2 அமைச்சர்களுக்கு பெரிய சிக்கல்! வேறு வழியே இல்லை.. அமைச்சரவை மாற்றம்? ஸ்டாலின் முடிவு என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆளும் திமுக அமைச்சர்களுக்கு எதிரான பல்வேறு சொத்து குவிப்பு வழக்குகளில் மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து அமைச்சரவை மாற்றம் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆளும் திமுக அமைச்சர்களுக்கு எதிரான பல்வேறு சொத்து குவிப்பு வழக்குகள் அடுத்தடுத்து விசாரணைக்கு வர தொடங்கி உள்ளன. அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோருக்கு எதிராகவே இந்த வழக்குகள் பிப்ரவரி மாதம் முழுக்க விசாரணை செய்யப்பட்டது.

cabinet Udayanidhi Stalin DMK M K Stalin

சுமோட்டோ வழக்கு: அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் உள்ளிட்டோருக்கு எதிராகச் சொத்துக் குவிப்பு வழக்குகள் தொடரப்பட்டு இருந்த நிலையில், அந்த வழக்கில் இருந்து கீழமை நீதிமன்றங்கள் அவர்களை விடுவித்தன.

இந்த உத்தரவுகளைத் தீர்ப்புகளை மறு ஆய்வு செய்யும் வகையில், சென்னை ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்குகளைத் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். ஆனாலும், தாமாக முன்வந்து வழக்குகளை விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதற்கு சுப்ரீட் கோர்ட் தடை விதிக்க மறுத்த நிலையில்தான் தற்போது சென்னை உயர் நீதிமன்றம் இதில் தீர்ப்பு வழங்கி உள்ளது.

இந்த உத்தரவுகளை மறுஆய்வு செய்யும் வகையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்து கொண்டார் . வழக்குகளில் அமைச்சர்கள் தரப்பிலும், லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்ததை அடுத்து, இந்த இரண்டு வழக்குகளின் தீர்ப்பை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தேதி குறிப்பிடாமல் தள்ளி வைததார். இந்த வழக்குகளில் இன்று தீர்ப்பு அளித்த நீதிபதி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோரை விடுவித்தது தவறானது அதை ரத்து செய்கிறேன். வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்து விசாரணை தொடங்க ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார் அடுத்த மாதம் 9 ம் தேதி இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.

அமைச்சரவை மாற்றம்: இதை தொடர்ந்து அமைச்சரவை மாற்றம் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் விரைவில் அமைச்சரவை மாற்றம் நடக்க உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வந்த.. 2 அமைச்சர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட உள்ளார்களாம். அதேபோல் 1 புதிய அமைச்சர் களமிறக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் விரைவில் வெளிநாடு செல்ல உள்ளார். இதற்காக மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து திமுகவில் அதிரடி மாற்றங்கள் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சர்கள் மீதான வழக்கு, வெளிநாடு செல்வது, 2026 சட்டசபை தேர்தல், ஆட்சி அதிகாரத்தில் நிலவும் பிரச்சனைகள் உள்ளிட்ட பல விஷயங்களை மனதில் வைத்து இந்த அமைச்சரவை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. முக்கியமாக முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்லும் பயணத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளதாம்.

சீனியர்கள் பலர் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை விசாரணை வளையத்தில் இருப்பதால்.. முதல்வர் ஸ்டாலின் மொத்தமாக ஆட்டத்தை கலைத்து ஆடும் திட்டத்தில் இருக்கிறாராம். இதனால் 2026 சட்டசபை தேர்தலை மனதில் வைத்து சில வாரங்களில் தமிழ்நாடு அரசியலில் மாபெரும் மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. முக்கியமாக அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்கும் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

போக்குவரத்து துறை, மின்சார, அமலாக்கத்துறை ஆகியவை மாற்றம், உள்ளாட்சி துறை மாற்றம், விளையாட்டு துறை மாற்றம்.. ஆகிய துறைகளில் மாற்றங்கள் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது .

உதயநிதி ஸ்டாலின்: புதிய அமைச்சர்கள் ஆட்சியில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. இளம் அமைச்சர்கள் பெரும்பாலும் ஆட்சி அதிகாரத்தில் சேர்க்கப்பட வாய்ப்புகள் உள்ளன. பெரிய அளவில் மாவட்ட செயலாளர்கள் சேர்க்கப்பட வாய்ப்புகள் உள்ளன என்று திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+