாலமாக வெற்றிபெற்றதற்கு ஒற்றுமை தான் காரணம். இந்த ஒற்றுமை தேசிய அளவில் இருக்க வேண்டும். தமிழ்நாட்டை போல் ஒற்றுமையான கூட்டணியை தேசிய அளவில் அமைக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டாலே வெற்றி நிச்சயம். அதுதான் இப்போது முக்கியம். காங்கிரஸ் அல்லாத கூட்டணிக்கு விடுக்கும் வாதங்களை நிராகரிக்க வேண்டும். அரசியல் கட்சிகள் விட்டுக்கொடுத்து பாஜகவுக்கு எதிராக ஒன்றுசேர வேண்டும். காங்கிரஸ் இல்லாமல் கூட்டணி அமைக்க கூடாது. அப்படியே அமைத்தாலும் அது கரை சேராது. தேர்தலுக்கு பின் கூட்டணி என்பதும் நடைமுறைக்கு சரியாக இருக்காது, என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

ஸ்டாலின்
இந்த விழாவில் ஸ்டாலின் பிரதமர் ஆக வேண்டும் என்றும் கூட பரூக் அப்துல்லா கூறி இருந்தார். இதற்கான திட்டங்களை திமுகவும் வைத்து உள்ளதாக கூறப்படுகிறது. 2024ல் தொங்கு நாடாளுமன்றம் உருவாகும் பட்சத்தில்.. காங்கிரசை பல்வேறு கட்சிகள் ஏற்றுக்கொள்ள வாய்ப்பு இல்லை. உதாரணமாக தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, திரிணாமுல் காங்கிரஸ் போன்றவை காங்கிரசை ஏற்றுக்கொள்ள வாய்ப்பு இல்லை. அப்படி இருக்கும் போது இந்த கட்சிகளுக்கு நட்பாக இருக்கும் ஒருவர்தான் பிரதமர் ஆக முடியும். அதாவது தொங்கு நாடாளுமன்றம் உருவானால், எதிர்க்கட்சிகள் ஒன்று இணைந்து ஆட்சி அமைக்கும். அப்படிப்பட்ட சமயத்தில் எதிர்க்கட்சிகள் எல்லாம் ஏற்றுக்கொள்ளும் ஒருவர் பிரதமராக வேண்டும். இதை மனதில் வைத்தே திமுக காய்களை நகர்த்தி வருகிறதாம்.

காங்கிரஸ்
காங்கிரஸ் சார்பாக ராகுல் பிரதமர் ஆக வேண்டும் என்பதே திமுகவின் எண்ணமாம். காங்கிரஸ்தான் தலைமையேற்க வேண்டும். அதில் தவறு இல்லை என்பதில் திமுக உறுதியாக உள்ளது. இதை முதல்வர் ஸ்டாலினும் அழுத்தமாக சொல்லி இருக்கிறார். ஆனால் ஒருவேளை தொங்கு நாடாளுமன்றம் உருவாகி, காங்கிரஸ் தலைமை மற்ற கட்சிகள் ஏற்கவில்லை என்றால் அப்போது ஸ்டாலினை பிரதமராக்கலாம் என்ற திட்டமும் திமுக வசம் உள்ளதாம். இதை மனதில் வைத்தே நாடாளுமன்ற தேர்தலில் கூடுதல் இடங்களில் போட்டியிட திமுக முடிவு செய்துள்ளதாம்.

திமுக
கடந்த தேர்தலில் 20 இடங்களில் திமுக போட்டியிட்ட நிலையில் இந்த முறை 25 - 28 இடங்களில் கூட போட்டியிடலாம் என்ற திட்டத்தில் இருக்கிறதாம். காங்கிரசுக்கு குறைவான சீட்டுகளை கொடுக்கலாம். அதேபோல் கூட்டணி கட்சிகளுக்கு 2 சீட் கொடுத்தாலும், அனைத்திலும் திமுக சின்னத்தில் போட்டியிட வைக்கலாம் என்ற திட்டத்திலும் இருக்கிறதாம். நாடாளுமன்றத்தில் தற்போது 3வது பெரிய கட்சி திமுகதான். அந்த ஸ்டேட்டஸை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் திமுக உறுதியாக இருக்கிறதாம். அதோடு தொங்கு நாடாளுமன்றம் உருவானால் அப்போது தங்களுக்கும் பவர் இருக்க வேண்டும் என்பதால் இத்தனை இடங்களில் போட்டியிட திமுக பிளான் செய்துள்ளதாம்.
-
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம் -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ்










Click it and Unblock the Notifications