சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"கருப்பு" சட்டைக்காரர்களின் திருமணம் கடந்த உறவே "திராவிட மாடல்".. பல கிளைகள் உண்டு.. எச்.ராஜா டமார்

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து எச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: மீண்டும் திராவிடத்தை சீண்டி ஒரு சர்ச்சை பேட்டி தந்துள்ளார் பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா.. இது தொடர்பான விமர்சனங்கள் இணையத்தில் குவிந்து வருகின்றன.

5 மாநில தேர்தல் ரிசல்ட்டில், உத்தரபிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 4 இடங்களை பாஜக வென்றது.. இதனால் பாஜக தரப்பில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.. அந்த பூரிப்பு தமிழ்நாட்டு தலைவர்களிடமும் தென்பட்டது.

தொழிலும் முக்கியம்! சுற்றுச்சூழலும் முக்கியம்! 3-ம் நாள் கலெக்டர்கள் மாநாட்டில் CM ஸ்டாலின் பேச்சு! தொழிலும் முக்கியம்! சுற்றுச்சூழலும் முக்கியம்! 3-ம் நாள் கலெக்டர்கள் மாநாட்டில் CM ஸ்டாலின் பேச்சு!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் எச்.ராஜாவும் குதூகலமாக காணப்பட்டார்.. பட்டாசு வெடித்த பாஜக தொண்டர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியதையடுத்து, செய்தியாளர்களிடம் எச்.ராஜா பேசியதாவது:

 உத்தரபிரதேசம்

உத்தரபிரதேசம்

உபியில் பாஜகவின் வெற்றியை தடுக்க எதிர்கட்சிகள் போட்ட திட்டங்கள் அனைத்தும் நொறுங்கிவிட்டது.. உத்தரபிரதேசத்தில் மட்டும் 255 இடங்களை வென்று அசத்தியுள்ளது. முத்தலாக் தடை சட்டம் கொண்டுவந்ததாலதான், இந்த முறை இஸ்லாமியர்கள் ஓட்டுக்கள் நிறைய விழுந்துள்ளது.. இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சி பாஜக என்று பொய்ப்பிரச்சாரம் செய்த ராகுல் காந்தியின் முகத்தில் இஸ்லாமிய பெண்கள் தாமரைக்கு வாக்களிக்கு கரியை பூசியுள்ளனர்... ராகுல் ஒவ்வொரு மாநிலத்திற்கு ஒரு வேஷம் போடுகிறார். அவரது வேடங்களை மக்கள் ஏற்கமாட்டார்கள்.

 சோனியா

சோனியா

நாடு முழுவதும் பாஜக அலை வீசுகிறது. அதில் தமிழ்நாடு மட்டும் தப்ப முடியாது... தூங்கிக்கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் எச்சரிக்கை மணி அடித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் நேரு குடும்பத்தைச் சேர்ந்த சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என்ற இந்த மூன்று பேரையும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். மம்தா பானர்ஜி என்ன திட்டம் போட்டலும் சரி, எத்தனை பேர் கூட்டணி வைத்தாலும் சரி 2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பாஜக மீண்டும் அரியணையில் அமரும் என்பதில் சந்தேகம் இல்லை..." என்றார்.

பூஜ்ஜியம்

பூஜ்ஜியம்

இந்நிலையில், காஞ்சிபுரம் கோயில் விழாவுக்கு வந்திருந்த எச்.ராஜா, மீண்டும் செய்தியாளர்களிடம் பேசும்போது, "காங்கிரஸ் கட்சி ஏற்கனவே ஒரு பூஜ்ஜியம்... அந்த பூஜ்ஜியத்தோடு எது சேர்ந்தாலும் மாற்றம் வர போகுதா என்ன? கிடையவே கிடையாது.. காங்கிரஸ் இப்போது தேசிய அளவில் பலவீனம் அடைந்து கொண்டு வருகிறது.. பெரும்பான்மை சமுதாய எதிர்ப்பு அரசியல், இந்து விரோத அரசியல், இந்த மாதிரி அரசியலை தேசிய கட்சிகள் கையாள முடியாது என்பதை இந்த தேர்தல் நிரூபித்துள்ளது.

 திராவிடர்கள்

திராவிடர்கள்

கடந்த 1967 வரை ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை தான் இருந்தது... அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் நேரத்தில், தேர்தல் குறித்து அதிக கவனம் செலுத்தும் காரணத்தினால் நிர்வாகத்தை சரியாக கவனிக்க இயலாத சூழல் உருவாகி உள்ளது. அதனால், இதுகுறித்து முழுமையாக பேசி முடிவெடுத்த பிறகு ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து பேச இயலும். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது மக்களுக்கும் நிர்வாகத்திற்கும் நல்லது... ஒரே நாடு ஒரே தேர்தலின்போது தமிழகத்தில் பாஜக சார்பில் யார் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவார்கள் என்பதை தேர்தல் வரும்போதுதான் தெரிய வரும்.

 திராவிட மாடல்

திராவிட மாடல்

கருப்பு சட்டைக்காரர்களின் திருமணம் கடந்த உறவே திராவிட மாடல்.. திருமணம் கடந்த உறவிற்கு பல கிளைகள், பல இடங்களில் கடைகள் வைத்து இருக்கிறார்கள்... ஒழுக்கமாக இருப்பது மட்டுமே நேஷனல் மாடல்..." என்றார்.. பாஜக தலைவர்கள் அனைவருமே ஒரே நாடு ஒரே தேர்தலை வலியுறுத்தி வரும் நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி மட்டும் அப்படி ஒரு தேர்தல் வர வாய்ப்பே இல்லை என்று கூறியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. இப்போது திராவிட மாடலை சீண்டி எச்.ராஜா பேசியுள்ளதும் விவாதமாகி வருகிறது.

English summary
is the slogan one nation one election possible, says bjp senior leader h raja
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X