அரசியலுக்கு வருகிறார் நடிகை திரிஷா? தேசியக் கட்சியுடன் பேச்சுவார்த்தையாம் - பாஜகவா.. காங்கிரஸா?
சென்னை: பிரபல தமிழ் திரைப்பட நடிகை திரிஷா அரசியலுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி கோலிவுட் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறி இருக்கிறது.
2000 த்தின் தொடக்கத்திலிருந்தே தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளாக விளங்கி வருபவர்கள் நயன்தாராவும் திரிஷாவும்.
20 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் கோலோச்சி வரும் இருவரும் தற்போது நாயகிகளை மையமாக கொண்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றனர்.

நயன்தாரா
இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி, சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படம் வெளியானதை தொடர்ந்து தான் காதலித்து வந்த இயக்குநர் விக்னேஷ் சிவனை அண்மையில் திருமணம் செய்துகொண்டார். தொடர்ந்து அவர் திரைப்படங்களில் நடிக்கவும் உள்ளார்.

திரிஷா
அதேபோல் மணிரத்னம் இயக்கத்தில் திரிஷா நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. பொன்னியின் செல்வம் 2 ஆம் பாகத்திலும் அவர் நடித்து முடித்திருக்கிறார். சதுரங்க வேட்டை 2, ராம் உள்ளிட்ட படங்களை அவர் தன்வசம் வைத்திருக்கிறார். மேலும் பிருந்தா என்ற இணைய தொடரிலும் திரிஷா நடித்து வருகிறார்.

அரசியலுக்கு வரும் திரிஷா
இந்த நிலையில் மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேசு அந்தணன், நடிகை திரிஷா விரைவில் அரசியலுக்கு வருகைதர இருப்பதாக கூறியுள்ளார். "மிகப்பெரிய தேசிய கட்சி ஒன்றில் நடிகை திரிஷா இணைய இருக்கிறார். அவரது பார்வை காங்கிரஸ் மீது உள்ளது. தமிழின் முன்னணி நடிகையாக இருந்த குஷ்பு காங்கிரஸிலிருந்து பாஜகவுக்கு தாவிய நிலையில், திரிஷாவின் வரவு கட்சிக்கு புத்துணர்ச்சியாக இருக்கும்.

பேச்சுவார்த்தை
குஷ்புவின் இடத்தை திரிஷா நிரப்புவார் என்று நம்புகிறேன். இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்." என்றார். நடிகை திரிஷாவை பொறுத்தவரை அரசியல், சமூகம் சார்ந்த விசயங்களில் அதிகம் கருத்துக்களை தெரிவிக்காதவர். அதே நேரம் ஜல்லிக்கட்டுக்கு தடைகோரிய பீட்டா அமைப்பின் ஆதரவாளராக இருப்பதால் அவர் போராட்ட நேரத்தில் மக்களின் விமர்சனங்களுக்கு இலக்கானது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications