ஓபிஎஸ் வரப்போறாராம்.. இரவோடு இரவாக மீட்டிங் போட்ட எடப்பாடி.. அதிர்ந்த அதிமுக அலுவலகம் என்னாச்சு?
மொத்தமே மனு தாக்கல் செய்ய 39 மணி நேரம்தான் கொடுக்கப்பட்டு உள்ளது
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எடப்பாடி பழனிசாமி அறிவித்துவிட்டார். இந்த தேர்தலுக்கு எதிராக இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வம் வழக்கு தொடுத்துள்ளார்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
இன்னொரு பக்கம் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட நேற்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இன்று 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

எத்தனை பேர்
மொத்தமே மனு தாக்கல் செய்ய 39 மணி நேரம்தான் கொடுக்கப்பட்டு உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு விண்ணப்ப கட்டணம் 25 ஆயிரம் ரூபாய். 27ஆம் தேதி காலை 9 மணி முதல் வாக்கு எண்ணிக்கை செய்யப்படும் என்று அதிமுக தலைமை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதையடுத்து நேற்று எடப்பாடி வேட்புமனு தாக்கல் செய்தார். முதல் ஆளாக வேட்புமனு தாக்கல் செய்தார். அவரை தொடர்ந்து 37 பேர் விருப்பமனு வாங்கினார்கள். இந்த 37 பேருமே எடப்பாடிக்கு ஆதரவாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

ஓபிஎஸ் ஆலோசனை
இந்த நிலையில்தான் இன்று அதிமுக அலுவலகத்திற்கு ஓ பன்னீர்செல்வம் வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நேற்று இரவு ஓ பன்னீர்செல்வம் தனக்கு நெருக்கமான நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார் . இந்த ஆலோசனையில்.. நாம் ஒரு பக்கம் வழக்கு தொடுத்து இருக்கிறோம். இந்த வழக்கில் இடைக்கால தடை வரும் என்று எதிர்பார்க்கிறோம். இன்னொரு பக்கம் நாமும் வேட்புமனு தாக்கல் செய்யலாமா? நேரடியாக போய் தாக்கல் செய்தால் நம்மை யார் தடுப்பார்கள். துணிந்து இறங்கலாமா என்று ஓ பன்னீர்செல்வம் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.

என்ன சொன்னார்?
இதில் சிலர் ஓ பன்னீர்செல்வம் விருப்பமனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிசாமிக்கு இந்த தகவல் சென்றுள்ளதாம். ஓ பன்னீர்செல்வம் வரப்போகிறாராம். அவர் வந்தால் பெரிய சிக்கல் ஆகும். தேவையில்லாத பிரச்சனை ஆகும் என்று கூறி இருக்கிறார்கள். இதனால் எடப்பாடி பழனிசாமியும் நேற்று அவசரமாக இதை பற்றி ஆலோசனை செய்து இருக்கிறார். இதையடுத்தே ஜெயக்குமார் அளித்த பேட்டியில், அதிமுக அலுவலகத்தை சிலர் தாக்க போவதாக தகவல்கள் வருகிறது. போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று கூறி இருந்தார்.

பின்னணி இதுதான்
இந்த நிலையில்தான் இன்று அதிமுக அலுவலகத்தில் தொண்டர்கள் குவிந்து உள்ளனர். அதன்படி ஓ பன்னீர்செல்வம் வந்தால் அவரை தடுத்து நிறுத்துவதற்காக எடப்பாடி ஆதரவாளர்கள் குவிந்து உள்ளனர். எடப்பாடி பழனிசாமி நேற்று நடத்திய மீட்டிங்கில், அதிமுக அலுவலகத்தில் பிரச்சனை மீண்டும் வரக்கூடாது. மீண்டும் சீல் வைக்கும் நிலைமை ஏற்பட கூடாது. அதனால் கவனமாக இருங்கள் என்று கூறியதாக தெரிகிறது. இதை தொடர்ந்தே இன்று அதிமுக அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவு தொண்டர்கள் குவிந்து உள்ளனர்.












Click it and Unblock the Notifications