மாத சம்பளம் வாங்குறீங்களா? இஎம்ஐ விஷயத்தில் இந்த தப்பு மட்டும் மறந்தும் பண்ணிடாதீங்க
சென்னை: மாதம், மாதம் உங்களுக்கு 2ம் தேதி இஎம்ஐ வருவது போல் கடன் வாங்கி உள்ளீர்களா... மறந்து அந்த தவறை இனிசெய்ய வேண்டாம். 2ம் தேதிக்கு பதில் 5ம் தேதி அல்லது 7ம் தேதி இஎம்ஐ என்றால் நிச்சயம் எளிதாக இருக்கும். ஏப்ரல் மாதமான இம்மாதம் 2ம் தேதி இஎம்ஐல் லோன் வாங்கிய பலரை சிக்கலில் தள்ளி உள்ளது.
ஏப்ரல் ஒன்றாம் தேதியான இன்று முதல் புதிய நிதியாண்டு பிறக்கிறது. புதிய நிதியாண்டு பிறக்கிறது ஒருபுறம் எனில், சம்பளம் இந்த மாதம் ஒன்றாம் தேதி பலருக்கும் வந்திருக்காது. புனித வெள்ளி மார்ச் 29ம் தேதி வந்தது. அதன்பிறகு சனி மற்றும் ஞாயிறு வந்தது. திங்கள் கிழமையான இன்று ஏப்ரல் 1ம் தேதி வந்துள்ளது. அடுத்தடுத்து வங்கி விடுமுறை நாட்கள் என்பதுடன், நிதியாண்டு கணக்கினை முடிக்க வேண்டிய நிலையில் வங்கிகள் இருந்தன. இதேபோல் நிறுவனங்களுமே நிதியாண்டிற்கான கணக்கை முடிக்கும் பணியில் இருந்தன.

இந்த காரணங்களால் இந்த மாதம் பல நிறுவனங்களில் 30ம் தேதி, 31ம் தேதி , ஏப்ரல் 1ம் தேதி சம்பளம் போடப்படவில்லை.. பல நிறுவனங்கள் ஏப்ரல் 2ம் தேதி தான் சம்பளம் போட முடியும் என்பதை முன்கூட்டிய அறிவித்துள்ளன. பல ஐடி நிறுவனங்களுமே இதே முடிவினை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக ஏப்ரல் 2ம் தேதி இஎம்ஐயில் கடன் வாங்கியவர்கள் வழக்கத்தைவிட இந்த முறை சிக்கலை சந்தித்துள்ளனர். வீட்டு உபயோக பொருட்களை இஎம்ஐயில் வாங்குறீங்க, பைக் அல்லது கார் வாங்குறீங்க அப்படீன்னா, இஎம்ஐ தேதி குறைந்தது ஐந்து அல்லது 7ம் தேதி என்று இருப்பதே நல்லது.. ஏனெனில் எல்லா மாதமும் உங்களால் 5ம் தேதி இஎம்ஐ சரியாக கட்ட இயலாது..
சில தனியார் நிதி நிறுவனங்களில் இஎம்ஐயாக பொருட்கள் வாங்கினால் அதற்கான இஎம்ஐ தேதி 2ம் தேதியாகவே இருக்கும்.. அப்படியா நிலையில் சில நேரங்களில் சம்பளம் தாமதமாக வந்தாலோ அல்லது வங்கிகள் அடுத்தடுத்து விடுமுறை வந்தால் சிக்கலாகும். ஒருவேளை உங்களால் குறிப்பிட்ட தேதியில் இஎம்ஐ பணத்தை கட்டாமல் போனால் நீங்கள் கட்ட வேண்டிய அபராதம் 950 ஆக இருக்கும். தனியார் வங்கிகளில் 750 ரூபாயக்கு மேல் அபராதமாக செலுத்த வேண்டியது வரலாம். இஎம்ஐ கட்டாமல் விடும் காரணத்தால் உங்கள் சிபில் ஸ்கோரும் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
அதேபோல் இஎம்ஐ தேதி 2ம் தேதி என்றால் ஒன்றாம் தேதியே வங்கியில் பணத்தை இருப்பு வையுங்கள். நீங்கள் 2ம் தேதி காலையில் பணத்தை போடலாம் என்று நினைத்தால், அவர்கள் விடியற்காலையிலேயே இசிஎஸ் போட்டு பணத்தை எடுக்க முயற்சிப்பார்கள்.. அப்போது பணம் இல்லை என்றால், அபராதம் கட்ட வேண்டிய நிலை வரும்.. எனவே முன்கூட்டியே பணத்தை வங்கியில் இருப்பு வையுங்கள். உங்களால் 2ம் தேதி மாதம் மாதம் பணம் கண்டிப்பாக கட்ட முடியும் என்றால் மட்டும், இஎம்ஐயில் பொருட்கள் வாங்குங்கள்.. அப்படி முடியாது என்றால் தவிர்ப்பதே நல்லது என்கிறார்கள் அனுபவஸ்தர்கள்..
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications