Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கே.என்.நேரு மீதான ஊழல் வழக்கு! அதிமுக மனுவை திருப்பியனுப்பியதாக வெளியான செய்திக்கு இன்பதுரை மறுப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக அமலாக்கத்துறை எழுதிய கடிதத்தின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட கோரி அதிமுக சார்பில் தாக்கல் செய்த மனு பிழையுடன் உள்ளதால் உயர்நீதிமன்ற பதிவுத்துறை திரும்ப அளித்ததாக செய்திகள் வெளியான நிலையில் இதை மாநிலங்களவை எம்பியும் வழக்கறிஞருமான இன்பதுரை மறுத்துள்ளார்.

தமிழ்நாடு அமைச்சர் கே.என். நேரு சுமார் ரூ 1,020 கோடி வரை ஊழல் செய்ததாகக் குற்றம்சாட்டி, வழக்குப்பதிவு செய்யக் கோரி அமலாக்கத் துறை தமிழக டிஜிபிக்குக் அனுப்பிய ஆதாரங்களின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்யுமாறு அதிமுக எம்.பி. இன்பதுரை, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் அளித்திருந்தார்.

kn nehru court Chennai

இந்த புகாரை அடிப்படையாக வைத்து உடனடியாக அமைச்சர் நேரு மீது வழக்குப் பதிவு செய்யுமாறு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி இன்பதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில், ஊழல் எப்படி நிகழ்ந்தது என்பது தொடர்பாக அமலாக்கத் துறை தெளிவாக கூறியுள்ளதாகவும் இதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென டிசம்பர் மாதம் 13-ம் தேதி புகாளித்தும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்யவில்லை என மனுவில் தெரிவித்துள்ளார்.

எனவே, அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு செய்து நியாயமான முறையில் குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரணை நடத்தி முடிக்க உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனு நடைமுறை பிழைகளுடன் தாக்கல் செய்துள்ளதால் அதனை பிழைகளை திருத்தம் செய்ய கோரி மனுவை உயர்நீதிமன்ற பதிவுத்துறை திரும்ப அளித்துள்ளது. மேலும் மனுவில் உள்ள பிழைகளை திருத்தம் செய்து மீண்டும் தாக்கல் செய்தால் வழக்கு எண்ணிடப்படும் அதிமுக தரப்பு வழக்கறிஞர்களிடம் பதிவுத்துறை பதிவுதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Inbadurai

இந்த தகவலை திமுகவினர் பரப்பி வருகிறார்கள். மேலும் இன்பதுரையை விமர்சித்து வரும் நிலையில் அவரோ, "அட அல்பங்களே" என குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது ட்வீட்டில் அமைச்சர் நேரு மீது நான் தொடர்ந்த வழக்கு எண்ணிடப்பட்டுள்ளது. WP Crl . No: 74 of 2026.
நாளை அல்லது மறுநாள் உயர்நீதி மன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வர உள்ளது! என தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+