செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் தான் இருக்கிறாரா? எச்.ராஜாவுக்கு வந்த சந்தேகம்
சென்னை: திமுகவின் ஆட்டம் இன்னமும் 48 மணி நேரம்தான். செந்தில் பாலாஜி காவிரி மருத்துவமனையில் தான் உள்ளாரா என்கின்ற பல சந்தேகங்கள் தீர்க்கப்படும் நேரம் நெருங்கி விட்டது என்று எச்.ராஜா தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது செந்தில் பாலாஜி, வேலை வழங்குவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக அமலாக்கத்துறை தனியாக ஒரு வழக்கை பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் கடந்த மாதம் 14 ஆம் தேதி செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது.

அப்போது செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டார். செந்தில் பாலாஜிக்கு இருதயத்தில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து நீதிமன்ற அனுமதி பெற்று சென்னை காவேரி மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜி மாற்றப்பட்டார்.
அவருக்கு அங்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. நீதிமன்றக் காவலில் இருக்கும் செந்தில் பாலாஜி, மருத்துவ சிகிச்சை காரணமாக தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். அமலாக்கத்துறைக்கு காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கிடைத்தும் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரிக்கவில்லை.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு இருக்கும் செந்தில் பாலாஜியை விடுதலை செய்ய வேண்டும் என்று அவரது மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையும் ஒருபக்கம நடைபெற்று வருகிறது. இதனிடையே, பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா தனது ட்விட்டர் பதிவில், செந்தில் பாலாஜி மருத்துவமனையில் தான் இருக்கிறாரா? என சந்தேகம் கிளப்பியிருக்கிறார்.
இது தொடர்பாக எச்.ராஜா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- திமுகவின் ஆட்டம் இன்னமும் 48 மணி நேரம்தான். செந்தில் பாலாஜி இருக்கிறாரா? இருந்தால் காவிரி மருத்துவமனையில் தான் உள்ளாரா? என்கின்ற பல சந்தேகங்கள் தீர்க்கப்படும் நேரம் நெருங்கி விட்டது. தமிழக அரசின் கண்ணாமூச்சி ஆட்டம் முடிவுக்கு வரும். ஆட்டம் முடிவிற்கு வருமா அல்லது ஆட்சியேவா?
இந்த ட்வீட் பார்த்து பல உ பிஸ் எக்காளமிட்டு இவர்கள் வீரத்தை காகிதத்தில் காட்டுகின்றனர் இந்த அட்டை கத்திகள். 1975-77 நெருக்கடி நிலை சமயத்தில் கரைவேட்டி கட்ட தைரியமற்ற கோழைகள். 1976 ஜனவரி 30ல் இன்றைய முதல்வரின் தந்தை அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்ட போது தி்முகவினரால் என்ன செய்ய முடிந்தது" என்று பதிவிட்டுள்ளார்.
-
செந்தில் பாலாஜி மீண்டும் கைதா? ஆளுநரிடம் ‘கிரீன் சிக்னல்’ கேட்டு ஃபைல்களை அனுப்பிய தமிழக அரசு! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications