ஐபிஎல் நடுவர்களுக்கு இவ்வளவு சம்பளமா? கேப்டனை விட அதிக சம்பளம்.. Umpire ஆவது எப்படி?
சென்னை: வீரர்கள் மட்டுமின்றி நடுவர்களும் (umpire) பணம் கொழிக்கும்.. சர்வதேச மேட்சில் மட்டுமின்றி ஐபிஎல் மேட்ச்களிலும் பணம் கொழிக்கும். நடுவர்களும் சம்பாதிப்பாங்க.. நடுவர்களை வைச்சு பிசிசிஐயும் சம்பாதிக்கும்.
ஐபிஎல் போட்டிகளில் இரண்டு வகை நடுவர்கள் உள்ளனர்.ஒன்று எலைட் பேனல் அம்பயர். இரண்டாவது டெவலப்மெண்ட் அம்பயர். முக்கிய போட்டிகளில் எலைட் அம்பயர்கள் மட்டுமே களத்தில் நடுவர்களாக இருப்பார்கள்.

முக்கிய போட்டிகளில் எலைட் பேனல் அம்பயர்களும், சாதாரண போட்டிகளில் டெவலப்மெண்ட் அம்பயர்களும் களத்தில் இறக்கப்படுவார்கள்.
எலைட் பேனல் அம்பயர்களுக்கு ஒரு ஐபிஎல் போட்டியில் எவ்வளவு சம்பளம் தெரியுமா? முன்பு ஒரு போட்டிக்கு 175000 சம்பளம் தரப்பட்டது. இப்போது 198000 ரூபாய் ஒருமேட்ச்க்கு சம்பளமாக தரப்படுகிறது. தினசரி ஸ்டைஃபண்டாக 12500 தரப்படும். லாட்ஜ்ஜில் தங்க மற்றும் போக்குவரத்துக்கும் தனியாக பணம் தரப்படும்.
எல்லா ஐபிஎல் போட்டிகளிலும் எலைட் அம்பயர்கள் இருந்தால், ஒரு சீசனில் எலைட் umpireகள் ரூ.40 லட்சம் சம்பாதிக்கலாம்.

டெவலப்மெண்ட் நடுவர்கள் சம்பளம்: டெவலப்மெண்ட் அம்பயர்களுக்கு ஒரு நாள் தினசரி ஊதியம் எலைட் பேனல் அம்பயர்களுக்கு கிடைக்கும் அளவிற்கு இருக்காது. ஆனால் டெவலப்மெண்ட் அம்பயர்களுக்கு ஒரு நாளைக்கு 59000 ரூபாய் கிடைக்கும். முன்பு இந்த தொகை 40000 ரூபாய் ஆக இருந்தது. இவர்களுக்கு தினசரி ஸ்டைஃபண்ட் கிடைக்காது. எலைட் அம்பயர்களிடம் பணியை கற்க வேண்டும். சர்ச்கைக்குரிய விவகாரத்தில் எப்படி சமயோஜிதமாக செயல்படுகிறார்கள், முடிவுகளை எப்படி எடுக்கிறார்கள். போட்டிகளில் எப்படி கையாள்கிறார்கள் என்பதை பொறுத்தே பதவி உயர்வு கிடைக்கும். அதாவது எலைட் பேனல் நடுவர்கள் எழுத்து பூர்வமாக சிறப்பாக செயல்படுகிறார் என்று ஒரு டெவலப்மெண்ட் நடுவரை பாராட்டி கடிதம் எழுதி, பதவி உயர்வு தருமாறு சிபாரிசு செய்தால் தான் டெவலப்மெண்ட umpireஆக மாற முடியும். எலைட் பேனில் பதவி உயர்வு கிடைத்தால் தான் அவர்களுக்கு சிறந்த ஊதியம் கிடைக்கும்.
ஸ்பான்சர்கள் ஊதியம்: போட்டியில் பங்கேற்பதை தாண்டி, அம்பயர்களுக்கு கூடுதல் வருமானம் ஸ்பான்சர் நிறுவனங்களிடம் இருந்து கிடைக்கும். பேடிஎம் தான் இப்போது அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக உள்ளது. இந்நிறுவனம் சீசன் முடிந்ததும் 733000 ரூபாய்யை ஒவ்வொரு அம்பயர்களுக்கும தருகிறது. முன்பு ஒவ்வொரு போட்டி முடிந்ததும் 5000 ரூபாய் ஸ்பான்சர் நிறுவனங்களால் ஒவ்வொரு அம்பயர்களுக்கும் தரப்பட்டது. இப்போது சீசன்களுக்கு என்று ஸ்பான்சர்கள் உருவாகி உள்ளது.
எவ்வளவு சம்பளம்: இதன் காரணாக ஒரு எலைட் umpireஒரு சீசனில் 47 லட்சம் முதல் 50 லட்சம் வரை சம்பாதிக்க முடியும். இதேபோல் எல்லா நடுவர்களுக்கும் கணக்கு போட்டு பார்த்தால் எத்தனை கோடி அம்பயர்கள் சம்பாதிப்பார்கள் என்பதை பார்த்துக் கொள்ளுங்கள்.
umpire ஆவது எப்படி: எல்லாம் சரி, umpire ஆவது எப்படி? ஒருumpireஆவது அவ்வளவு எளிதல்ல. கல்வி தகுதி தேவையில்லை. ஆனால் 42 கிரிக்கெட் விதிகள் தெரிந்திருக்க வேண்டும். நல்ல உடல் தகுதி இருக்க வேண்டும். சிக்கலான நேரங்களில் சரியாக முடிவெடுக்கும் திறன் இருக்க வேண்டும். ஆங்கில அறிவு இருக்க வேண்டும்.
நடுவர் ஆவதற்கு என்ன செய்ய வேண்டும்.. மாநில கிரிக்கெட் சங்கத்தை அணுக வேண்டும். umpire சர்டிஃபிகேட் தேர்வில் ஜெயிக்க வேண்டும். மாநில கிரிக்கெட் சங்கம் ஒதுக்கும் போட்டிகளில் நடுவராக வேண்டும். மாநில கிரிக்கெட் சங்கத்திடம் நம்பிக்கை பெற்றால் தான் பிசிசிஐ umpireஆக மாற வேண்டும். லெவல் ஒன்று பிசிசிஐ தேர்வில் வெல்ல வேண்டும். அதன்பிறகு பிசிசிஐ வைக்கும் லெவல் 2 தேர்விலும் ஜெயிக்க வேண்டும். அதன்பிறகு ஐசிசி என்ன செய்யும் என்றால் உங்களை நம்பி இந்தியாவில் நடக்கும் போட்டிகளில் நடுவராக்கும். அதன்பிறகே சர்வதேச போட்டிகளில் உங்களை umpireஆக அறிவிக்கும்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications