Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொன்னியின் செல்வன் மெகா ஹிட்! ஆனால் உண்மை வரலாறு அதுவல்ல.. இதெல்லாமே பொய்தானா.. புதிய தகவல்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ள நிலையில், அதில் எது எல்லாம் புனைவு எது உண்மை என்று தெரியுமா? வாங்கப் பார்க்கலாம்..

பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே ரிலீஸான பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப்படமாக மாறி உள்ளது. விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், கார்த்தி நடித்துள்ள இந்தப் படம் வசூலைக் குவித்து வருகிறது.

பல ஆண்டு முயற்சிக்குப் பின்னர், கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் ஒரு வழியாகத் திரைப்படமாக வந்துவிட்டது. 5 பாகங்களாக வெளியான நவாலை இரண்டு பாகங்களாக எடுக்க வேண்டும் என்பதற்காகக் கதையில் சில மாற்றங்களையும் செய்துள்ளனர்.

சோழர்கள்

சோழர்கள்

உலக வரலாற்றில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த வம்சங்களில் ஒன்றான சோழர்கள், ஒன்பதாம் மற்றும் 10ஆம் நூற்றாண்டுகளில் உச்சத்தில் இருந்தனர். அதன் பின்னர் அவர்கள் ஆட்சி செய்யும் நிலப்பரப்பு சரியத் தொடங்கினாலும் கூட 13ஆம் நூற்றாண்டு வரை ஆட்சியில் இருந்தனர். துங்கபத்ரா நதிக்கு தெற்கே முழுவதும் சோழர்கள் ராஜ்ஜியம் தான். ராஜராஜனின் ஆட்சியில் இலங்கையைச் சோழ ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது..

பெருமை

பெருமை

மறுபுறம் அவரது மகன் ராஜேந்திரன் பாடலிபுத்திரத்தில் பாலா மன்னனை வீழ்த்தினார். சோழ மன்னன் ராஜேந்திரன் கடல் வழிகள் கொண்டு போர் மட்டும் தொடுக்கவில்லை. அதைத் தமிழ் வணிகர்கள் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்தவும் பயன்படுத்த அனுமதித்தார். இப்படி கம்போடியா வரை நீண்டது தமிழர்களின் வர்த்தக உறவு. இந்தியாவில் கடல் வழியை ஆக்கிரமித்த ஒரே ஆட்சியாளர்கள் சோழர்கள் மட்டுமே!

 பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

சரி பொன்னியின் செல்வனுக்கு வருவோம். கதையில் இருக்கும் சில நிகழ்வுகள் மட்டுமே உண்மையில் நடந்தவை. மற்ற அனைத்தும் கல்கியின் கற்பனையில் இருந்து பிறந்தவை தான். இது தொடர்பாக வரலாற்று ஆசிரியர் வி. ஸ்ரீராம் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "பொன்னியின் செல்வனில் சில விஷயங்கள் மட்டுமே உண்மை. மற்ற அனைத்துமே கற்பனையாக உருவாக்கப்பட்டது தான்.

 சில உண்மைகள்

சில உண்மைகள்

இதில் வரும் பல கதாபாத்திரங்கள் புனையப்பட்ட ஒன்று தான். வரலாற்றுக்கும் அதற்கும் தொடர்பு இல்லை" என்றார். கிபி 985இல் அரியணை ஏறிய அருள்மொழி வர்மன் அதாவது பொன்னியின் செல்வன், அவரது உடன்பிறப்புகளான குந்தவை, ஆதித்த கரிகாலன், வந்தியத்தேவன் தவிர பெரும்பாலான கதாபாத்திரங்கள் கல்கியின் கற்பனை தான். ஆதித்த கரிகாலன் மர்மமான முறையில் உயிரிழந்ததால் பொன்னியின் செல்வன் அரியணைக்கு வந்தார். சகோதரி குந்தவையின் அறிவுரையைப் பொன்னியின் செல்வன் அதிகம் கேட்டு நடந்து கொண்டார்.

 பல கற்பனைகள்

பல கற்பனைகள்

இதை அடிப்படையாக வைத்து கல்கி பொன்னியின் செல்வனை உருவாக்கினார். நந்தினி, ஆழ்வார்க்கடியான் போன்ற கதாபாத்திரங்கள் வரலாற்றில் எந்தவொரு இடத்திலும் இல்லை. இவை அனைத்தும் கல்கியால் உருவாக்கப்பட்டவை. இப்படி கொஞ்சம் வரலாற்றையும் அதிகம் கற்பனையையும் வைத்து உருவாக்கப்பட்டது தான் கல்கியின் பொன்னியின் செல்வன். மணிரத்தினம் இதைச் சிறப்பாகத் திரைப்படமாக உருவாக்கி உள்ள போதிலும், சில வரலாற்றுப் பிழைகள் உள்ளதாக வி. ஸ்ரீராம் தெரிவித்து உள்ளார்.

 பிழைகள்

பிழைகள்

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "உதாரணமாக, பொன்னியின் செல்வன் காலத்தில் படத்தில் காட்டப்படுவது போன்ற பிரம்மாண்ட வளைவுகள் இல்லை. அவை எல்லாம் துருக்கிய சுல்தான்கள் இங்கு வந்த பிறகு நடந்த மாற்றங்கள். இத்திரைப்படம் பெரும்பாலும் குவாலியர் மற்றும் ஓர்ச்சாவில் எடுக்கப்பட்டு உள்ளது. இரண்டும் முகலாயர் காலத்துக்குப் பிந்தைய நினைவுச் சின்னங்கள். தஞ்சாவூர் கோட்டையை மலை உச்சியில் இருப்பது போலக் காட்டுகிறார்கள். உண்மையில் தஞ்சை ஆற்றின் ஓரம் இருக்கும் சமதளப் பிரதேசம் ஆகும். இதெல்லாம் சில பிழைகள்" என்றார்.

 சோழர்கள் மட்டுமில்லை

சோழர்கள் மட்டுமில்லை

மேலும், பண்டை தமிழ் மன்னர்கள் என்றால், அது சோழர்கள் மட்டும் இல்லை. பாண்டிய மன்னர்களும் தமிழுக்குப் பல விஷயங்களைச் செய்துள்ளனர். பல்லவ மன்னர்களின் பங்களிப்பும் முக்கியம் செய்துள்ளதாகக் கூறுகின்றனர் வரலாற்று ஆசிரியர்கள் . ஆனால், சோழர்களைப் பற்றி திரைப்படங்கள் மட்டுமே வருவதாகவும், பாண்டியர்களைக் கெட்டவர்களைப் போலவே காட்டுவதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும், சேரர்கள், பல்லவர்கள் குறித்தும் பேசப்படுவதே இல்லை என்றும் வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+