சீமான் பேச்சால்.. கொதித்து போன சீனியர்ஸ்.. இதைவிடக்கூடாது.. ஸ்டாலினுக்கு போன மெசேஜ்! அடுத்து ஆக்சன்?
சென்னை: கலைஞரைப் பற்றி இழிவாக பாடல் பாடிய நாம் தமிழர் கட்சியின் சாட்டை முருகனை கைது செய்து தனக்கு நெருக்கடி தருவதாக குற்றம் சாட்டிய சீமான், அதே பாடலை நான் பாடுகிறேன் ; என்னை கைது செய்துப் பாருங்கள் என்று மிக ஆவேசமாக சவால் விடுத்தார். இந்த விவகாரம் தற்போது புதிய கோணத்தை அடைந்து உள்ளது.
சமீபத்தில் குற்றாலத்திற்கு குளிக்க வந்த சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார். தென்காசி மாவட்டம் குற்றாலம் வந்த சாட்டை துரைமுருகன் திருச்சி சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக புகார் வைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரச்சார மேடையில் பேசியதற்காக கைது செய்யப்பட்டார்.
விக்கிரவாண்டியில் பிரச்சாரம் செய்ய சென்ற சாட்டை துரைமுருகன் முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோர் குறித்து அவதூறாக பேசினார். முதல்வரை கடுமையாக விமர்சனம் செய்து, கடுமையான சொற்களால் விமர்சனம் செய்தார்.
இதையடுத்து சாட்டை துரைமுருகனுக்கு எதிராக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. திருச்சி காவநிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் அதில் வழக்கு பதியப்பட்டு குற்றாலத்திற்கு குளிக்க வந்த சாட்டை துரைமுருகன் இன்று கைது செய்யப்பட்டார். தென்காசி மாவட்டம் குற்றாலம் வந்த சாட்டை துரைமுருகன் திருச்சி சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அதன்பின் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து கலைஞரைப் பற்றி இழிவாக பாடல் பாடிய நாம் தமிழர் கட்சியின் சாட்டை முருகனை கைது செய்து தனக்கு நெருக்கடி தருவதாக குற்றம் சாட்டிய சீமான், அதே பாடலை நான் பாடுகிறேன் ; என்னை கைது செய்துப் பாருங்கள் என்று மிக ஆவேசமாக சவால் விடுத்தார்.
சீமான் பேச்சு - திமுக கோபம்: சீமானின் இந்த ஆவேசத்தை திமுக தொண்டர்கள் முதல் சீனியர்கள் வரை ரசிக்கவில்லை. அமைச்சர்கள் சேகர் பாபு, கீதா ஜீவன் போன்றோர் சீமானின் பேச்சைக் கண்டித்தனர். திமுகவை அரசியல் ரீதியாக யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் ; அதற்கு நாம் பதிலடி தருவோம்.
ஆனால், தலைவர் கலைஞரை சீமான் இழிவாக பேசுவார் , முடிந்தால் கைது செய்து பார்னு தெனாவெட்டாகப் பேசுவார். இருந்தும் நாம் சும்மா இருந்தால் எப்படி ? அந்த ஆள் தான், கைது செய் கைது செய்யுன்னு சொல்லுறாரே? கைது செய்து சட்டத்தின் வலிமையை நாம் காட்ட வேண்டும். அதனால், கலைஞரை இழிவாகப் பேசிய அந்த நபரை கைது செய்யுங்கள்.
இல்லையெனில், தொண்டர்கள் ஆவேசப்படுவதை தடுக்க முடியாது. அப்படி ஆவேசப்பட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை உருவாகும் என்று தங்களின் கோபத்தை திமுக மா.செ.க்களும், மாவட்ட நிர்வாகிகளும். அறிவாலய த்துக்குத் தெரியப்படுத்தி வருகிறார்கள். இதே கருத்தைத்தான் மூத்த தலைவர்களும் ஸ்டாலினிடம் வலியுறுத்தியுள்ளனர்.
அப்போது, அவர்களிடம், திமுகவுக்கு நான் தான் போட்டின்னு சொல்லி அரசியல் லாபம் பார்க்க நினைக்கிறாரு அந்த நபர் (சீமான்). அதற்கு நாம் இடம் கொடுக்கணுமா? என்று சொல்லியிருக்கிறார். அதற்கு சீனியர்கள், சீமானுக்கு எதிராக ஆக்சன் எடுக்கலைன்னா, இதே மாதிரி பாஜககாரனும் பாமககாரனும் வேறு நபர்களும் பேசுவதற்கு துணிச்சல் வரும். அதை எப்படி தடுக்க முடியும்? என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்கள். இதனையடுத்து யோசிக்கத் தொடங்கியிருக்கிறாராம் ஸ்டாலின். மேலும், அதிகாரிகளிடம் இது பற்றி விவாதித்துள்ளாராம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications