சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரேஷனுக்கு ரூ.1000? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்.. உதயநிதி வெளியிடும் 2 மேஜர் அறிவிப்புகள் இதுவா?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது. பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு தொடர்பாக இன்று ஆலோசனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு அமைச்சரவையில் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆனது மட்டுமின்றி பல சீனியர் அமைச்சர்களின் துறைகளும் மாற்றப்பட்டு உள்ளன. ஐ பெரியசாமி, ராஜகண்ணப்பன், முத்துசாமி, பெரியகருப்பன், சேகர் பாபு, ராமசந்திரன், காந்தி, பிடிஆர், மெய்யநாதன், மதிவேந்தன் ஆகியோரின் இலாக்காக்கள் மாற்றப்பட்டு உள்ளன.

முதல்வர் ஸ்டாலினின் ஒரு இலாக்காவையும் சேர்த்து மொத்தமாக 11 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்பட்டு உள்ளன. உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன், விளையாட்டுத்துறை வழங்கப்பட்டு உள்ளது.

என்னால் எனது தங்கையும் படிக்க முடியாமல் போனது! சுவாரஸ்யமான பிளாஷ்பேக் கூறிய ஸ்டாலின்! என்னால் எனது தங்கையும் படிக்க முடியாமல் போனது! சுவாரஸ்யமான பிளாஷ்பேக் கூறிய ஸ்டாலின்!

அமைச்சரவை கூட்டம்

அமைச்சரவை கூட்டம்

தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் 39வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் 14ம் தேதி பதவி ஏற்றுக்கொண்டார். அதேபோல் சிறப்பு திட்ட செயலாக்கம் துறை வழங்கப்பட்டு உள்ளது. பல்வேறு துறைகளில் தமிழ்நாடு அரசு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. துறை ரீதியான அறிவிப்பு இல்லாமல், ஒவ்வொரு துறையிலும் சில சிறப்பு திட்டங்கள் கொண்டு வரப்படும். முதல்வர்தான் இந்த சிறப்பு திட்டங்களை அறிவித்து வந்தார். தற்போது உதயநிதி ஸ்டாலின் கைக்கு இந்த துறை சென்றுள்ளது. இந்த துறையை வைத்து இருக்கும் அமைச்சர்.. எந்த துறைக்கு கீழ் வேண்டுமானாலும் நலத்திட்டங்களை அறிவிக்க முடியும்.

ஆலோசனை

ஆலோசனை

இந்த நிலையில் இன்று தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் பற்றி ஆலோசனை செய்யப்பட உள்ளது. முதல் விஷயம்.. அமைச்சர்களிடம் அவர்களின் புதிய துறை குறித்து ஆலோசனை செய்யப்படும். அவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ள புதிய இலாக்கா குறித்து ஆலோசனை செய்யப்படும். கூடுதல் இலாக்கா வழங்கப்பட்டுள்ள அமைச்சர்களிடம் அதை பற்றி பேசப்படும். அதேபோல் துறை மாற்றப்பட்ட அமைச்சர்களிடம் அது குறித்து விளக்கம் அளிக்கப்படும். அவர்கள் செய்ய வேண்டிய பணிகள் என்னென்ன என்பது தொடர்பாக இவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் நாளை பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துறை மாற்றப்பட்டது திருப்தியா என்றும் முதல்வர் ஸ்டாலின் கேட்க வாய்ப்பு உள்ளது.

அறிவிப்பு

அறிவிப்பு

இந்த நிலையில் இன்று பொங்கல் சிறப்பு பரிசு பொருட்கள் பற்றி ஆலோசனை செய்யப்படும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் பரிசு பொருட்கள் தொடர்பான அறிவிப்பை இந்த முறை உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வெளியிடாமல் பெரும்பாலும் சிறப்பு திட்டங்கள் துறை அமைச்சர் என்ற பெயரில் உதயநிதி ஸ்டாலின் வெளியிட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. பொங்கலுக்கு கடந்த வருடம் வழங்கப்பட்டது போல சிறப்பு பரிசு பொருட்கள் வழங்கப்படும். இந்த அறிவிப்பை உதயநிதி ஸ்டாலின் வெளியிட வாய்ப்புகள் உள்ளன

 1000 ரூபாய்

1000 ரூபாய்

இது போக 1000 ரூபாய் வழங்கப்படும் என்ற தகவலும் பரவி வருகிறது. ஆனால் தமிழ்நாடு பொருளாதாரம் இப்போதுதான் மீண்டு வருவதால் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட வாய்ப்புகள் குறைவு என்றே கூறப்படுகிறது. இது போக உதயநிதி ஸ்டாலின் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படும். அமைச்சராக உதயநிதி பதவி ஏற்றுள்ள நிலையில், அவர் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட வாய்ப்புகள் உள்ளன. இதில் உதயநிதியிடம் சிறப்புத்திட்ட செயலாக்கம் துறை வழங்கப்பட்டு உள்ளது. மற்ற துறைகளுடன் இந்த துறை அமைச்சர் (உதயநிதி) இணைந்து செயல்பட வேண்டும். இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் மற்ற துறை அமைச்சர்களுடன் எப்படி இணைந்து செயல்படுவார் என்பது தொடர்பாகவும் நாளை ஆலோசனை செய்யப்படுகிறது.

சிறப்பு பரிசு

சிறப்பு பரிசு

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி மாதம் கொண்டாடப்பட உள்ளது. பொங்கலை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பாக பொங்கல் சிறப்பு தொகுப்பு வருடா வருடம் வழங்கப்பட்டு வருகிறது.அரிசி குடும்ப அட்டைதார்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் இந்த பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதில் கரும்பு உட்பட மொத்தம் 21பொருட்கள் அடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. ஏலக்காய், பாசிப்பருப்பு, மிளகு, புளி, நெய், வெல்லம், முந்திரி, திராட்சை, கடுகு, சீரகம், கடலைப் பருப்பு, பச்சரிசி, முழு கரும்பு, ரவை, கோதுமை மாவு, உளுத்தம் பருப்பு, உப்பு உள்ளிட்ட பொருட்கள் இந்த தொகுப்பில் வழங்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக இன்று ஆலோசனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

English summary
Is Udhayanidhi Stalin going to make a major announcement after today Tamil Nadu cabinet meeting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X