மன்னிப்பு.. வார்த்தையை விட்ட சீமான்! கொதித்தெழுந்த இஸ்லாமியர்கள்! திரும்பி பார்த்த திமுக! என்னாச்சு
சென்னை: இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் குறித்து நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்த கருத்துக்கள் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளன. அவரின் கருத்துக்கள் ஒரு பக்கம் திமுகவிற்கு சாதகமாக திரும்புமோ என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
நாம் தமிழர் கட்சிக்கு அடிப்படை ஆதரவாளர்களாக இருக்கும் பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள். முக்கியமாக அரபு நாடுகளில் வசிக்கும் இஸ்லாமியர்கள் பலர் இப்போதும் நாம் தமிழர் கட்சிக்கு தீவிர ஆதரவாளர்களாக உள்ளனர்.

திமுக - அதிமுகவிற்கு ஆதரவு அளித்து வந்த இஸ்லாமிய வாக்கு வங்கி கடந்த சில வருடங்களில் நாம் தமிழர் பக்கம் கொஞ்சமாக சென்றதும் குறிப்பிடத்தக்கது. முக்கியமாக திமுகவை விரும்பாத பட்சத்தில், அதிமுகவிற்கு ஆதரவு அளித்து வந்த இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் பலர் அதிமுக - பாஜக கூட்டணி காரணமாக நாம் தமிழர் பக்கம் செல்லும் சூழ்நிலை இருந்தது.
இந்த நிலையில்தான் நாம் தமிழர் கட்சிக்கு பக்க பலமாக இருந்த ஒரு சில இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் ஆகியோரையும் கூட பகைத்துக்கொள்ளும் விதமாக தற்போது சீமான் கருத்து தெரிவித்து உள்ளாரோ என்ற விவாதம் எழுந்துள்ளது.
என்ன சொன்னார்?: சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய சீமான், மணிப்பூரில் இருந்து வந்து நமக்கு யாரும் ஓட்டு போடப்போவதும் இல்லை. இங்கு இருக்கக்கூடிய கிறிஸ்துவர்களும் நமக்காக வாக்களிக்கப்போவது கிடையாது. நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம், இஸ்லாத்தையும் கிறிஸ்துவத்தையும் ஏற்றுக்கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று. அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகளாகிவிட்டது, என்று கூறி இருந்தார்.
அதோடு நிற்காமல், சும்மா போய் தேவாலயத்தில் தேவரே வாரீர் வாரீர் என்று பாடிவிட்டு, கடைசியில் யார் யாருக்கோ நாட்டை கொடுத்து இருக்கிறார்கள். இந்த நாட்டில் நடந்திருக்கும் அநீதி அக்கிரமங்களுக்கு பெரிய பொறுப்பு, என்றும் கூறி சர்ச்சையை கிளப்பி இருந்தார். அவரின் இந்த பேச்சு பெரிய சர்ச்சையான நிலையில் சீமானின் பேச்சுக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் விமர்சனங்களை வைத்தன. அதேபோல் சில இஸ்லாமிய அமைப்புகள் சீமானுக்கு எதிராக காவல் நிலையத்திலும் புகார் வைத்தன.
இதற்கு சினிமா நடிகர் ராஜ்கிரண் அளித்த பதிலில் கூட, இஸ்லாமியர்களுக்கு, எவ்வளவு
அநீதிகள் இழைக்கப்பட்டாலும், எவ்வளவு வன்மத்தோடு அக்கிரமங்களுக்கு ஆட்படுத்தப்பட்டாலும், அவர்கள் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு, தங்களால் முடிந்த உதவிகளை பிற சமுதாயத்தினருக்கும் செய்து கொண்டு, அமைதியாக வாழ்ந்து கொண்டிருப்பதற்கு காரணம், இயலாமையோ, கோழைத்தனமோ, அல்லது உயிருக்கு பயந்தோ அல்ல...
"இறப்பதற்காகவே பிறந்திருக்கிறோம். இறை வழியில் மரணத்தை நேசிக்கிறோம், என்ற கொள்கையினால்", பொறுமை காக்க வேண்டும் என்று, இறைவனின் இறுதி தூதுவர், இஸ்லாமிய மக்களின் மாபெரும் தலைவர், நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையையும், வார்த்தைகளையும் பின்பற்றுவதால், பொறுமையைவிட சிறந்த பொக்கிஷம் இல்லை என்று, பொறுமை காக்கிறோம்... இந்தப்பொறுமையை, தவறாகப்புரிந்து கொண்டு, கண்ட கழிசடைகளும் பேச ஆரம்பித்தால், அதன் விளைவு மிக மோசமாயிருக்கும், என்று குறிப்பிட்டு உள்ளார்.
பதிலடி: இந்த விமர்சனங்களுக்கு பதில் அளித்த சீமான், அநீதிக்கு எதிராக இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் என்றைக்காவது போராடியது உண்டா இஸ்லாமியர்களை அவமதித்ததாக கூறி நான் மன்னிப்பு கேட்டால் அவர்கள் எனக்கு ஓட்டு போடுவார்களா?; இஸ்லாமியர்களுக்காக எத்தனை போராட்டங்களில் நடிகர் ராஜ்கிரண் ஈடுபட்டுள்ளார்?"
கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் குறித்து நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டுவிட்டால், அவர்கள் எனக்கு ஓட்டு போட்டுவிடுவார்களா? என்று சீமான் கேட்டு மீண்டும் விமர்சனம் வைத்துள்ளார்.
மீண்டும் செல்லும்: சீமானின் இந்த பேச்சு காரணமாக அவருக்கு இத்தனை காலம் ஆதரித்து வந்த இஸ்லாமிய அமைப்புகள் மீண்டும் திராவிட கட்சிகள் பக்கம், பெரும்பாலும் திமுக பக்கம் செல்லுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. திராவிட கட்சிகளிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக நாம் தமிழர் பக்கம் சென்றவர்கள் மீண்டும் திராவிட கட்சிகள் பக்கமே திரும்பும் வாய்ப்புகள் உள்ளதோ என்ற கேள்விகள், விவாதங்கள் இதனால் எழுந்துள்ளன.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications