பத்திரப்பதிவு துறை சரவெடி.. நில அளவை பிரிவு, வழிகாட்டி மதிப்பு.. இப்படியொரு பிளான் இருக்கா? பலே பலே
சென்னை: பத்திரப்பதிவு துறையில் பல்வேறு அதிரடிகளை தமிழக அரசுசெய்து வரும்நிலையில், புதிய தகவல் ஒன்று வட்டமடித்து வருகிறது.
கடந்த 2022 - 23 ஆம் ஆண்டு, நிதியாண்டில் பத்திரப்பதிவின் மூலம், கிட்டத்தட்ட 17,296 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டது. பிறகு 2023 - 24 நிதியாண்டில், 20,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அந்தவகையில், இந்த 2024ம் வருடமும், ரூ.25,000 கோடி வருவாய் இலக்கினை நிர்ணயித்திருக்கிறது. இந்த இலக்கினை எட்டுவதற்காக பல்வேறு அதிரடி அறிவிப்புகளையும், வசதிகளையும் பதிவுத்துறை பொதுமக்களுக்காக செய்து தந்து வருகிறது.
அதிக விற்பனை: சுபமுகூர்த்த தினங்களில் சார்பதிவாளர் அலுவலகத்தில் கூடுதல் டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு வருவதிலும் நல்ல பலன் கிடைத்து வருகிறதாம். கடந்த பிப்ரவரி இறுதி வரையிலான நிலவரப்படி, 18,000 கோடி ரூபாயை தாண்டி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. எனினும், தேர்தல் நடவடிக்கைகள் சூடுபிடித்திருந்ததால், பதிவுக்கு வரும் பத்திரங்களின் எண்ணிக்கையில் மார்ச் மாதம் சற்று சரிவு ஏற்பட்டுவிட்டதாக காரணம் கூறப்பட்டது.
ஆனால், அடுத்தடுத்த சில நாட்களிலேயே மீண்டும் பதிவுத்துறை இலக்கினை எட்டும் நோக்கில் தீவிரமாகி வருகிறது.. இப்படிப்பட்ட சூழலில், இன்னொரு தகவலும் வட்டமடித்து வருகிறது. அந்தவகையில், பதிவுத்துறையை வணிக வரி துறையிலிருந்து பிரித்து, தனி செயலர் தலைமையில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதிதாக கோரிக்கை தற்போது எழுந்துள்ளதாம்..
பத்திரங்கள்: அதாவது நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, சொத்து பத்திரங்களை பதிவு செய்வதற்காக 582 சார் - பதிவாளர் அலுவலகங்களும், இவைகளை நிர்ணயிக்க 54 மாவட்ட பதிவாளர் அலுவலகங்கள், 10 மண்டல அலுவலகங்களும் உள்ளன... எனவே, பத்திரப்பதிவு துறை பணிகள் பெரும்பாலும், வருவாய் துறை பணிகளுடன் இணைந்து போகும் வகையில் உள்ளதுடன், சொத்து விற்பனை பத்திரங்கள் பதிவு செய்யும் நிலையில், பட்டா உள்ளிட்ட விஷயங்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கிறது..
ஆனால், வணிக வரித்துறை என்பது விற்பனை வரி மற்றும் சரக்கு சேவை வரியான ஜிஎஸ்டி ஆகியவற்றை கவனித்து வரும் துறையாகும்.. வணிகவரி துறைக்கும், பதிவுத்துறைக்கும் களநிலையில் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்றாலும், இந்த 2 துறைகளின் பணிகள் விஷயத்தில், ஒரே செயலரே முடிவுகளை எடுத்து வருகிறார்.
புதிய கோரிக்கை: எனவே, பதிவுத்துறையை வணிக வரி துறையிலிருந்து பிரித்து, தனி செயலர் தலைமையில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை புதிதாக எழுந்துள்ளதாம்.
வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் உள்ளிட்ட விஷயங்களில், துணை கலெக்டர் நிலையில், வருவாய் துறையினரால் தான் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பதால், இதுபோன்ற ஒருங்கிணைப்பு பணிகள் அவசியமாகின்றன என்றும் வருவாய் துறையில், நில அளவை பிரிவு தனித்தன்மை இழக்காமல் இணைந்திருப்பதை போல, பதிவுத்துறையும் இணைக்கப்பட்டால், பல்வேறு விஷயங்களில் விரைவாக முடிவுகள் எடுக்கலாம் என்றும் வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டு வருகின்றனவாம்.
எனினும், இதுகுறித்து தமிழக அரசு என்ன முடிவெடுக்க போகிறது என்று தெரியவில்லை... பதிவுத்துறைக்கு தனி செயலரை நியமிக்குமா? அல்லது வருவாய் துறை செயலரின் கீழ் இணைக்குமா? என்று தெரியவில்லை..
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications