விஜய்க்கு இப்போதான் இது தெரியுதா? ஓபிஎஸ் கொடுத்த ரியாக்ஷன்!
சென்னை: "விஜய்க்கு இப்போதுதான் தெரிகிறதா? திமுக ஆட்சிக்கு வந்த ஓராண்டிலேயே தெரிந்துவிட்டது; தேர்தலுக்கு ஒரு பேச்சு; பிறகு ஒரு பேச்சு என்பது திமுகவின் வாடிக்கை" என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து, நீட் தேர்வை ரத்து செய்வோம் என திமுக தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய நிலையில், ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நெருங்கும் நிலையில் இன்னும் நீட் தேர்வு தொடர்ந்து வருவது எதிர்க்கட்சிகளால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் திமுக அரசை விமர்சித்து இன்று பதிவிட்டார். விஜய் வெளியிட்ட பதிவில், "எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே நம் நாட்டிலே.... என்ற பாடல் வரிகள், தற்போதைய தமிழக ஆட்சியாளர்களுக்கு மிகப் பொருத்தமாக உள்ளன.
தேர்தலின்போது போலி வாக்குறுதிகள் அளித்து, மக்களை நம்பவைத்து ஏமாற்ற வேண்டும், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மீண்டும் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பது தான் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணமாக உள்ளது. இதற்குப் பல்வேறு சான்றுகள் உள்ளன. அதில் மிக முக்கியமானது, நீட் தேர்வு விவகாரம் சார்ந்தது. கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம், நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று பிரச்சாரம் செய்து, தமிழக மக்களை நம்ப வைத்தவர்கள், தற்போதைய ஆட்சியாளர்கள்.
ஆனால் தற்போது நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் ஒன்றிய அரசிற்குத் தான் உள்ளது. மாநில அரசால் ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்திருப்பது வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா? எந்தப் பொய்யையும் சொல்லி, தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று கனவு காணும் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம், இனி வரும் காலங்களில் ஈடேறப் போவதில்லை" எனத் தெரிவித்திருந்தார்.
தவெக தலைவர் விஜய்யின் இந்தப் பதிவு விவாதங்களைக் கிளப்பி விட்டுள்ளது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், "விஜய்க்கு இப்போதுதான் இது தெரிகிறதா? திமுக ஆட்சிக்கு வந்த ஓராண்டிலேயே தெரிந்துவிட்டது. தேர்தலுக்கு ஒரு பேச்சு, பிறகு ஒரு பேச்சு என்பது திமுகவின் வாடிக்கை" என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
வெள்ளை அறிக்கை எப்போது வரும்.. நிதி அமைச்சர் மரிய வில்சன் அப்டேட் -
அரசு ஊழியர்களை பந்தாடும் விஜய்.. சென்னையில் நடப்பது என்ன? -
இது லிஸ்ட்லயே இல்லையே? பட்ஜெட்டுக்கு முன் முழு பயிர்க் கடன் தள்ளுபடி? விஜய் கையில் வேற லெவல் ப்ளான்! -
விஜய்யின் பெயரை கூட தவறாக சொன்ன கர்நாடகா அமைச்சர்.. இப்படி செய்வாருனு யாரும் எதிர்பார்க்கலை -
எம்ஜிஆர் பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு வெள்ளி வாள் வழங்கி தரிசனம் -
ஆபரேஷன் இரட்டை இலை.. மாவட்ட வாரியாக அதிமுக தொண்டர்களை இழுக்கும் தவெக.. பனையூர் வியூகம்! -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
இழுத்து பிடித்த எடப்பாடி பழனிசாமி.. விட்டு விலகும் நிர்வாகிகள்! மதுராந்தகத்தில் சம்பவம் செய்யும் தவெக! -
234 மாவட்ட செயலாளர்.. விஜய் எடுக்கும் புதிய வியூகம்.. நிர்வாகிகளுக்கு போன மெசேஜ்.. பின்னணி என்ன? -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
“கரண்ட்டே இல்ல.. விவசாயிகளை ஏமாற்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் விஜய்” - எடப்பாடி கடும் தாக்கு!












Click it and Unblock the Notifications