அவசரப்பட்ட அமெரிக்கா.. வல்லரசுகள் நல்லரசுகள் ஆகாவிடில் புல்லரசு ஆகிவிடும் பூமி - கவிஞர் வைரமுத்து
டெஹ்ரான்: இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே கடும் மோதல் நடைபெற்று வருகிறது. ஈரானில் உள்ள 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நேற்று அதிகாலையில் திடீரென தாக்குதலில் ஈடுபட்டது. இந்நிலையில், ஈரானின் அணுசக்தி தளங்களில் டொமாஹக் ஏவுகணைகள் வீசி அவசரப்பட்டுவிட்டது அமெரிக்கா. வல்லரசுகள் நல்லரசுகள் ஆகாவிடில் புல்லரசு ஆகிவிடும் பூமி என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே கடும் மோதல் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் கோரிக்கையை ஏற்று ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த மோதலுக்குள் அமெரிக்காவும் நுழைந்துள்ளதால் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது அமெரிக்கா நேற்று அதிகாலை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் இஸ்ரேல் நாட்டின் மூன்று அணுசக்தி நிலையங்கள், ராணுவ தளங்கள் அழிக்கப்பட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய மூன்று அணு அமைப்புகள் மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்தி முடிக்கப்பட்டது என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். இதனால் உலகப்போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், ஈரானின் அணுசக்தி தளங்களில் டொமாஹக் ஏவுகணைகள் வீசி அவசரப்பட்டுவிட்டது அமெரிக்கா. வல்லரசுகள் நல்லரசுகள் ஆகாவிடில் புல்லரசு ஆகிவிடும் பூமி என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
உலகின் தலையில்
மெல்லிய இழையில்
ஆடிக்கொண்டிருக்கிறது
அணுகுண்டு
"வக்கிர மனங்களால்
உக்கிரமாகுமோ யுத்தம்"
கலங்குகிறது உலகு
ஈரானின்
அணுசக்தித் தளங்களில்
டொமாஹக் ஏவுகணைகள்வீசி
அவசரப்பட்டுவிட்டது
அமெரிக்கா
வல்லரசுகள்
நல்லரசுகள் ஆகாவிடில்
புல்லரசு ஆகிவிடும்
பூமி
தான் கட்டமைத்த நாகரிகத்தைத்
தானே அழிப்பதன்றி
இதுவரை போர்கள்
என்ன செய்தன?
போரிடும் உலகத்தை
வேரொடு சாய்ப்போம்
அணுகுண்டு முட்டையிடும்
அலுமினியப் பறவைகள்
அதனதன் கூடுகளுக்குத்
திரும்பட்டும்
என்று தனது எக்ஸ் தள பக்கத்தில் கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார். கடும் மோதலுக்கு நடுவே, இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் இறங்கியுள்ளதால் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி ரஷிய அதிபர் புதினுடன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.
இதுதொடர்பாக இஸ்தான்புல்லில் நேற்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி செய்தியாளர்களிடம் கூறுகையில், இஸ்ரேல், அமெரிக்கா எங்களது நாட்டின் அணுசக்தி நிலையங்களைத் தாக்கி எல்லையை மீறிவிட்டனர். இது ஆபத்தான தாக்குதலாகும். அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக ஈரான் தங்களைப் பாதுகாக்கும். இன்று ரஷ்யா தலைநகரான மாஸ்கோவிற்கு செல்கிறேன். ரஷ்ய அதிபர் புதினை ஜூன் 23 ஆம் தேதி சந்தித்து இந்த தாக்குதல் தொடர்பாக தீவிரமான ஆலோசனை நடத்தப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
-
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications