“சினிமாபட்டி”ஆகும் தென் தமிழ்நாடு.. காப்பாற்றுமா அரசு? பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் மெகா திட்டம்
சென்னை: அனைத்து வளர்ச்சித் திட்டங்களும் சென்னை மற்றும் கோவை சுற்றுவட்டார மாவட்டங்களுக்கே கொண்டு செல்லப்படுவதால் தென் மாவட்ட மக்கள் அகதிகள்போல் குடிபெயர்வதாக பலர் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் இன்று வெளியாகும் பட்ஜெட்டில் தென் மாவட்டங்களுக்கான வேலைவாய்ப்பு திட்டங்கள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.
சென்னையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் பேரிழப்புகள் ஏற்பட்டபோது பெரிய அளவில் பேசப்பட்ட விசயம், பெரும்பாலான நிறுவனங்களை சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களிலேயே அமைப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றிதான். அதேபோன்று தற்போது கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலில் தொழில் நிறுவனங்கள் அதிகளவில் முளைத்து நிற்கின்றன. ஆனால், சென்னை, கோவையை ஒப்பிடுகையில் தென்மாவட்டங்களில் சொல்லிக்கொள்ளும்படியாக மென்பொருள் நிறுவனங்களோ, தொழிற்சாலைகளோ இல்லை.

தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் சில தொழிற்சாலைகள் உள்ளன. இது தவிர்த்து கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிய தொழில் வாய்ப்புகள் இன்று வரை ஏற்படுத்தப்படவில்லை. உள்ளூர் தொழில்களை தொடர்ந்து வெளிநாட்டு நிறுவனங்கள், பெரும் நிறுவனங்கள் இந்த மாவட்டங்களில் சில தொழிற்சாலைகளை மட்டுமே நிறுவ முயல்கின்றன.
படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் கணினி சார் தொழில் நிறுவனங்கள், மென் பொருள் நிறுவனங்கள் மிகமிக சொற்ப எண்ணிக்கையிலேயே இயங்கி வருகின்றன. தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளில் இருந்தெல்லாம் பொறியாளர்களும், பட்டதாரிகளும் உருவாகி வரும் நிலையில் அனைவரும் சென்னை, கோவை, பெங்களூருவை மட்டுமே வேலைக்காக நாடி செல்லும் நிலை உள்ளது. இதன் காரணமாக பெரு நகரங்களிலும் மக்கள் நெரிசல் மிகுதியால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன.
மறுபக்கம் தமிழ்படத்தில் வரும் 'சினிமா பட்டி' கிராமத்தைபோல் பல தென்மாவட்ட கிராமங்கள் மக்கள் இன்று காலியாகி வருகின்றன. பொங்கல், தீபாவளி, ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ், சுப துக்க நிகழ்ச்சிகளுக்காக மட்டுமே சென்னையிலிருந்தும், கோவையிலிருந்தும், தென் மாவட்டங்களில் உள்ள சொந்த ஊர்களுக்கு வந்து சில நாட்கள் தங்கிவிட்டு இதுதான் கதியென கண்ணீரோடு அகதிகளை போல மக்கள் மீண்டும் புறப்பட்டு செல்கிறார்கள்.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்புபடி கொண்ட தமிழ்நாட்டில் ஏறத்தாழ இரண்டு கோடி மக்கள் தென் மாவட்டங்களில் வாழ்கின்றனர். ஆனால், இவர்களுக்கான வேலை எல்லாம் வட மாவட்டங்களிலும், மேற்கு மாவட்டங்களிலும் உள்ளன. தென் மாவட்ட மக்களை சற்று ஆறுதல் அடைய வைத்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திட்டமும் செங்கலுக்கு மேல் நகரவில்லை. தூத்துக்குடி, நெல்லை, குமரியாவது பரவாயில்லை. மதுரை, தேனியிலும் சில வாய்ப்புகள் உள்ளன. ஆனால், ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்கள் தொழில், விவசாயம், குடிநீர் என அனைத்திலும் பின் தங்கி இருக்கின்றன.
இப்படி தென் மாவட்ட மக்களின் ஏக்கத்தை செல்லி தீர்க்க முடியாது. கடந்த பட்ஜெட்டை வெளியிட்ட முன்னாள் நிதியமைச்சர் பிடிஆரும் தென்மாவட்டமான மதுரைகாரர்தான். இம்முறை பட்ஜெட்டை வெளியிடும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவும் தென்மாவட்டமான விருதுநகரின் திருச்சுழி தொகுதியை சேர்ந்தவர்தான். எனவே இன்று தமிழ்நாடு சட்டசபையில் அறிவிக்கப்போகும் பட்ஜெட்டில் தென் மாவட்டங்களுக்கான தொழில் வாய்ப்பு திட்டங்கள் நிறைவேற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications