இறங்கி வந்த "டெல்லி".. அப்படியே எகிறி போகும் அண்ணாமலை.. ஒன்னும் புரியலைங்க.. ஸ்டன் ஆன எடப்பாடி?
சென்னை: தமிழ்நாடு பாஜகவின் நிலைப்பாடும், தமிழ்நாடு பாஜகவினர் பேசும் விஷயங்களும் அதிமுக தரப்பை குழப்பி உள்ளதாம். டெல்லி பாஜக தலைமை அதிமுகவுடன் நெருக்கமாக இருக்கும் நிலையில்தான் தமிழ்நாட்டில் மட்டும் மோதல் நிலவி வருகிறது.
அதிமுக பாஜக இடையே தற்போது தீவிர மோதல் நிலவி வருகிறது. ஏற்கனவே ஒரு முறை ஜெயலலிதாவை ஊழல் வழக்கில் சிறை சென்றவர் என்ற பாணியில் அண்ணாமலை பேசியது கடுமையான விவாதங்களை ஏற்படுத்தியது.

அப்போதே அதிமுக - பாஜகவினர் இடையே அது கடுமையான மோதலுக்கு வழி வகுத்தது. இந்த நிலையில்தான் தற்போது முத்துராமலிங்கத் தேவருக்கு பயந்து ஓடியவர் அண்ணா என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதற்கு அதிமுக தலைவர்கள் கடுமையாக விமர்சனங்களை வைத்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வைத்த விமர்சனத்தில், எப்பேர்பட்ட அரசியல் கட்சிக்கு தலைவராக இருந்தாலும் சரி, மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது
அண்ணாவை பற்றி அவதூறாக பேசினால் பேசுபவர்களின் நாக்கு அழுகிவிடும் என்று செல்லூர் ராஜு காட்டமாக பேசி உள்ளார்.
இன்னொரு பக்கம் மாஜி அமைச்சர் சிவி சண்முகம் வைத்த விமர்சனத்தில், அண்ணாமலை செல்வது பாதயாத்திரை இல்லை வசூல் யாத்திரை. மோடி மீண்டும் பிரதமராவதில் அண்ணாமலைக்கு விருப்பமில்லை. அதனால்தான் அண்ணாமலை இப்படி பேசிக்கொண்டு இருக்கிறார், என்று சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
என்ன நேரம்?: அதிமுக - பாஜக இடையே டெல்லியில் இணக்கம் ஏற்பட்டு உள்ள நிலையில்தான் தமிழ்நாட்டில் இங்கே மோதல் ஏற்படுகிறது. உதாரணமாக மீபத்தில் டெல்லியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் பின் வரும் விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டன.

அதில், அதிமுக - பாஜக கூட்டணி ஒப்பந்தம், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது, எங்கே யாரை களமிறக்குவது, திமுகவை எப்படி எதிர்ப்பது என்று பல விஷயங்களை ஆலோசனை செய்துள்ளனர்.
இதில் அதிமுகவிடம் பாஜக 15 இடங்களை கேட்டதாக கூறப்படுகிறது. 15 இடங்களில் பாஜகவின் டாப் லீடர் களமிறக்கப்படலாம். அதனால் எங்களுக்கு கடந்த முறை போல குறைவான இடங்களை கொடுத்து ஓரம்கட்ட முடியாது என்று அமித் ஷா கூறியதாக தெரிகிறது. அதேபோல் பாஜக கூட்டணியில் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை இணைப்பது பற்றியும் ஆலோசனைகள் நடந்துள்ளதாம். ஆனால் இதை எடப்பாடி விரும்பவில்லை என்று கூறப்படுகிறது .
மோடி போன் நம்பர்: இந்த சந்திப்பில் வேறு ஒரு பெரிய சம்பவமும் நடந்துள்ளது. அதன்படி பிரதமர் அலுவலகம் சார்பாக ஒரு போன் நம்பர் எடப்பாடி பழனிசாமியிடம் கொடுக்கப்பட்டு உள்ளதாம். மோடி பர்சனல் பயன்பாட்டிற்கு சில போன்களை பயன்படுத்துகிறார்.
அதில் ஒரு நம்பரைத்தான் மோடி அலுவலகம் எடப்பாடி பழனிசாமியிடம் கொடுத்துள்ளதாம். மோடியுடன் எளிதாக பேசும் விதமாக கூட்டணி குறித்து முக்கிய முடிவுகளை எடுக்கும் விதமாக, எடப்பாடிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக இந்த நம்பரை எடப்பாடிக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.டெல்லியில் எடப்பாடி பழனிசாமிக்கான் மவுசு உயர்ந்து உள்ளதையே இது காட்டுவதாக கூறப்படுகிறது.

இறங்கி வந்த டெல்லி.. அப்படியே எகிறி போகும் அண்ணாமலை: இங்கே அண்ணாமலை எகிறி பேசிக்கொண்டு இருக்கிறார். அங்கே டெல்லி பாஜக இறங்கி பேசுகிறது. இந்த இரட்டை நிலைப்பட்டால் எடப்பாடி குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
டெல்லியுடன் நாம் இணக்கமாக செல்லலாம். ஆனால் அண்ணாமலை இப்படி பேசினால் அவருடன் கூட்டணி வைப்பது எப்படி சாத்தியம் ஆகும். அவர் பேச்சுக்கள் தொண்டர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தும். இதை எப்படி சமாளிப்பது என்ற யோசனையில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
என்னதான் டெல்லி நட்பாக இருந்தாலும் தமிழ்நாட்டில் உறவு சரியாக இருந்தால் தானே எல்லாம் சுமுகமாக இருக்கும் என்று அதிமுக வட்டாரங்கள் அண்ணாமலை மீது அப்செட்டில் இருக்கிறதாம்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை கிரீன் சிக்னல் கொடுப்பாரா? இன்று என்ன முடிவு? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா?












Click it and Unblock the Notifications