சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

செட்டப் செல்லப்பா..மகளை திருமணம் செய்த 62 வயது டாடி! என்னம்மா நீங்க இப்டி பண்றீங்களேமா! அதுக்காகவா?

Google Oneindia Tamil News

சென்னை : கடந்த சில நாட்களாகவே 60 வயதுக்கும் அதிகமான முதியவர் ஒருவர் தனது மகளையே திருமணம் செய்து கொண்டதாக இணைய தளங்களிலும், சமூக ஊடகங்களிலும் வீடியோ ஒன்று பரவி வந்தது. இதனால் நெட்டிசன்கள் கடுமையான அதிர்ச்சியடைந்த நிலையில், பின்னர் தான் அது செட்டப் செல்லப்பா டைப் வீடியோ என தெரிய வந்தது.

பொதுவாக 90ஸ் கிட்ஸ் களுக்கு திருமணமே நடக்காது என்ற ஒரு வதந்தி பரப்பப்பட்டு வரும் நிலையில் 2k கிட்ஸ் எனப்படும் 18 வயது இளைஞர்கள் திருமணம் செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. அது என்னமோ தெரியவில்லை அவர்கள் தான் ட்ரெண்டும் ஆகின்றனர்.

அப்படி நடக்கும் திருமண நிகழ்வுகள் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பையும், சில நேரங்களில் சிரிப்பையும், சோகத்தையும், சஸ்பென்ஸ் என கலந்து கட்டி உருவாக்குவது வழக்கம் தான். அப்படி ஒரு வீடியோதான் சில நாட்களாக இணையத்தில் உலவியது.

இந்தியாவில் கோர்ட்டில் வழக்குகள்.. தன்பாலின திருமணம்: எந்த நாடுகளில் எல்லாம் அனுமதி உள்ளது தெரியுமா? இந்தியாவில் கோர்ட்டில் வழக்குகள்.. தன்பாலின திருமணம்: எந்த நாடுகளில் எல்லாம் அனுமதி உள்ளது தெரியுமா?

மகளுடன் திருமணம்

மகளுடன் திருமணம்

சுமார் 60 வயது மதிக்கத்தக்க வயதான முதியவர் ஒருவர் தனது மகளை திருமணம் செய்து கொண்டார் என்ற வீடியோ தான் அது. கடவுள் பிரம்மாவை பின்பற்றி தனது மகளை அந்த 62 வயது முதியவர் திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று பரவியது. அதில் மாலையும் கழுத்துமாக இளம் பெண் ஒருவருடன் முதியவரும் இருந்தார். இதையடுத்து வழக்கம் போல் நெட்டிசன்கள் அந்த வீடியோவை இணையத்தில் பரவ விட 90' கிட்ஸ்களை பலரும் கலாய்க்க தொடங்கினர்.

ஷாக்கான நெட்டிசன்கள்

ஷாக்கான நெட்டிசன்கள்

மேலும் இது தொடர்பாக வடநாட்டு ஊடகங்கள் பலவும் அடுத்தடுத்து செய்திகள் வெளியிட்டன. ஒரே நாளில் ஒபாமா போல இந்த வீடியோ ஒரே நாளில் இந்தியா முழுவதும் வேகமாக பரவியது. ட்ரோல் என்ற ட்விட்டர் பக்கத்தில் தான் கடந்த மாதம் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்ட நிலையில் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது தான் அந்த வீடியோவில் உண்மையான காரணம் என்ன என்பது குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது.

வீடியோ உண்மையா?

வீடியோ உண்மையா?

உண்மையில் அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என்பதுதான் உண்மையிலும் உண்மை. இது இன்ஸ்டாகிராமில் லைக் வாங்குவதற்காக செட்டப் செல்லப்பா வகையிலான வீடியோ என்பதும் தற்போது தெரிய வந்திருக்கிறது. கடந்த 25ஆம் தேதி இந்த வீடியோ பதிவிடப்பட்ட நிலையில் உண்மையில் டெக்பரேஷ் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் முதன் முதலில் இந்த வீடியோவானது பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இளம் பெண்ணை முதியவர் திருமணம் செய்தது போன்ற வீடியோ மட்டுமல்லாமல் இரண்டு பெண்கள் ஒரு ஆணை திருமணம் செய்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு வீடியோக்கள் இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டிருக்கிறது.

உண்மை என்ன?

உண்மை என்ன?

இப்படி வித்தியாசமான திருமண வீடியோக்களை பதிவிட்டால் அதிக லைக் கிடைக்கும் என்பதற்காக அந்த பக்கத்தின் அட்மின் இப்படி சேட்டை செய்திருக்கிறார். மேலும் முதியவரை திருமணம் செய்ததாக வீடியோவில் இருந்த பெண் ஏற்கனவே ஒரு ஆணை திருமணம் செய்தது போல இன்னொரு வீடியோவும் பதிவிடப்பட்டிருக்கிறது. இதை அடுத்து வீடியோக்களை திடீரென ட்ரண்டாகி லைக்ஸ்களுக்காக திட்டமிட்டு நாடகம் போல எடுக்கப்படும் வீடியோ தான் என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இதை அடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

English summary
For the past few days, a video of a 60-year-old man marrying his own daughter has gone viral on the internet and social media. Netizens were shocked by this, but later it came to light that it was a scripted video.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X