அதிமுகவுடன் தவெக கூட்டணி என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது - விஜயின் தவெக விளக்கம்
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் தவெக கூட்டணி என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று நடிகர் விஜயின் தவெக விளக்கம் அளித்துள்ளது.
முன்னதாக துணை முதல்வர் பதவி மற்றும் 80 சீட்டுகளை விஜய் அதிமுகவிடம் கேட்டு பேசி வருகிறாராம். தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் திமுக, பாஜக, நாம் தமிழரை விமர்சனம் செய்த விஜய், அதிமுக, விசிக, காங்கிரஸ், பாமகவை விமர்சனம் செய்யவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் அதிமுகவுடன் கூட்டணி வைக்க தவெக சார்பாக விஜய் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்று செய்திகள் வந்தன. 80 : 154 பார்முலாபடி அதிமுகவிற்கு 154 இடங்களை விட்டுத்தர விஜய் தயார் என்று செய்திகள் வந்தன. இப்படிப்பட்ட நிலையில்தான்2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் தவெக கூட்டணி என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று நடிகர் விஜயின் தவெக விளக்கம் அளித்துள்ளது.

ஏற்கனவே அவர் பாமகவுடன் பேசுவதாக செய்திகள் வந்தன. பாமக நிறுவனர் ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் ‛பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே'' என்று திடீரென்று பதிவிட்டுள்ளார். இதனால் அவர் தமிழக வெற்றிக் கழகம் கட்சியுடன் கூட்டணி வைக்க போகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த கேள்விக்கு பின் வேறு ஒரு முக்கியமான நபரும் காரணமாக இருக்கிறார். அவர்.. ஜான் ஆரோக்கியராஜ். தற்போது விஜயின் அரசியல் முடிவுகளுக்கு பின்னனியில் இருப்பது ஜான் ஆரோக்கியசாமி என்ற மாஸ்டர்மைண்ட். தமிழக அரசியலில் மீண்டும்.. நீண்ட நாட்களுக்கு பின் ஆக்டிவ் ஆகி இருக்கும் அரசியல் ஆலோசகர்தான் ஜான் ஆரோக்கியசாமி. திருச்சியை சேர்ந்த ஜான் ஆரோக்கியசாமி ஏற்கனவே பாமகவிற்கு தேர்தல் பணிகளை செய்துள்ளார்.
ஜான் ஆரோக்கியசாமி பாமகவின் பிரபலமான.. மாற்றம் முன்னேற்றம் அன்புமணி பிரச்சாரத்தை முன்னெடுத்தார். பாமக அந்த தேர்தலில் சறுக்கினாலும்.. ஜான் ஆரோக்கியசாமி முன்னெடுத்த அந்த பிரச்சாரம் இப்போதும் பிரபலம். வெளிநாடுகளில் பல நிறுவனங்களில் வேலை பார்த்த ஜான் ஆரோக்கியசாமி திருச்சிக்காரர். அவர் இப்போதும் பாமகவிற்கு நெருக்கம். பாமகவுடன் இவர் மிகவும் நெருக்கமாக நட்புடன் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகர் விஜய்க்கு பின் ஆலோசகராக இருப்பது ஜான் ஆரோக்கியசாமிதான் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு சமீபத்தில் விக்கிரவாண்டியில் நடந்தது. இந்த மாநாட்டில் அதன் தலைவர் விஜய் பேசிய விஷயங்கள் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளன. இதை எல்லாம் செதுக்கியது அவர்தான் என்று கூறப்படுகிறது.
அவருக்கு நீண்ட பயிற்சி தந்த பின்பே.. மேடை ஏறி உள்ளார். அவர் மேடையில் எப்படி செயல்பட வேண்டும்.. என்ன பேச வேண்டும்.. எப்படி நடந்து கொள்ள வேண்டும்.. மீட்டிங்கை எப்படி நடத்த வேண்டும்.. அதற்கு ஆட்கள் எப்படி நியமிக்கப்பட வேண்டும்.. பொறுப்புகளை எப்படி பிரித்து கொடுக்க வேண்டும் என்று முடிவுகள் முறையாக தீட்டப்பட்டது.
அரசியல்வாதி போல பேசாமல்.. நடிகர் போலவும் பேசாமல்.. வித்தியாசமான முறையில்.. மேடை நடுக்கம் இன்றி.. சரளமாக விஜய் பேசியது பெரிய அளவில் கவனம் பெற்றது. முக்கியமாக விஜய் திராவிடம், பெரியார், மதவாதம் பற்றியெல்லாம் பேசியது பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. அவரின் பேச்சு எப்படி இருந்ததோ இல்லையோ.. அவரின் பேச்சுக்கு பின் மிகப்பெரிய பயிற்சி இருந்தது என்பது மட்டும் உறுதி. இதை எல்லாம் செய்தது ஜான்தான்.
திராவிட கட்சிகளுக்கு மாற்றமாக பாமகவை அப்போது கொண்டு வந்த ஜான் ஆரோக்கியசாமி அதை பெரிய அளவில் டிரெண்ட் செய்தார். வடக்கிலும் கூட இவர் தேர்தல் பணிகளை செய்துள்ளார். மகாராஷ்டிராவில் தேர்தல் பணிகளை செய்த ஜான் ஆரோக்கியசாமி.. தேசியவாத காங்கிரஸ் அங்கே கடந்த தேர்தலில் அதிக இடங்களை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.
தற்போது ஜான் ஆரோக்கியசாமிதான் விஜய்க்கு பின் இருக்கும் அந்த மாஸ்டர்மைண்ட். கட்சி பணிகளை புஸ்ஸி ஆனந்த் கவனித்தாலும்.. வியூக வகுப்புகளை கவனிப்பது என்னவோ ஜான் ஆரோக்கியசாமிதான் என்கிறார்கள். இந்த ஜான் ஆரோக்கியசாமிதான் பாமக - தவெக இடையே மெகா கூட்டணி வைக்க காய்களை நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications