சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"குறி" வைக்கப்படுகிறாரா முக்கிய "தலை".. சிக்கிய டிரான்ஸ்போர்ட் நடராஜன்.. அன்புமணி நறுக் கேள்வி

அன்புமணி ராமதாஸ் திமுக அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: லஞ்ச பணத்தை கையும் களவுமாக பிடித்தும்கூட, ஒரு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்காமல், டிரான்ஸ்பர் செய்துள்ளது சரியா, என்று திமுக அரசுக்கு பாமகவின் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழக போக்குவரத்து துறையின், சென்னை கமிஷனர் ஆபீசில் துணை கமிஷனராக பணியாற்றியவர் நடராஜன்...

3 மாதங்களாக சென்னையில் உயராத பெட்ரோல் டீசல் விலை .. இன்று 137-ஆவது நாளாக ஒரே விலை! 3 மாதங்களாக சென்னையில் உயராத பெட்ரோல் டீசல் விலை .. இன்று 137-ஆவது நாளாக ஒரே விலை!

ஆர்டிஓ அலுவலக பணியாளர்களின் இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கு லஞ்சம் பெறுவதாக இவர் மீது புகார்கள் வந்தவண்ணம் இருந்தன.

 திடீர் சோதனை

திடீர் சோதனை

இதையடுத்து, கடந்த வாரம் லஞ்ச ஒழிப்பு போலீசார், சென்னை எழிலகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர். இதில், நடராஜனின் உதவியாளர் முருகன் தங்கியிருந்த ரூமிலும் சோதனை நடத்தப்பட்டது.. அப்போது, லஞ்சமாக பெற்ற 37 லட்சம் ரூபாய் ரொக்கம், பண பரிவர்த்தனைக்கான சான்றுகளும் கிடைத்தன.. நடராஜனின் உதவியாளர் முருகன், 2 நாளைக்கு முன்தினம் நாகர்கோவில் ஆர்டிஓ அலுவலகத்துக்கு மாற்றப்பட்ட நிலையில், துணை கமிஷனர் நடராஜனும் நெல்லைக்கு மாற்றப்பட்டுள்ளார்..

 திடீர் டிரான்ஸ்பர்

திடீர் டிரான்ஸ்பர்

இதற்கான உத்தரவை, தமிழக கூடுதல் தலைமைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார். இந்த திடீர் டிரான்ஸ்பர் பல தரப்பிலும் சந்தேகத்தையும், சலசலப்பையும் ஏற்படுத்தி வருகிறது.. காரணம், போக்குவரத்து துறை ஆணையர் சிக்கிய இந்த விவகாரத்தில், துறை வாரியாக உள்ள அமைச்சருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று கிசுகிசுக்கப்பட்டு வருகிறது..

மேலிடம்

மேலிடம்

இது தொடர்பான புகார்களும் மேலிடத்துக்கு சென்றதாக கூறப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இந்நிலையில் தான், நடராஜன் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமல் நெல்லைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், அன்புமணி ராமதாஸ் மிக முக்கியமான கேள்வி ஒன்றை எழுப்பி உள்ளார்.. பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இது தொடர்பாக ஒரு ட்விட் பதிவிட்டுள்ளார். அதில் உள்ளதாவது:

 சிக்கிய அதிகாரி

சிக்கிய அதிகாரி

சென்னை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் கடந்த 14-ஆம் தேதி நடத்தப்பட்ட ஊழல் ஒழிப்பு சோதனையில் ரூ.35 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அதற்கு காரணமான துணை ஆணையர் -1 நடராஜன் எந்த தண்டனையும் இல்லாமல் நெல்லைக்கு இடமாற்றம் மட்டும் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பணத்துடன் சிக்கிய அதிகாரி குறித்து விசாரித்த போது, அவர் பதவி உயர்வு வழங்க 7 பேரிடமிருந்து தலா ரூ. 5 லட்சம் வசூலித்தது உறுதியாகியுள்ளது.

 டிரான்ஸ்பரா?

டிரான்ஸ்பரா?

பதவி உயர்வுக்காக மேலும் 35 பேரிடமிருந்து ரூ.1.75 கோடி வசூலித்ததும் தெரியவந்துள்ளது. அவர் மீது காவல்துறை வழக்கும் பதிவு செய்திருக்கிறது! சம்பந்தப்பட்ட அதிகாரி 2019-ஆம் ஆண்டில் செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. ஆக இருந்த போது அவரது அலுவலகத்தில் ஊழல் தடுப்பு பிரிவு சோதனையிட்டு, ரூ.88 லட்சம் பணத்தை கைப்பற்றியதுடன், வழக்கும் பதிந்தது. அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை அவரது துறையினரே பட்டாசு வெடித்துக் கொண்டாடியுள்ளனர்!

 டிரான்ஸ்பர் ஏன்

டிரான்ஸ்பர் ஏன்

கையூட்டு பணத்துடன் சிக்குபவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட வேண்டும் என்று அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், எந்த சோதனையும், எந்த கைது நடவடிக்கையும் இல்லாமல் இட மாற்றத்துடன் அந்த ஊழல் அதிகாரி தப்பவிடப்பட்டிருக்கிறார். இது பெரும் அநீதி! ரூ.100 கையூட்டு வாங்கியதற்காக கிராம நிர்வாக அதிகாரிகள் கைது செய்யப்படுகின்றனர். ஆனால், ரூ. 2.10 கோடி கையூட்டு வாங்கிய அதிகாரி தப்பவிடப்படுகிறார் என்றால், அது ஊழலை ஒழிக்க உதவாது. ஊழல் அதிகாரியை பணியிடை நீக்கம் செய்வதுடன், கைது செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!" என்று பதிவிட்டுள்ளார்.

English summary
is mk stalin is angry with transport minister and anbumani ramadoss condemns natarajans transfer
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X