இந்தியா கூட்டணி போகும் எடப்பாடி? அந்த மாஜி "கழன்றுகிட்டாராமே".. அதிமுக அல்லோகலம்.. இதுதான் ரகசியமா?
சென்னை: லோக்சபா தேர்தலில் கூட்டணி இல்லை என்றால்.. அவர் எங்கே செல்வார். இந்தியா கூட்டணிக்கு செல்கிறாரோ? ராகுல் காந்தி சோனியா காந்தியை பெருமையாக பேசுகிறாரே எடப்பாடி? அவரிடம் என்ன எதிர்பார்க்க முடியும்., என்று ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் சமீபத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் மதிப்பிற்குரிய சோனியா காந்தி, மதிப்பிற்குரிய ராகுல் காந்தி என்று குறிப்பிட்டு பேசி இருந்தார். பாஜகவுடன் கூட்டணியை முறித்த நிலையில் அதிமுக பாஜக இடையே கூட்டணியை உருவாக்க எடப்பாடி பழனிசாமி முயல்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
முக்கியமாக இந்தியா கூட்டணியில் இருந்து திமுகவை பிரித்து.. தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் தனி கூட்டணி உருவாக்க எடப்பாடி முயல்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார் .

பேட்டி: அதில், இப்போது அதிமுக - பாஜக கூட்டணி முறிந்தது பல சந்தேகங்களை தருகிறது. அவ்வளவு சப்போர்ட் செய்த மோடியை எடப்பாடி தூக்கி எறிந்து உள்ளார். அண்ணாமலையை தலைமையில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறி தூக்கி எறிந்து உள்ளார். 20 தொகுதிகள் பாஜக கேட்டதாக கூறப்படுகிறது. அதனால் கூட்டணி உடைந்தது என்றும் கூறுகிறார்கள். ஆனால் உண்மை தெரியவில்லை. திமுகவை வீழ்த்த வேண்டும். அதற்கு எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அப்போதுதான் திமுகவை வீழ்த்த முடியும்.
ஆனால் எடப்பாடி பழனிசாமி அதை ஏற்றுக்கொள்வது இல்லை. எடப்பாடி பழனிசாமி தனியாக இருக்க வேண்டும். தனியாக கட்சியை வழிநடத்த வேண்டும் என்று நினைக்கிறார். தனியாக அதிமுகவை தான்தான் நடத்த வேண்டும் என்று இருக்கிறார். இதில் 2 கோடி தொண்டர்கள் இருப்பதாக கதை விடுகிறார். ஜெயலலிதா இருந்த போதே இவ்வளவு தொண்டர்கள் அதிமுகவிற்கு இல்லை. எடப்பாடி பழனிசாமி அவரை விட பெரிய தலைவரா? அவரை விட அதிக தொண்டர் கொண்டவரா?
லோக்சபா தேர்தலில் கூட்டணி இல்லை என்றால்.. அவர் எங்கே செல்வார். இந்தியா கூட்டணிக்கு செல்கிறாரோ? ராகுல் காந்தி சோனியா காந்தியை பெருமையாக பேசுகிறாரே எடப்பாடி? அவரிடம் என்ன எதிர்பார்க்க முடியும். அவர் யார் பெயரை சொல்லி வாக்கு கேட்பார். லோக்சபா தேர்தலில் அவர்களின் பிரதமர் முகம் யார்? யார் பெயரை சொல்லி எடப்பாடி வெல்ல முடியும். அவருக்கு என்ன ஆதரவு இருக்கிறது. அவருக்கு எங்கே தொண்டர்கள் ஆதரவு இருக்கிறது. எடப்பாடி கூட மணியான சிலர் சொல்வதைதான் கேட்பார். சிவி சண்முகம் எங்கே போனார்? அவர் சமீபத்தில் காணவில்லையே? கவனித்தீர்களா? அவர் எங்கே இருக்கிறார் என்று சொல்ல முடியுமா?
( 15 சீட்டுகள் கிளீன் ஸ்வீப்! அப்படியே வழுக்கிகிட்டு போக போகுது.. எடப்பாடியை அலற விட்ட கணிப்பு! திடுக்)
அவருடன் நெருக்கமாக இருக்கும் நபர்களே கழன்று கொண்டு இருக்கிறார்கள். அப்படி இருக்க அவர் எப்படி பிரதமர் வேட்பாளரை ஆதரிப்பார்? யாரை ஆதரிப்பார்? திமுகவை எதிர்க்க வேண்டும் என்ற கொள்கை எடப்பாடிக்கு இல்லை. அவரின் மரமண்டைக்கு இது எதுவும் ஏறவில்லை. மரமண்டைக்கு எதுவும் ஏறுவதாக இல்லை என்பதுதான் இங்கே பிரச்சனையே.

எடப்பாடியை இங்கே பாஜக முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்பதே எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கை. அதை பாஜக அறிவிக்கவில்லை. 2024ல் எங்கள் ஆதரவு உங்களுக்கு வேண்டும் என்றால்.. 2026ல் எங்களை முதல்வராக அறிவிக்க வேண்டும் என்று கூறி இருந்தார். அதை ஏற்றுக்கொள்ளவில்லை. டெல்லி அதை ஏற்றுக்கொள்ளாத காரணத்தால் எடப்பாடி பழனிசாமி கூட்டணியை முறித்துக்கொண்டார்., இவரே தன்னை புகழ்ந்து பேசிக்கொள்ள வேண்டியதுதான். இவரே தன்னை பெரிய தலைவராக சொல்லிக்க வேண்டியதுதான், என்று ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications