சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அங்கே இருந்தா என்ன பயன்? ஓபிஎஸ்ஸின் "ரைட் ஹேண்டை" தூக்கும் எடப்பாடி! இது மட்டும் நடந்தா.. அவ்வளோதான்

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவில் ஓ பன்னீர்செல்வத்திற்கு எல்லாமாகவும் இருக்கும்.. அவருக்கு ஆதரவாக இருக்கும் மூத்த புள்ளி ஒருவரை தன் பக்கம் இழுக்க எடப்பாடி பழனிசாமி தரப்பு தீவிரமாக முயன்று வருகிறதாம்.

Recommended Video

    COVID-19 பரவலால் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுமா? மா சுப்பிரமணியன் பதில் *Health

    அதிமுகவில் எடப்பாடி கேம்பின் அளவு நாளுக்கு நாள் டாலர் மதிப்பு போல உயர்ந்து கொண்டே இருக்கிறது. ஒரு காலத்தில் கொங்கு மண்டல நிர்வாகிகள் மட்டும்தான் இருக்கிறார்கள் என்று கூறப்பட்ட எடப்பாடி கேம்பில் இப்போது 4 திசைகளில் இருந்தும் நிர்வாகிகள் குவிந்து வருகிறார்கள்.

    கடந்த வாரங்களில் வடமண்டல நிர்வாகிகள் எடப்பாடி கேம்பில் இணைந்தனர். அதன்பின் தென் மண்டல நிர்வாகிகள் பலர் எடப்பாடி கேம்பிற்கு தாவினார்கள்.

    அடுத்தடுத்து ஆக்‌ஷன்.. இன்னொரு வழக்கிலும் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு- ஓபிஎஸ்ஸை விட்டுட்டு தனியா! அடுத்தடுத்து ஆக்‌ஷன்.. இன்னொரு வழக்கிலும் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு- ஓபிஎஸ்ஸை விட்டுட்டு தனியா!

    தாவல்

    தாவல்

    அதிலும் தென் மண்டலத்தில் முக்குலத்தோர் பிரிவை சேர்ந்த நிர்வாகிகள் பலர் ஓபிஎஸ் தரப்பில் இருந்து எடப்பாடி கேம்பிற்கு வந்தனர். தர்மயுத்தம் நேரத்தில் கூட ஓபிஎஸ் பக்கம் இருந்த நிர்வாகிகள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக எடப்பாடி பக்கம் தாவி வருகிறார்கள். தென் மண்டலத்தில் ஓ பன்னீர்செல்வத்திற்கு தூரத்து ரத்த சொந்தமாக இருந்தவர்கள் கூட இப்போது எடப்பாடி கேம்பில் ஐக்கியம் ஆகிவிட்டனர். இதனால் எடப்பாடி குஷியிலும்.. ஓபிஎஸ் தரப்பு அப்செட்டிலும் இருக்கிறது.

    ஓபிஎஸ்

    ஓபிஎஸ்

    ஓபிஎஸ்ஸுக்கு ஆர்சிபி பிரபாகர், மனோஜ் பாண்டியன் போன்ற நிர்வாகிகள் ஆதரவு தவிர பெரிய நிர்வாகிகள் ஆதரவு என்றால் அது வைத்தியலிங்கத்தின் ஆதரவு மட்டும்தான். அதிமுகவில் துணை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் வைத்தியலிங்கம்தான் ஓபிஎஸ்சுக்கு ரைட் ஹேண்ட் போல இருக்கிறார். அவர் மட்டும்தான் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பையும் மீறி ஓபிஎஸ்ஸுக்கு தீவிர ஆதரவு அளித்து வருகிறார். இவர் மட்டும்தான் இன்னும் அணி மாறாமல் இருக்கிறார்.

    ஆஃபர்

    ஆஃபர்

    சட்ட ரீதியாகவும் வைத்தியலிங்கம் ஓ பன்னீர்செல்வத்திற்கு உறுதுணையாக இருக்கிறார். இந்த நிலையில் வைத்தியலிங்கத்திற்கும் எடப்பாடி தரப்பு தூதுவிட்டு வருகிறதாம். அதன்படி அவருக்கு பெரிய ஆஃபர் கொடுத்து தங்கள் பக்கம் இழுக்க எடப்பாடி தரப்பு முயன்று வருகிறதாம். அதிமுக பொருளாளர் அல்லது துணை பொதுச்செயலாளர் பதவியை கொடுக்க எடப்பாடி தரப்பு முன் வந்துள்ளதாகவும். இல்லை உங்களுக்கு விரும்பிய பதவியை கேளுங்கள் என்றும் ஆஃபர் கொடுத்துள்ளதாம்.

    பதவி

    பதவி


    நீங்கள் கேட்பதை கொடுக்கிறோம் வாருங்கள் என்று அழைப்பு சென்றுள்ளதாம். எங்கள் கேம்பிற்கு வந்துவிடுங்கள் என்றும் வைத்தியலிங்கத்திற்கு கடந்த இரண்டு நாட்களாக எடப்பாடி தரப்பு தூது விட்டு இருக்கிறதாம். ஓபிஎஸ் அணியில் யாரும் இல்லை. அவர்களுக்கு நிர்வாகிகள் ஆதரவு இல்லை. அவருடன் இருந்தால் உங்களுக்கு எந்த பயனும் இல்லை. தன்னுடன் தர்மயுத்தம் நடத்தியவர்களையே அவர் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

     ஓபிஎஸ்

    ஓபிஎஸ்

    அப்படி இருக்கும் போது உங்களை என்ன செய்வார். எடப்பாடி பொதுச்செயலாளர் ஆனால் உங்கள் எதிர்காலம் என்ன ஆகும் என்று யோசித்து பாருங்கள் என்று கூறி அவரை தங்கள் பக்கம் இழுக்க எடப்பாடி அணியினர் முயன்று வருகின்றனர். இவரும் வந்துவிட்டால் ஓபிஎஸ் சட்ட போராட்டங்களை கைவிட்டுவிடுவார் என்று எடப்பாடி அணி நம்புகிறது. எனவேதான் எடப்பாடி தரப்பு "வைத்தி" கம்மிங்கிற்காக தீவிர முயற்சியில் இருக்கிறதாம்!

    English summary
    Is Edappadi Palanisamy planning to lure Vaithiyalingam to their camp from O Panneerselvam? அதிமுகவில் ஓ பன்னீர்செல்வத்திற்கு எல்லாமாகவும் இருக்கும்.. அவருக்கு ஆதரவாக இருக்கும் மூத்த புள்ளி ஒருவரை தன் பக்கம் இழுக்க எடப்பாடி பழனிசாமி தரப்பு தீவிரமாக முயன்று வருகிறதாம்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X